அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி (3455)
1- இந்த ஹதீஸில் "ச யகூனு குலஃபாஅ" என்று வந்துள்ளது. இந்த வாசகமே ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தை ஒட்டிய காலம் என்பதை எடுத்து கூறுகிறது. அது எவ்வாறு என்று கேட்டால், இந்த வாசகத்தில் வரக்கூடிய "ச" என்ற எழுத்து மிகவும் நெருக்கமுள்ள வரக்கூடிய காலத்தை குறித்து கூறக்கூடியதாக இருக்கிறது. அதாவது "எனக்கு பிறகு உடனே கலீஃபாக்கள் தோன்றுவார்கள். எனக்கு பிறகு உடனே நபி தோன்ற மாட்டார்"
2- இந்த ஹதீஸின் பொருள் என்னவென்றால், "பனூ இஸ்ரவேலர்களில் ஒரு நபி தோன்றினால் அவர் அரசாட்சியை கொண்டவராகவும், அவர்களை தொடர்ந்து இன்னொரு நபி தோன்றக்கூடிய வழக்கம் இருந்தது. ரசூல் (ஸல்) அவர்கள், "எனது உம்மத்தில் அரசுத்துவம் மற்றும் நபித்துவம் இரண்டும் சேராது" என்று கூறினார்கள். (மிஷ்காத் கிதாபுர் ரிகாக், பாபுல் இன்ஸார் வத் தஹ்ஸீர்) இதன் அடிப்படையில் ரசூல் (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரஹ்) போன்றோர்கள் கலீஃபா (அரசுத்துவம்) ஆனார்கள், ஆனால் நபியாக இருக்கவில்லை. மேலும் நபியாக வந்த வாக்களிக்கப்பட்ட மசீஹ் அரசராக இருக்கவில்லை.
3- இந்த ஹதீஸ் மூலம் அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் இறுதி நாள் வரைக்கும் தோன்ற முடியாது என்று பொருள் கொள்வது மிகவும் தவறே. ஏனென்றால் ரசூல் (ஸல்) அவர்கள் வரக்கூடிய வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை முஸ்லிம் ஹதீஸில் நான்கு முறை "நபியுல்லாஹ்" என்று கூறியுள்ளார்கள்.
4- இந்த ஹதீஸ் ரசூல் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பிறகு தோன்ற கூடிய வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் காலதிற்கும் இடைப்பட்ட காலத்தை சார்ந்த ஹதீஸ் ஆகும். ஏனென்றால், ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எனக்கும் அவருக்கும் இடையில் எந்த நபியும் இல்லை அதாவது ஈஸா (அலை) நபி ஆவார் அவர் நிச்சயமாக இறங்குவார். (அபூ தாவூத் கிதாபுல் மலாஹிம், பாப் குரூஜுத் தஜ்ஜால்) அதாவது இறங்கக் கூடியவருக்கும் எனக்கும் இடையில் எந்த நபியும் கிடையாது. புகாரியில் எனக்கும் அவருக்கும் இடையில் எந்த நபியும் கிடையாது என்று வந்துள்ளது. (புகாரி, கிதாப் பதஉல் கல்க், பாப் திக்ர் மர்யம் பகுதி 13)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None