
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3535)
இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்ப தகுந்தவர்கள் இல்லை. ஏனென்றால் அறிவிப்பாளர்களின் வரிசை பலகீனமானதே. இரண்டு வரிசையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வரிசையில் உள்ள சஹீர் இப்னு முஹம்மத் சமீமி என்பவர் பலகீனமானவர்.இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "எஹ்யா வின் பார்வையிலும், அபு ஸர்ஆ வின் பார்வையிலும் இவர் பலகீனமானவர். உஸ்மானுத் தாரிமி கூறுகின்றார்கள், "இவரின் தவறான அறிவிப்புகள் பல இருக்கின்றன. நசாயி கூட இவரை பலகீனமானவர் என்றே கூறுகிறார்கள்." (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 2 பக்கம் 349)
இந்த ஹதீஸின் இரண்டாவது வரிசையில் வரும் அப்துல்லாஹ் இப்னு தீனார் மௌலா உமர் மற்றும் அபூ சாலிஹுல் கூஸி என்பவரும் பலகீனமானவரே. அகீலி என்பவர் அப்துல்லாஹ் இப்னு தீனரின் அறிவிப்பினை கலப்படமுள்ளவை என்று கூறுகிறார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 5 பக்கம் 202) மேலும் அபு ஸாலிஹ் அல் கூசி என்பவரை "இப்னு முஈன்" (அமாணிதத்தில் கைவைப்பவரின் மகன்) என்று கூறப்பட்டுள்ளது. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 12 பக்கம் 131 & மீசானுல் ஈததால் பதிப்பகம் ஹைதராபாத் பாகம் 3 பக்கம் 365).
இவ்வாறு இந்த ஹதீஸின் நிலை இருந்த போதிலும் ஒரு வாதத்திற்கு இதை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், நீங்கள் தரும் பொருள் தவறே ஆகும். இங்கு ஒரு கட்டிடத்தின் ஒரு செங்களை தனது நபித்துவத்திற்கு ஒரு உதாரணமாக கூறுகின்றார்கள் என்று கூறுகின்றீர்கள். அதோடு அந்த கட்டிடம் முழுமை அடைந்துவிட்டது என்று கூறுகிறீர்கள்...உங்களின் இந்த வாதப்படி பார்த்தாலும், இந்த கட்டிடம் முழுமை அடையவில்லை சகோ..காரணம் அதிலுள்ள ஒரு செங்கல் இன்னும் வானத்தில் உள்ளதே...அப்படி இருக்க இந்த கட்டிடம் எவ்வாறு முழுமை அடைய முடியுமா...? அவர் மீண்டும் இந்த உலகத்திற்கு இறங்கி வந்து மரணம் அடைந்தால்தானே முழுமை அடைய முடியும்...? இங்கு ஒரு விஷயத்தை கூறி கொள்ள விரும்புகிறேன். ரசூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு செங்கல் மட்டுமே காலியாக உள்ளது என்று கூறி ஈஸா நபியின் மரணத்தை உறுதி செய்துவிட்டார்கள். இல்லை என்றால் இன்னும் அந்த செங்கல் வானத்தில் இருக்கின்றன ஆகவே அந்த கட்டிடம் முழுமை அடையவில்லை என்று நீங்கள் நம்ப வேண்டும். இந்த ஹதீஸிற்கான சிறிய விளக்கம் என்னவென்றால், ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன்பு வந்த தூதர்களின் நபித்துவத்தில் ஒரு சில குறைகள் இருந்தன. அவர்கள் மனித குலத்திற்கு தேவையான முழு போதனையோடு வரவில்லை. ஆனால் அந்த குறையை ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் மூலமாக அல்லாஹ் நிறைவேற்றி மனித குலத்திற்கு தேவையான போதனைகளை நிவர்த்தி செய்தான். இதுவே நாங்கள் காதமுன் நபிய்யீன் என்பதற்கு கூறும் விளக்கமும் ஆகும்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None