ஈஸா (அலை) உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்க்கு எடுத்து வைக்கும் எதிர் வாதம் -2


ஈஸா அலை அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் அவர்கள் மீண்டும் இந்த பூமிக்கு இறங்கி வருவார்கள் என்பதற்கு ஆதராமாக எதிரிகள் எடுத்து வைக்கும் வசனம் "வ இன்னஹு லஇல்மு லிஸ்ஸாஅஹ் ஃபலா தம்தருன்ன பிஹா (43:62) பொருள்: (அஹ்மதி அல்லாதோரின் பொருள்) ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இறுதி நாளின் அத்தாட்சி ஆவார். இதில் நீங்கள் ஐய்யம் கொள்ள வேண்டாம், மாறாக இதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

முதல் பதில்: "இன்னஹு" எனும் சொல் ஹஸ்ரத் ஈஸா அலை அவர்களை குறித்துதான் சொல்கிறது என்று பொருள் கொள்வது அவசியம் இல்லாதது. மாறாக இந்த சொல் குர்ஆன் அல்லது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை குறித்தே சொல்லப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். ஏனென்றால், தஃப்சீர் மஆலிமுத் தன்ஸீல் என்ற நூலில் இந்த வசனதிற்கு விளக்கம் அளித்தவாறு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

"இன்னஹு" என்பது திருக்குர்ஆனை சுட்டி காட்டுகிறது என்பது ஹஸ்ரத் இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் மற்றும் ஒரு ஜமாஅத்தின் கூற்றாக இருக்கின்றது"


பிறகு "தஃப்சீர் ஜாமியுல் பயான்" இலும் இந்த 43:62 வசனதிற்கு விளக்கம் அளித்தவாறு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

"சிலர் இதற்கு திருக்குர்ஆன் இறுதி நாளின் அத்தாட்சியாக இருக்கும் என்று பொருள் கொண்டுள்ளனர், ஏனென்றால் இது இறுதி நூலாக இருக்கிறது.

ஒரு வாதத்திற்கு எதிரிகளின் வாதம் சரி என்று வைத்து கொண்டாலும், "இன்னஹு" என்பது "இப்னு மர்யம மசலன்" என்பதைதான் சுட்டி காட்டுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"மசலுன்" என்றால் அகராதியில் "அஷ்ஷிப்ஹு வன் நளீறு" (அல்முன்ஜத்) அதே போன்று மற்றும் உதாரணமாக என்ற பொருளில் வருகிறது. அதாவது மசீல் எனும் பொருளில் வருகிறது.

மேலும், முன்தஹல் அரப் ஃபில் லுகாதுல் அரப் என்ற அகராதி நூலில் "மசலூன்" என்பதற்கு பொருளாக "அதே போன்று, உதாரணமாக என்று எழுதப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல், எங்களது இந்த கூற்றிற்கு சாதகமாக அஹ்லே சுன்னத்தினர் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய "ஷரஹ் லிஷரஹ் லிஅகாயிதுல் முசம்மா பின்நப்ராஸ்" எனும் நூலின் பக்கம் 447 இல் அடிக்குறிப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

"முகாதில் இப்னு சுலைமான் மற்றும் அவரின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் விரிவுரையாளர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள், "இன்னஹு லஇல்மு லிஸ்சாஅஹ்" என்பதின் பொருள் "மஹ்தி" ஆவார். அவரின் வருகைக்கு பிறகே கியாமத்தின் அடையாளங்கள் வெளிப்படத் துவங்கும்."

அஹ்மதி அல்லாதோரின் கூற்று: இந்த வசனத்திற்கு விளக்கமாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து முஸ்னத் அஹ்மத் பாகம் 1 பக்கம் 317 மேலும் துர்ரே மன்சூர் பாகம் 6 பக்கம் 60 மற்றும் ஃபத்ஹுல் பயான் பாகம் 8 பக்கம் 311 மற்றும் இப்னு கஸீர் பாகம் 6 பக்கம் 144 இலும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது " இந்த வசனத்தில் இறுதி நாளுக்கு முன்பாக மசீஹ் இறங்குவதை பற்றி கூறப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு ஜரீர் பாகம் 5 பக்கம் 48 இலும் உள்ளது.

நமது பதில்: துர்ரே மன்சூரிலும் , ஃபத்ஹுல் பயானிலும் நீங்கள் கூறுவது போல் அறிவிப்பின் வரிசை இல்லை. இப்னு கசீரிலும், இப்னு ஜரீரிலும் எந்த அளவுக்கான வரிசையை கொண்டு இந்த விளக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதோ அவ்வனைத்தும் "மவ்லூஃ" (பலகீனமானது) ஆகும். இப்னு கசீரில் இந்த அறிவிப்பு இரண்டு வழியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் ஆசிம் இப்னு அபின் நஜூத் என்பவர் அறிவிப்பாளராக இருக்கிறார். ஆனால் இவர் பலகீனமானவர். இவர் சம்பந்தமாக இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

"இந்த அறிவிப்பாளர் குர்ஆனை நன்றாக ஓதியவர். ஆனால் ஹதீஸில் வலுவான அறிவிப்பாளராக இருந்ததில்லை.................இமாம் நசாயி இந்த அறிவிப்பாளரை பற்றி, "இவர் நல்ல அறிவிப்பாளர் கிடையாது" என்று கூறுகிறார். இவர் ஹதீஸை நிராகரிப்பவராக இருந்தார் என்று இப்னு கராஷ் கூறுகிறார். இவர் வலுவானவர் கிடையாது என்று அபு ஹாதிம் கூறுகிறார். (மீசானூல் ஈததால் பாகம் 2 பக்கம் 5, எழுதியவர் அல்லாமா ஸஹ்பி (ஷம்ஸுத்தீன் அபி அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு உஸ்மான் இப்னு காயிமாருஸ் ஸஹ்பி)

இப்னு ஜரீர் அறிவித்த வழியிலும் வருகின்ற முதல் மூன்று அறிவிப்பாளர்களில், ஹதீஸை நிராகரிப்பவராகிய, வலுவற்றவராக இருக்கும் இந்த ஆசிம் இப்னு அபின் நஜூத் என்பவரே அறிவிப்பாளராக இருக்கிறார். இதை தவிர முதல் வழியில் இப்னு ஆசிம் ஐ தவிர அபூ எஹ்யா மஸ்தா என்ற அறிவிப்பாளரும் இருக்கிறார். இவர் தனது வார்த்தையில் வலுவற்றவராக இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறும் எழுதப்பட்டுள்ளது:

" இந்த அறிவிப்பாளர் பலகீனமானவர் மேலும் நம்பத்தகுந்தவர் இல்லை." (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 10 பக்கம் 158)

இப்னு ஜரீர் அறிவித்திருக்கும் இரண்டாவது வழியிலும் ஆஸிமை தவிர காலிப் இப்னு ஃபாயித் என்பவரும் இருக்கிறார். இவரை பற்றி அல்லாமா ஸஹ்பி இவ்வாறு எழுதுகிறார்:

"இந்த அறிவிப்பாளர் வலுவானவரா என்பதை பற்றி முஹத்தீஸீன் மத்தியில் வாக்குவாதம் உள்ளது. மேலும் இவரின் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அகீல் கூறியுள்ளார்." (மீசானூல் ஈததால் பாகம் 2 பக்கம் 289)

இவ்வாறு ஹாஃபிஸ் இப்னு ஹஜர் "லிசானுல் மீஸான் பாகம் 2 பக்கம் 289 இல் இந்த அறிவிப்பாளரை பற்றி அகீலின் கூற்றை நகல் செய்யப்பட்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது, " சாஹிபு வஹ்மின்" இவர் கற்பனையை கொண்ட மனிதர் ஆவார்.

இவ்வாறு இப்னு ஜரீரின் நான்காவது அறிவிப்பின் ஓர் அறிவிப்பாளர் ஃபுஸைல் இப்னு மர்ஸூகூர் ரக்காஷி என்பவர் ஆவார். இவர் ஷியாவை சார்ந்தவர். இவரை பற்றி அபு ஹாதிமின் கூற்றை இவ்வாறு நகல் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது: இந்த அறிவிப்பாளரின் அறிவிப்பு ஆதாரப்பூர்வமற்றது. மேலும் இவர் பலகீனமானவர் என்று நசாயி கூறுகிறார். இவர் தீயவர் மற்றும் பலகீனமானவர் என்று இப்னு ஹய்யான் கூறியுள்ளார். இப்னு முயீன் என்பவர் இவரை பலகீனமானவர்களில் இணைத்துள்ளார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 8 பக்கம் 299 & 300)

ஆக, இதுதான் நீங்கள் வைக்கும் "தஃப்சீர் இப்னு அப்பாஸின்" உண்மை நிலை.

இரண்டாவது பதில்: "இல்ம்" என்றால் "அறிவது" ஆகும். இது ஒரு مصدر (மஸ்தர்) (மூலச்சொல்) ஆகும். சில தடவை இந்த மூலச்சொல் கூட مبالغہ (முபாலிகாவாக) (ஆதாவது செயலை விவரித்து கூறுவதாக) மாறிவிடுகிறது. உதாரணமாக சைதுன் அத்லுன் அதாவது சைத் மிகவும் ஆதிலாக நீதிபதியாக இருக்கிறார் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறே 46:62 வசனத்திலும் வந்துள்ளது. அதாவது மசீஹ் கியாமத்தை பற்றி நன்கு அறிந்தவராகவே இருந்தார். அதாவது கியாமத் நிச்சயமாக ஏற்படும் என்பதை நன்கு அறிந்திருந்தார். அப்போது அங்கு தனது எதிரிகள் (யூதர்கள்) சங்கிலியில் பிணைக்கபட்டோராக காண்பார். யூதர்களில் சில பிரிவினர் கியாமத்தை மறுப்போராகவும் இருந்துவந்தனர். அவர்களுக்கு இது பதில் அடியாக இருந்தது.

இந்த வசனத்தில் "இல்ம்" என்பதற்கு "அடையாளம் அல்லது அத்தாட்சி" என்று வைத்துக் கொண்டாலும், ஸாஅத் என்பதற்கு உலகம் அழியக்கூடிய இறுதி நாள் என்று பொருள் என்பது நிச்சயமாக இருக்க முடியாது. ஆம், யூதர்களின் அழிவு நாளின் நேரம் என்று பொருள் கொள்ளுவது சரியானதே. இவ்வாறு இந்த வசனத்திற்கான பொருள், "தந்தை இல்லாது மசீஹின் பிறப்பு, பனூ இஸ்ரவேலர்களில் அனைவரும் அசுத்தமானவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளமாக திகழ்கிறது. மேலும் அவர்களின் அழிவு மிக அருகில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

மூன்றாவது பதில்: சாஅத் என்பதற்கு பனூ இஸ்ரவேலர்களின் அழிவிற்கான நேரம் என்றும் பொருள் படும்.

நான்காவது பதில்: இந்த வசனத்திற்கு எதிரிகள் கொள்ளும் பொருள் ஒரு வகையில் சரியானதே என்று வைத்துக் கொண்டாலும், இந்த வசனத்தின் (43:62) அடுத்த பகுதியாகிய فَلَا تَمْتَرُنَّ بِہَا ("ஃபலா தம்தருன்ன பிஹா") என்பது வருவது வீணானதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இந்த விஷயம் பகுத்தறிவிற்கு எட்டாத நிலையில் அப்பால் உள்ளது. காரணம், இந்த அடையாளம் ஏற்படவே இல்லை ஆனாலும் இறைவன் ரசூல் (ஸல்) அவர்களை நிராகரிப்பவருக்கு "நீங்கள் இதில் ஐய்யப்பாடு கொள்ள வேண்டாம்" என்று கூறுகிறான். ஆகவே இந்த அடையாளமானது ஓர் அறியாத நேரத்திற்கு பிறகு வரக்கூடியதாக இருக்கும் நிலையில் அவர்களை (எதிரிகளை) சந்தேகம் கொள்வதினை எந்த வகையில் நிறுத்தமுடியும்.? ஆகவே இங்கு மசீஹ் கியாமத்தின் அடையாளமாக இருப்பார் என்பதை பற்றி கூறப்படவில்லை மாறாக ரசூல் (ஸல்) மற்றும் திருக்குர்ஆனை இறுதிநாளின் அடையாளமாக கூறப்படுகிறது இல்லை என்றால், இந்த வாசகம் பொருள் அற்றதாக ஆகிவிடுகிறது.

ஐந்தாவது பதில்: فَلَا تَمْتَرُنَّ بِہَا "ஃபலா தம்தருன்ன பிஹா" விற்கு பிறகு "என்னை பின்பற்றுங்கள்" என்று வருகிறது. கியாமத்தின் அடையாளமாக மசீஹ் இருக்கிறார் என்று கூறுவதாக இருந்தால், இந்த வாசகத்தின் அடிப்படையில் "நீங்கள் அவரை பின்பற்ற வேண்டும்" என்று வந்திருக்க வேண்டும். அதுவல்லாது, நீங்கள் என்னை பின்பற்றுங்கள் என்று கூறுவதில் என்ன தொடர்பு இருக்கிறது.? ஆகவே "என்னை பின்பற்றுங்கள்" என்ற வாசகமானது, "மசீஹ் இப்னு மர்யம் மேலிருந்து இறங்க மாட்டார் மாறாக முஸ்லிம்களே! நீங்கள் மசீஹ் ஆக மாறுங்கள், இதற்கான வழி நீங்கள் என்னை பின்பற்றுவதே ஆகும்" என்பதை தெளிவு படுத்துகிறது.

நுணுக்கமான கருத்து: எந்த வசனத்தை பற்றி மேலே பேசப்பட்டதோ அது சூரா சுக்ருஃப்ஃபில் வருகிறது. இந்த வசனம் மூலமே மசீஹ் "இல்மு லிஸ்சாஅஹ்" வாக இருப்பார். ஆகவே அவர் நிச்சயமாக கியாமத்திற்கு முன்னதாகவே வருகை தருவார் என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் மசீஹ் தான் இல்மு லிஸ்சாஅஹ் என்று வைத்துக் கொண்டாலும், அவர் இந்த முஹம்மதியா உம்மத்தில் வர முடியாது. ஏனென்றால் இந்த சூராவின் இறுதி ருகூவில் அல்லாஹ் தெளிவாக "வ இன்தஹூ இல்முஸ் சாஅஹ் வ இலைஹி துர்ஜஊன்" (43:86) அதாவது நீங்கள் மீண்டும் இந்த பூமியில் இறக்கக்கூடிய அந்த இல்முஸ் சாஅஹ் இப்போது இறைவனிடம் உட்கார்ந்து உள்ளார். அவர் நிச்சயமாக உங்களிடம் வர மாட்டார் மாறாக அவனின் பக்கம் நீங்கள் திருப்பப்படுவீர்கள். ஆகவே ஈஸா மீண்டும் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருப்பது வீணான கொள்கை ஆகும். 
                                                       (தப்லீக் பாக்கட் புக்கிலிருந்து)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.