இயேசு பாவிகளுக்கு பலியாக வந்தாரா?



பலியை குறித்தும், பாவிகளைக் குறித்தும் இயேசு கூறுவதைப் பாருங்கள்.
"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக் கொள்ளுங்கள்! நீதிமான்களை அல்ல பாவிகளை மனந்திரும்புகிறதர்க்கு அழைக்க வந்தேன்". (மத்தேயு 9:13)
கர்த்தர் பலியை விரும்புகிறவர் அல்ல, இரக்கத்தையே அதாவது மன்னிப்பு வழங்குவதையே விரும்புகிறார் என்பதி இயேசு உணர்த்தி இருக்கும் போது மக்களின் பாவங்களுக்காக தமது சொந்தக் குமாரனே பலியாக வேண்டுமென கர்த்தர் விரும்பினார் என்று கிருஸ்தவ போதகர்கள் கூறுவது இயேசுவின் வார்த்தைகளுக்கு முரன்பட்டதல்லவா?
நீதிமான்கள், பாவிகள் என்று மக்களை வேறு படுத்தி இயேசு கூறி இருக்கும் போது எல்லோரும் பாவிகள் என்று இவர்கள் கூருவதில் என்ன நியாயம் இருக்கிறது?

பாவிகளை மனந்திரும்புகிறதர்க்கு அழைக்க வந்தேன் என்று இயேசு சொல்லிஇருக்கும் போது அதற்க்கு முரணாக அவர் பாவிகளுக்காக பலியாக வந்தார் என்று இவர்கள் கூறுவது எவ்வகையில் சரியானது?
இரட்சிப்பிற்கு திருக்குர்ஆன் மூன்று வழிகளை கற்றுத்தருகிறது இவற்றையே இயேசுவும் போதிதிருந்தார். உறுதியான நம்பிக்கையே மனிதனை மீட்டு அவனை இறைவனின் நல்லடியானாக மாற்றும் எனத் திருக்குரான் போதிக்கின்றது. இயேசுவும் இதையே கூறுகிறார். "விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியா ஜீவன் உண்டென்றும் மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். (யோவான் 6:47)
அடுத்து நன்னம்பிக்கை மட்டும் போதாது அதோடு இணைந்த நற்செயலும் இரட்சிப்பு பெற அவசியமானது என திருக்குர்ஆன் போதிக்கின்றது. (அல்-கஹ்ப், அல்-பத்ஹ) பைபிளும் இக்கருத்தை ஆமோதிக்கின்றது. "என் சகோதரனே!ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டு என்று சொல்லியும் கிரியை(நற்செயல்) இல்லாதவனானால் அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? (யோக்கோபு 2:14)
மூன்றாவது நம்பிக்கையும் நற்செயலும் மட்டுமல்லாது இரட்சிப்பிற்கு இறையருளும் கிடைக்கவேண்டும் என திருக்குஆன் சொல்லுகின்றது. (அல்-பத்ஹ) இதையே இயேசுவும் சொல்கிறார். "அவருடைய சீடர்கள் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மனுஷரால் இது கூடாது தான் தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:25, 26)
இறைத் தூதராகிய இயேசு இறை மறையான திருக்குரானுக்கு ஒத்த போதனைகளையே மக்களின் இரட்சிப்பிற்காக போதித்து சென்றிருக்கிறார். இடையில் பாவி என்றும், பலி என்றும், இரத்தத்தின் வாயிலாக இரட்சிப்பு என்றும் கிருஸ்துவ போதகர்கள் குழப்பியடிப்பது ஏன்? இவர்களின் இந்தக் கொள்கைகளுக்கு இயேசுவின் சொந்த வார்த்தைகளிலிருந்து சான்றுகளைக் காட்ட தர இவர்களால் முடியுமா?

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.