சுதந்திரம் என்பது மனிதனின்
பிறப்புரிமையாகும். இஸ்லாம் மனித இயல்புக்கேற்ற மார்க்கமாகும் எனவே இஸ்லாம்
மனிதனின் இந்த உரிமையையும் பாதுகாத்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைக்
கொள்கைகளில் சுதந்திரமும் ஒன்றாகும் மார்க்க உரிமைக்காகவும், மனசாட்சி
உரிமைக்காகவும், நாட்டுரிமைக்காகவும் குரல் கொடுத்த ஒரே மார்க்கம்
இஸ்லாம்தான். இஸ்லாத்தின் எதிரிகளோ தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும்
மற்றவர்கள் மீது திணிக்க முயன்றார்கள். அந்த எதிரிகள் பலவந்ததினாலும்,
பெரும்பான்மை என்ற ஆனவத்தினாலும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
அழித்தொழிக்கும் முயற்சியில் எந்தக் குறையையும் விட்டுவைக்கவில்லை.
அத்தகைய காலத்தில் இஸ்லாத்தின்
ஸ்தாபகர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் இறை கட்டளைக்கிணங்க
'மார்கத்தில் எந்த பலவந்தமும் இல்லை' (2:258) என்பதையும், 'இந்த உண்மை
உங்கள் இறைவனிடமிருந்துள்ளதாகும். எனவே எவர் விரும்புகிறாரோ அவர் ஏற்றுக்
கொள்ளட்டும். எவர் விரும்புகிறாரோ ஏற்றுக் கொள்ளட்டும் எவர் விரும்புகிறாரோ
மறுக்கட்டும்' (18:30). அது அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது என்பதையும்
அறிவித்தார்கள். ஆனால் அத்துடன் நாட்டுப்பற்று ஈமானை (இறை நம்பிக்கையை) ச்
சார்ந்தது என்ற போதனையும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மார்க்கம் சுதந்திரம்,
மனசாட்சி சுதந்திரம், நாட்டு சுதந்திரம் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதுடன்
வெளிப்படையான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காகவும் எத்தகைய செயல்முறை திட்டத்தை
எடுத்துரைத்துள்ளதென்றால், அதன் விளைவாக அடிமைகளுக்குப் படிப்படியாக
சுதந்திரம் கிடைத்துக் கொண்டே சென்றது. கடைசியில் தனிநபர் அடிமைத்தனமும்
ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இஸ்லாம் தனிநபர் அடிமைத்தனத்தை
ஒழித்தது மட்டுமல்லாமல், மனித சமூகத்தை சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற
அடிமைத்தனத்திலிருந்தும் விடுவித்துள்ளது. உண்மையான தூய தௌஹீதில் மக்களை
நிலை நிறுத்த செய்வதும், தௌஹீதின் மூலமாக எல்லா மனித குலத்தையும் ஒற்றுமை
சகோதரத்துவம் என்ற மணியில் கோர்ப்பதும் முழு உலகிலும் எலாவிதமான
அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்தெறிந்து, சுதந்திரத்தையும், மனிதனுக்கு சம
உரிமையையும் நிலை நாட்டுவதற்காகவும், எல்லா விதமான ஆதிக்கத்தின் வழியினை
மூடுவதற்காகவும் பாடுபட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்தான்.
அஹ்மதிய்யா ஜமாத்தின் தோற்றுனர்
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் தோற்றத்திற்கும், அஹ்மதிய்யா
ஜமாஅத்தை நிலை நாட்டியதற்கும் உள்ள காரணம் இஸ்லாத்தைப் புதுப்பிப்பதும்,
மார்க்கத்தை உயிரூட்டுவதுமாகும். அன்னார் கூறுகிறார்கள்:
"இறைவன் இந்த காலத்தை
இருளடைந்ததாகக் கண்டு, உலகம் அறிவீனத்திலும், இறை மறுப்பிலும், இணை
வைப்பதிலும் மூழ்கியதாகக் கண்டு, இறை நம்பிக்கை, இறையச்சம், நேர்வழி ஆகியவை
அழிந்து போயிருப்பதைக் கண்டு, திரும்பவும் உலகில் அந்த இறைவன் ஞானத்தின்
செயலின், நல்லொழுக்கத்தின், இறை நம்பிக்கையின் உண்மையை நிலைநாட்டுவதற்காக
என்னை அனுப்பியுள்ளான்." (ஆயினே கமாலாத்தே இஸ்லாம் பக்கம் : 251)
அவ்வாறே அவர்கள் இன்னோரிடத்தில் கூறுகிறார்கள்:
"நான் இந்த எல்லா தவறுகளையும்
அகற்றி, உண்மையான இஸ்லாத்தை நான் மீண்டும் உலகில் நிலை நாட்டவேண்டும் என்ற
நோக்கத்திற்காகவே இறைவன் என்னை நியமித்துள்ளான்" (அஹ்மதி, கைர் அஹ்மதி மேன்
கியா பர்க் ஹே. பக்கம் :16)
இமாம் மஹ்தியாகவும்,
வாக்களிக்கப்பட்ட மசீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை)
அவர்கள் இஸ்லாத்திற்கு உயிரூட்டுவதற்காகவும், இஸ்லாமிய ஷரியத்தை நிலை
நாட்டுவதற்காகவும் இறைவனால் நியமிக்கப்ப்பட்டிருக்கும் போது, இஸ்லாம்
எடுத்துரைக்கும் சுதந்திரம் பற்றிய கொள்கைக்கு எதிராக அவர்கள் வேலை செய்வது
சத்தியமே இல்லை. எனவே இன்று எவராவது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர் மீதோ
அல்லது அஹ்மதிகள் மீதோ, இவர்கள் இந்திய சுதந்திரக் கொள்கைக்கு
எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றால், அது அவருடைய
முட்டாள்தனமாகும். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் தம் முகத்திரை
கிழிந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் கூறுகிறார்கள்.
இதை நாம் ஏன் தெளிவுபடக்
கூறுகிறோம் என்றால், 1974 இல் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமியா' மாநாட்டில்
அஹ்மதி முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்குப்
பிறகு, அஹ்மதிய்யா ஜமாஅத் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப் பட்டிருந்த
காரணத்தால் அது இந்திய சுதந்திரக் கொள்கைக்கு எதிராக நின்றது என்ற
குற்றச்சாட்டு இந்தியாவிலுள்ள முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில்
கூறப்பட்டது. இந்தியாவை அடிமைத்தனத்தில் பூட்டிவைப்பதையும், எப்பொழுதும்
ஆங்கிலேயர்களே இந்தியாவை ஆல்வதியுமே அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பியது என்ற
தவறான ஒரு கருத்தை இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய பொது மக்களுக்கும்
எடுத்துரைப்பதே இந்த முஸ்லிம் தலைவர்களின் நோக்கமாகும்.
ஆனால் இந்தக் கருத்து முற்றிலும்
தவறானதும், இட்டுக்கட்டுமாகும். அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நூல்களைப்
படிக்காத, அதன் கொள்கை கோட்பாடுகளை அறவே தெரியாதவர்களாக இருக்கும்
பத்திரிகையாளர்கள்தான் இவ்வாறு கூறுகிறார்கள். அல்லது அஹ்மதிய்யத்தின்
எதிரிகள் கூறும் எமாட்டுகளை கொண்ட தலையங்கங்களினால் அவர்கள் எடுத்த தவறான
முடிவாகும். இன்னும் சிலர் பொதுமக்களை அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாத்திற்கெதிராகத் தூண்டி விடுவதற்காகவும் அவ்வாறு உண்மைக்கு மாறான
கருத்துகளை எழுதுகின்றனர்:
1974- க்குப் பிறகு இன்று
வருடங்கள் ஆகின்றன. இந்திய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அஸ்
அத்மதனி இந்தப் பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளார். காரணம், இந்தியாவில்,
அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் வளர்ச்சி அவருக்கு பயத்தை தந்துள்ளது. எனவே
அவர் சென்றகால ஆலிம்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றியவாறு, அஹ்மதியா
ஜமாத்தின் வளர்ச்சியை தடுக்க முனைகிறார். அதற்காக அவர் மஜ்லிசே தஹபுஸே கதமே
நுபுவத்', அமைப்பின் ஏற்பாட்டில் தில்லி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் பெரிய
மாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மாநாட்டைச் சாக்காக வைத்து அதனை அவர்
அரசியலாக்க முயன்றார். ஆனால் அதன் படுதோல்வியை உலகம் கண்டுகொண்டது.
முஸ்லிம் பத்திரிகையாளர் கூட்டத்தில் தன்மானமுள்ள, உண்மையை நாடும்
பத்திரிகையாளர்கள் அதற்கு எதிராக விமர்சனம் செய்தார்கள்; இது பொருத்தமற்ற,
முட்டாள்தனமான நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டார்கள்.
இதில் நூதனமான விஷயம்
என்னெவென்றால், அஹ்மதிய்யா ஜமாத்தை 'முஸ்லிம் சிறுபான்மையினர்' என அறிவிக்க
வேண்டும். என்ற ஒரு முட்டாள்தனமான கோரிக்கையை இந்த மாநாட்டில் இவர்கள்
வைத்தனர்.
இந்தக் கோரிக்கையைப் படித்ததும்.
நம்மையுமறியாமல் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதில் அவர் இவ்வாறு
கூறுகிறார். "குறுகிய மனத்தைக் கொண்ட முஸ்லிம் என்னை காபிராகக்
கருதுகிறார். பொதுவானக் காபிர்கள் (மாற்று மதத்தினர்) என்னை முஸ்லிமாகக்
கருதுகிறார்கள்."
அவர்களின் இந்தக் கோரிக்கையே
அவர்களின் தோல்விக்கு சான்றாகும். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஐம்பது
ஆண்டு காலக் கட்டத்தில், அஹ்மதியா ஜமாத்திற்கெதிரான ஆதாரங்களை எடுத்து
வைப்பதிலும், சான்றுகளைத் தருவதிலும், இஸ்லாமிய நடத்தைகளை எடுத்துக்
காட்டுவதிலும் அவர்கள் திராணியற்ற நிலையில் இருக்கின்றார்கள். எனவே பாமர
முஸ்லிம்களை அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் தூண்டிகொண்டிருக்கிரார்கள்.
ஆயினும் அல்லாஹ்வின் அருளினால் ஒவ்வொரு ஆண்டிலும் இலட்சக்கணக்கான மக்கள்
அஹ்மதிய்யா ஜமாத்தில் இணைந்து வருகிறார்கள்.
இந்தத் தோல்வியை அவர்கள்
மறைப்பதற்காக அஹ்மதியா ஜமாஅத் இந்தியக் கொள்கைக்கு எதிராக இருந்தது என்று
குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் ஒருபுறம் அரசாங்கத்திற்கு அஹ்மதியா
ஜமாதிற்கெதிரான தப்பெண்ணங்களை உருவாக்குகிறார்கள். மறுபுறம்,
பெரும்பான்மையாக விளங்கும் இந்துக்களை தூண்டிவிடுகிறார்கள். ஆனால்
இவர்களுடைய இந்த முயற்சியும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால்
அஹ்மதியா ஜமாஅத் ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற ஜமாஅத்
என்பதையும், அஹ்மதி முஸ்லிம்களின் ஒழுக்கம் மிகவும், தூய்மையானதும்
கலங்கமற்றதாகும் என்பதையும் இந்திய அரசாங்கமும் பெரும்பாலான இந்தியர்களும்
நன்கு அறிவார்கள்.
ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கட்டுப்
பட்டு நடக்க வேண்டுமென அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத்
மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஏன் அறிவுரை வழங்கினார்கள் என்றால்
அதற்குரிய பதில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் குரானின் கட்டளைக்கேற்ப
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுவதுடன்,
ஆட்சியில் உள்ளவருக்கும் கட்டுப்பட்டு நடக்குமாறு கூறுகிறது,
திருக்குரானின் இந்தக் கட்டளைப்படி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்
ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டுவருகிறது. இனியும் செயல்பட்டு வரும். இன்ஷா
அல்லாஹ். இது வெறும் வாயளவில் சொல்லப்படும் கொகையல்ல. அஹமதிய்யா ஜமாஅத் 125
ஆண்டுகளும் இதற்கு சாட்சியாக விளங்குகின்றது. (international) அளவில்
வளர்ந்துள்ளது. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படும் அஹ்மதி முஸ்லிம்கள்,
சட்டப்படி தமது அரசுக்கு கட்டுப்படுபவர்கலாகத் திகழ்கின்றார்கள்.
இதே கொள்கையும், செயல்பாடும்தான்
ஆங்கிலேய அரசாங்கம் இருந்த நேரத்திலும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தில்
இருந்தது. இந்தய சுதந்திரத்திற்குப் பிறகும் அவ்வாறே இருக்கிறது. அஹ்மதி
முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களைப் போன்று ஒரு போதும் இரட்டை வேடமாக
நடந்துகொள்வதில்லை.
அந்நியர்கலிடமிருந்து தமது நாட்டை
விடுவிப்பதும், தமக்கு ஆகுமான உரிமைகளைப் பெறுவதும், அஹ்மதியா முஸ்லிம்
ஜமாத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானதுதான். அவ்வாறு விடுதலை பெறுவது,
சமுதாயத்தின் நல்லொழுக்க, ஆன்மீக முன்னேற்றங்களுக்கும், நாட்டின்
வளர்ச்சிக்கும், தற்காப்புடன் வாழ்வதற்கும் காரணமாக அமையலாம். ஆயினும்
அதற்காக நாட்டில் கூச்சல், குழப்பம், சமுதாய சொத்துக்களுக்கு நஷ்டம்
போன்றவை ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாது என்பதே அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின்
போதனையும், கலீபாவின் போதனையுமாக இருந்தது.
இந்தக் கொள்கைப் பற்றி அக்கால பத்திரிகையாளர் ஜிஸ்வந்த் சிங் என்பவர் இவ்வாறு கூறுகிறார்:
"தாம் அரசாங்கத்துடன்
ஒத்துழைப்புத் தர வேண்டுமென்பதும், எவ்விதத்திலும் போராட்டம் செய்வதோ,
ஒத்துழையாமை, வரம்புமீறுதல், சட்ட விரோதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்
ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என்பதும் அஹ்மதிகளின் அடிப்படைக்
கொள்கைகளிலும், மார்க்க கோட்பாடுகளிலும் உள்ள ஒன்றாகும்."(ஹிந்துஸ்தான்
டைம்ஸ் கல்கத்தா 25 டிசம்பர் 1951)
தில்லியை சார்ந்த டாக்டர் சங்கரதாஸ் கூறினார்:
"சட்டத்தைப் பேணி நடப்பதுதான்
அஹமதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் கொள்கையும் செயல்முரையுமாகும்.
நீதிமன்றத்தின் ஆதாரத்தின் படி குற்றத்திலிருந்து தூய்மையானதாக
நிரூபணமாகியுள்ளது அஹ்மதிய்யா ஜமாஅத் மட்டும்தான். சென்ற குழப்பங்களிலும்
(1947 - இல் நடந்தவை) அஹ்மதிகள் (கொலை, கொள்ளை ஆகியவற்றிலிருந்து) தமது
கைகளைத் தூய்மையாக வைத்துள்ளார்கள்." (ஸ்டேட்ஸ் மேன் நாளிதழ் 2 டிசம்பர்
1949)
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை
பெரும் விஷயத்திலும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இதே செயல் முறையைத்தான்
கையாண்டது. நிச்சயமாக சுதந்திரம் பெறுவது ஒவ்வொரு மனிதனின்
பிரப்புரிமையாகும். ஆயினும் சட்டத்திற்குள் இருந்துகொண்டு அந்த உரிமையைப்
பெறவேண்டும்: இல்லைஎன்றால், நமக்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு, சுதந்திர
இந்தியாவின் பொதுமக்களும், தமது கோரிக்கைகளை ஒப்புக் கொள்ள செய்வதற்காக இதே
மாதிரியான போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை அஹ்மதி முஸ்லிம்கள் அன்றைய
காலத்தில் இந்திய மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.
இன்று நாம் அதன் விளைவுகளை நம்
கண்களால் கண்டு வருகிறோம். தினசரி போராட்டங்கள், கடையடைப்புகளால்
நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுகின்றன. மேலும் அந்த
நஷ்டங்களின் சுமையும் பொது மக்கள் மீதே விழுகின்றது. இந்த வழிமுறையைத்தான்
இந்தியா சுதந்திரம் பெரும் போதும் அஹ்மதிய்யா ஜமாஅத் விரும்பவில்லை.
மற்றபடி, இந்திய சுதந்திரம் விஷயத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், எந்த
இயக்கத்தை விடவும், அரசியல் பிரிவை விடவும் பின்தங்கியிருக்கவில்லை.
அஹமதிய்யா ஜமாஅத்தின் ஸ்தாபகர்
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள், சுதந்திரத்தைப் பெறுவதற்காக,
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து தமது தமது குறிக்கோளைப்
பெறவேண்டுமென அறிவுரை கூறினார்கள். முஸ்லிம்கள் காங்கிரசுடன் சேராமல்,
முஸ்லிம் லீக் என்று தனக்கென தனிப்பட்ட அரசியல் பிரிவை ஏற்படுத்தியபோது
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இதனை விரும்பவில்லை. இவ்வாறு ஒன்று சேர்ந்த
சக்தி பிரிந்துவிடும். மேலும் அமைதி, சமாதானம் பற்றிய விஷயத்தில்
விரும்பத்தகாத பிரச்சனைகள் உருவாகிவிடும் என்பதால்தான் அன்னார் இதனை
விரும்பவில்லை.
இதன்படி 1908 ஆம் ஆண்டில், பை
காமே ஸுல்ஹ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். (இந்த நூல் 'சமாதானத்
தூது') என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்துள்ளது) அதைப் படிக்கும் போது,
இந்தியாவில் 39 வருடங்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் நிலைமைகளை ஹஸ்ரத்
மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள் அன்றே தமது தொலை நோக்குப் பார்வையினால்
புரிந்திருந்தார்கள் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. இந்து, முஸ்லிம்
ஒற்றுமைக்காக ஒருவன் இன்னொருவரின் சான்றோர்களை மதிப்போம். எனவும் அந்தப்
பெரியவர்களின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்வோம் எனவும் உடன்படிக்கை செய்து
கொள்ளுமாறு அந்நூலில் வலியுறுத்திக் கூறும்போது இவ்வாறுக்
குறிப்பிட்டார்கள்:
"அன்பிற்குரியவர்களே!
சமாதானத்தைப் போன்று எதுவுமில்லை. வாருங்கள் நாம் இந்த உடன்படிக்கையின்
மூலம் ஒன்றுபடுவோம். ஒரு சமுதாயமாக மாறுவோம். ஒருவருகொருவரை மறுப்பதனால்
எந்த அளவுக்கு பிரிவினை ஏற்பட்டுவிட்டது என்பதையும், நாட்டுக்கு எவ்வளவு
நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் நீங்கள் பார்கிறீர்கள். வாருங்கள்
ஒருவரையொருவர் உண்மைப்படுத்துவதில் எந்த அளவுக்கு அருள்கள், அபிவிருத்திகள்
இருக்கின்றன என்பதையும் இப்போது சோதித்துப் பாருங்கள்." (பைகாமே ஸுல்ஹ
பக்கம் 17, 18)
முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தவறு என்னவென்றால், இந்துக்களின்
இந்த முயற்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் , நாம்
எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம் என எண்ணினார்கள். மேலும் இந்த
எல்லாமுயற்சிகளுக்கும் என்தாவது பலன் இருக்கிறதென்றால். அது
இந்துக்களுக்குத்தான் கிடைக்கும்: முஸ்லிம்களுக்குக் கிடைக்காது எனக்
கருதினார்கள். எனவே, முஸ்லிம்கள் கலந்துகொல்வதிளிருந்து விலகி
இருந்ததுமட்டுமல்லாமல் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து, இந்துக்களின்
முயர்த்திகளுக்கு தடைக்கல்லாக நின்றார்கள். அதனால் சீர்குலைவு
அதிகமாகிவிட்டது.
அன்னார் தொடர்ந்து கூறுகின்றார்கள்:
அன்னார் தொடர்ந்து கூறுகின்றார்கள்:
'முஸ்லிம்கள்,
தமக்கு ஆகுமான உரிமைகளைக் கோரும் விஷயத்தில் இந்துக்களுடன் சேர்ந்துகொள்ள
என் பயப்படுகிறார்கள்? என்பதையும், இன்றுவரை காங்கிரசுடன் இணைவதிளிருந்து
முஸ்லிம்கள் என் மறுத்துவருகிறார்கள் என்பதையும்,
பிறகு கடைசியில் ஏன் இந்துக்களின் கருத்தை சரியானது என உணர்ந்து அவர்களைப்
பின்பற்றினார்கள் - ஆயினும் தனித்து நின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப்
போட்டியாக ஏன் முஸ்லிம் லீக் என்ற கட்சியை உருவாக்கினார்கள். ஆயினும்
(இந்துக்களாகிய) அவர்களின் தீங்குகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும்
ஒவ்வொரு நபரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 12
)
எனவே, இந்தியாவுக்கு உண்மையான கண்ணியத்திற்குரிய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் எந்த ஒரு நாடு அல்லது சமுதாயம் பல வருடங்களாக அடிமை என்ற சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்குமோ அதில் அநியாயங்களும், தீய நடத்தைகளும் உருவாகிவிடுகின்றன என்பதை அன்னார் நன்கு அறிந்திருந்தார்கள். இதன்படி யூதர்கள் அடிமையாக இருந்த காலத்தை உதாரணமாக குறிப்பிடும்போது கூறுகிறார்கள்:
"அவர்கள் (யூதர்கள்) 400 வருடங்களாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அதனால் அவர்களிடம் தரங்கெட்ட நிலையம், அநியாயமும் அதிகமாக உருவாகியிருந்தன." ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 32)
எனவே, இந்தியாவுக்கு உண்மையான கண்ணியத்திற்குரிய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் விருப்பமாக இருந்தது. ஏனெனில் எந்த ஒரு நாடு அல்லது சமுதாயம் பல வருடங்களாக அடிமை என்ற சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்குமோ அதில் அநியாயங்களும், தீய நடத்தைகளும் உருவாகிவிடுகின்றன என்பதை அன்னார் நன்கு அறிந்திருந்தார்கள். இதன்படி யூதர்கள் அடிமையாக இருந்த காலத்தை உதாரணமாக குறிப்பிடும்போது கூறுகிறார்கள்:
"அவர்கள் (யூதர்கள்) 400 வருடங்களாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அதனால் அவர்களிடம் தரங்கெட்ட நிலையம், அநியாயமும் அதிகமாக உருவாகியிருந்தன." ( பைகாமே ஸுல்ஹ பக்கம் 32)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None