ஈஸா (அலை) உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்க்கு எடுத்து வைக்கும் எதிர் வாதம் -1



அஹ்மதி அல்லாதோர் ஹஸ்ரத் ஈஸா அலை உயிரோடு வானத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு வைக்கும் ஆதாரம்: "அவர்கள் சிலுவையில் அரையப்படவும் இல்லை, கொல்லப்படவுமில்லை...மாறாக அல்லாஹ் அவர்களை தன்னளவில் (அதாவது வானத்திற்கு) உயர்த்திவிட்டான்.(வமா சலபூஹு வமா கதலூஹு....பல் ரஃபஅஹுல்லாஹு இலைஹி)(4:159,160) என்ற வசனம் ஆகும். இதை வைத்து அவர்கள் வைக்கும் வாதம், ஈசா அலை யூதர்களால் சிலுவையில் அரையப்படவுமில்லை, கொல்லப்படவுமில்லை...அவர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றும் வண்ணம் தன்னளவில் வானத்திற்கு உயர்த்தி கொண்டான். அவர்கள் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறி இந்த வசனத்தில் வரக்கூடிய "பல்" என்ற சொல்லானது ஒரு விஷயத்தை கூறுகின்றார்கள்.
எமது பதில்: ஒருவர் கொலை செய்யப்படவில்லை என்றாலோ, அல்லது சிலுவையில் அரையப்படவில்லை என்று சொன்னலோ உடனே அவர் வானத்திற்குதான் உயர்த்தப்பட்டிருப்பார் என்ற முடிவுக்கு வருவது சரிதானா...? ரசூல் (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் இருவரும் கூடத்தான் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அரையப்படவுமில்லை ஆகையால் அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று கூறிவிடலாமா...?

இந்த வசனம் மூலம் அவர்கள் வைக்கும் வாதம்: "கதலூஹு" என்பது ஹஸ்ரத் ஈஸா அலை அவர்களின் உடலைத்தான் குறிக்கும். ஆகவே ரஃபஅஹு என்பதும் ஹஸ்ரத் ஈஸா அலை அவர்களின் உடலையே குறிக்கின்றது. அதாவது அவர்கள் எவ்வாறு உடலளவில் கொல்லப்படவில்லையோ அவ்வாறு அவர்கள் உடலளவில் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று வாதம் செய்கின்றார்கள்.



எமது முதல் பதில்: முதல் விஷயம் "ரஃபஅ" என்றால் உடலோடு வானத்திற்கு உயர்த்தப்படுதல் என்ற பொருளே அல்ல. ஆனாலும் ஒரு வாதாதிற்கு வைத்துக் கொண்டாலும், ரஃபஹு என்பது ஹஸ்ரத் ஈஸா அலை அவர்கள் உடலோடு வானத்திற்குதான் உயர்த்தப்பட்டார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. இது சரியா என்பதை நாம் ஆராயும் வண்ணம் குர்ஆனை புரட்டி பார்க்கும்போது இவ்வாறு நமக்கு தெரியவருகிறது. அல்லாஹ் கூறுகிறான்: "லா தகூலு லிமய் யுக்தலு ஃபி சபீலில்லாஹி அம்வாதுன் பல் அஹ்யாஉ இந்த ரப்பிஹிம்.."(2:156) பொருள்: இறைவன் வழியில் இறந்தோரை மரணம் அடைந்துவிட்டார்கள் என்று கூறாதீர்கள் மாறாக அவர்கள் தன் இறைவன் இடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள். இப்போது இந்த வசனத்தை நாம் கூர்ந்து பார்த்தால், இதில் வரும் "அஹ்யாஉன்" என்ற பதம் "மய் யுக்தலு" என்ற பதத்தை சுட்டி காட்டி கூறுகிறது. ஆனால் இங்கு யாரும் அந்த பௌதீக உடலுடன்தான் உயிரோடு இருக்கின்றார்கள் என்று கூறுவதில்லை. மாறாக "மன்" என்ற பதம் கூட இந்த உடலை குறித்துதான் கூறுகிறது. ஆக "ரஃபஅ" என்ற சொல்லுக்கு உடலை சார்ந்தது என்று கூறுவது சரிதானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.

பிறகு அபஸ் என்ற அத்தியாத்தில் இவ்வாறு வருகின்றது: "குதிலல் இன்ஸானு மா அக்ஃபரஹு, மின் அய்யு ஷய்யின் கலகஹு....சும்ம அமாதஹு ஃபஅக்பரஹு. (80:17,18,19,21)
இந்த வசனத்தில் வரக்கூடிய "அமாதஹு" மற்றும் "ஃபஅக்பரஹு" என்ற பதமானது "அல்இன்ஸானை" சுட்டி காட்டுகிறது. இன்ஸான் (அதாவது மனிதன்) ரூஹ் மற்றும் உடலை சார்ந்தவன். ஆக மனிதன் மரணம் அடைந்த பிறகு அவனை கபரில் வைக்கும்போது நாம் ரூஹையும், உடலையும் சேர்த்துதான் வைக்கிறோமா...? மவ்த் என்றாலே "உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுதல்" ஆகும். ரூஹ் உடலுடன் அடக்கம் செய்யப்பட்டால் பிறகு உயிரோடுதான் புதைக்கப்படுதல் என்ற பொருளில் வரும். ஆகவே இங்கு அக்பரஹு எனும் பதமானது உயிரற்ற உடலையே குறிக்கிறது.

இவ்விடம், ஈஸா என்றால் அவரின் உடலும், உயிரும் கலந்ததே ஆகும் அப்படி இருக்க இங்கு ரூஹ் மட்டுமே கூறப்படுகிறது என்று எவ்வாறு கூற முடியும் என்று ஒருவர் கூறினால், அவருக்குண்டான பதில்,
முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவரின் பெயர் பல்வேறு தரத்தை கொண்டு அறியப்படுகிறது. உதாரணமாக செய்து என்பவர் கார் நிறம் கொண்டவர் என்று கூறினால் இவ்விடம் அவரின் உடலை மட்டுமே குறிக்கும். ஆனால் நாம் உயிரும் உடலை கொண்ட "செய்து" என்ற சொல்லை கூறினோம். ஆனால் நாம் சொன்ன சொல் இதனை மறுக்கிறது அதாவது செய்து உடல் ரீதியாகவும், உயிர் ரீதியாகவும் கார் நிறம் கொண்டவர் என்று நாம் சொன்னதாக பொருள் ஆகாது. அல்லது நாம், செய்து நல்லவர் என்று கூறினால் இது அவரின் ரூஹை சார்ந்து இருக்கிறது. இவ்வாறு, ரூஹ் தான் எப்போதும் உயர்த்தப்படுகிறது. இந்த ஒன்றுமற்ற உடலை பற்றி இறைவனின் தீர்ப்பு என்னவென்றால் "இங்கேயே வாழ்வீர்கள், இங்கேயே மரணிப்பீர்கள், இங்கிருந்தே மீண்டும் எழுப்பப்படுவீர்கள்" (7:25)

அடுத்து இந்த வசனம் மூலம் எதிரிகள் எடுத்து வைக்கும் வாதம், " இந்த வசனத்தில் "காணல்லாஹு அசீசன் ஹகீமா" என்று வந்துள்ளது. இறைவன் தானே தனது வல்லமையை எடுத்து வைத்து இங்கு வானத்தை நோக்கி செல்லுதலே பொருள் ஆகும் என்பதை விளக்குகிறான் என்று கூறுகின்றார்கள்.

முதல் பதில்: ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் போது தவ்ர் குகையில் இருக்கும் நேரத்தில் அல்லாஹ் எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய சம்பவத்தை பற்றி கூறி சூரா தவ்பாவில் 40 வசனத்தில் "அல்லாஹு அசீசன் ஹகீமா" என்று கூறுகின்றான். இதை வைத்துக் கொண்டு ரசூல் (ஸல்) அவர்கள் வானத்தில் உயர்த்தப்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாமா?இல்லை மாறாக பூமியில் வைத்தவாறே எதிரிகளிடமிருந்து அல்லாஹ் அவர்களை காப்பாற்றினான் இவ்வாறே அவன் தனது வல்லமையை வெளிப்படுத்தினான் என்றுதான் கூறுவோம். கூறுகின்றோம்.

இரண்டாவது: வல்லமை என்பது எதையும் மறைப்பதற்கு கூறப்படுவதில்லை. மாறாக எதிரிகளை முன்பு வைத்து பாதுகாப்பதை சம்பந்தப்படுத்தியே கூறப்படுகிறது. நீங்கள் கூறுவது படி பார்த்தால் இறைவன் நஊதுபில்லாஹ் கோழையானவன் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏன், இறைவனுக்கு ஹஸ்ரத் ஈஸா அலை அவர்களை பூமியில் வைப்பதற்கு யூதர்களை கண்டு அஞ்சினானா...?...நடுநிலையுடன் சிந்திக்கவும்.


 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.