இப்னு தைமியா பார்வையில் "காதம்" என்பதின் பொருள்

அஹ்மதி அல்லாதவர்கள் காதம் என்றால், இந்த சொல் எதனுடன் சேர்ந்து வருகிறதோ அது இனி கிடையாது, அது முடிந்துவிட்டது இனி தோன்றாது என்ற பொருளை கொடுக்கின்றார்கள். இதன் அடிப்படையில்தான் காதமன் நபிய்யீன் என்பதற்கு நபிமார்களின் இறுதியானவர், ஆகவே இனி எந்த நபியும் கிடையாது என்று ரசூல் (ஸல்) அவர்களை குறித்து கூறி வருகின்றார்கள். ஆனால் காதம் என்பதற்கு பல இமாம்கள் சரியான விளக்கம் கொடுத்திருந்த போதிலும் நாம் கீழே இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை பார்ப்போம். 

இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் (ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், "ஹஸ்ரத் ஆதம் (அலை) மண்ணிலும் தண்ணீரிலும் இருக்கும்போதே அல்லாஹ்வின் பார்வையில் நான் காதமுன் நபிய்யீனாக இருக்கிறேன்". (மிஷ்காதுல் மிஸ்பாஹ், கிதாபுல் ஃபித்ன், முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் பாகம்:4, பக்கம்: 128, கன்ஸுல் உம்மால் பாகம்: 6 பக்கம்: 112)) 
 இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளித்தவாறு மனிதனை குறித்து "காதமுல் மக்லூகாத்" படைப்பிணங்களிலேயே காதம் என்று கூறுகிறார்கள்...இப்போது நாம் கேட்கிறோம், மனிதன்தான் படைப்பிணங்களில் காதம் அதாவது இறுதியானவன் என்றால் இனி எந்த படைப்பும் தோன்றிருக்க கூடாதே.... ஆனால் ஏன் அவ்வாறு நடக்கவில்லை.மனிதனின் படைப்பிற்கு பிறகு எத்தனையோ படைப்பிணங்களை அல்லாஹ் படைத்துள்ளான். படைக்கின்றான்...ஆகவே காதம் என்பதற்கு இறுதி கிடையாது அதுவும் ஒரு பன்மை சொல்லுடன் வந்தால் இறுதி என்ற பொருளில் வராது "ஃபாஸில்" சிறந்தவர் என்ற பொருளிலேயே வரும் என்பதையும் இப்னு தைமியா அவர்கள் அடுத்த வரியிலேயே "ஃபாஸிலுள் மக்லூகாத்" மனிதன் படைப்பிணங்களில் சிறந்தவன் என்று கூறுகிறார்கள். மூல ஆதாரம் கீழே:

ஆன்லைனில் பார்க்க: http://ar.islamway.net/fatwa/16613/%D9%81%D8%B5%D9%84-%D9%81%D9%8A-%D8%A8%D8%B4%D8%B1%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%86%D8%A8%D9%8A

மூல ஆதாரம்:



கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.