பல மடங்கு அருட்களை பெற்றுதரும் நபித்துவம்தான் எம்பருமானர் நபிகள் நாயகம் அவர்களின் நபித்துவம்

சிலர்  33:40 வசனத்தில் வருகின்ற காதமன் நபிய்யீன் என்பதற்கு இறுதி நபி என்று விளக்கம் அளிக்கின்றனர். இங்கு காதம் என்பதற்கு அதவாது "இறுதி" என்பதற்கு வெளிப்படையாகவே ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் "ஆகிர்" அதாவது அரபியில் இதற்கு நேரடியான பொருள் கடைசி, இறுதி என்ற பொருள் இருந்த போதிலும் இந்த ஆகிர் என்ற சொல்லை ரசூல் (ஸல்) அவர்கள் தனக்கு உபயோகப்படுத்தி தான் எந்த அடிப்படையில் நபிமார்களில் இறுதியானவர் என்பதை விளக்கும் வகையில் மஸ்ஜிது நபவியை உதாரணமாக எடுத்து கூறுகின்றார்கள்: அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த மஸ்ஜிது (எவ்வாறு) பள்ளிகளிலேயே இறுதியானதாக ஆகிறாக இருக்கிறதோ அவ்வாறே நபிமார்களில் நான் இறுதியானவனாக, ஆகிறாக இருக்கிறேன் என்று கூறுகின்றார்கள்.(சுனன் நசாயி)




இப்போ கேள்வி என்னவென்றால், ஆகிருல் அன்பியா அதாவது நபிமார்களில் இறுதியானவர் என்றால் இனி எந்த நபியும் கிடையாது என்று பொருள் கொள்வோம் என்றால், மஸ்ஜிது நபவியை தவிர இனி எந்த மஸ்ஜிதும் கிடையாது காரணம் இந்த மஸ்ஜிது நபவியே ஆகிருல் மசாஜிதாக இருக்கிறது பள்ளிகளில் இறுதியானதாக இருக்கிறது என்று பொருள் கொள்ளலாமா? முடியாது. ஆக, பள்ளிகளிலேயே மஸ்ஜிது நபவீயே சிறந்த பள்ளி என்று எவ்வாறு நாம் பொருள் கொள்வோமே அவ்வாறே ஆகிருல் அன்பியா என்ற வார்த்தைக்கும் பொருள் கொள்ளவேண்டும், இதுவே சரியானதும், நியாயமானதுமாகும்.

சிலர்
قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء ومسجدي خاتم مساجد الأنبياء'

(அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் காதமன் நபிய்யீனாக இருக்கிறேன், மேலும் எனது இந்த பள்ளி நபிமார்களின் மஸ்ஜிதுகளில் இறுதியானதாக இருக்கிறது)
என்ற கன்ஸுல் உம்மாலில் வரும் ஹதீஸை வைத்து அவர்கள் கூறும் விளக்கம் என்னவெனில், நபிமார்கள் கட்டிய பள்ளிகளில் இது இறுதியானது என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். ஒரு பள்ளி இறுதி என்பதிலும், நபிமார்களில் இறுதியாக கட்டிய பள்ளிதான் இந்த மஸ்ஜிது நபவீ என்பதிலும் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில்
 “ எல்லா பள்ளிகளையும் விட பல மடங்கு அதிக நன்மையை பெற்று தரும் பள்ளிகளில் மஸ்ஜிதுன் நபவீ தான் இறுதியானது” என்று கூறுகிறார்கள். 

இவர்கள் சொல்லும் இந்த கருத்தைதான் நாங்கள் கூறுகிறோம், ஏன் அது அவர்களுக்கு புரிய மாட்டேங்குது...அந்த மஸ்ஜிது நபவீ இறுதி என்பதில் சிறப்பு இல்லை மாறாக பல மடங்கு நன்மையை பெற்று தரும் பள்ளிகளில் இறுதி பள்ளியே...இதற்குதான் நேரடியாக நாம் "சிறப்பு" என்று சொல்கிறோம். (இந்த கன்ஸுல் உம்மாலில் வரும் இந்த ஹதீஸ் கூட பள்ளிகளின் சிறப்பு என்ற பாடத்தின் கீழேயே வருகிறது..நாம் வைத்த சுனன் நசாயி ஹதீஸ் கூட பள்ளிகளின் சிறப்பு என்ற பாடத்தின் கீழேயே வருகிறது)


.இதே பொருளை அப்படியே "காதமன் நபிய்யீனுக்கும்" பொருத்தி பாருங்கள் நாம் கூறும் பொருளே சரி என்பது விளங்கும்..பல மடங்கு அருட்களை பெற்றுதரும் நபித்துவம்தான் எம்பருமானர் நபிகள் நாயகம் காதமன் நபிய்யீன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்...இதைதான் நாம் காதமுன் நபிய்யீன் என்பதை விளக்கும் வகையில் கூறுகிறோம்...





கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.