காஷ்மீரின் முதலாவது வரலாற்றாசிரியரான முல்லா நாதிரி தனது "தாரீக்கி காஷ்மீர்" (காஷ்மீர் வரலாறு) எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார், "கோபலதத்த ராஜாவுடைய காலத்தில் (கி.பி 49-109) ஹஸ்ரத் யூஸ் ஆசஃப் பைதுல் முகத்தஸிலிருந்து (பாலஸ்தீனத்திலிருந்து) இந்த புனித மண்ணுக்கு (காஷ்மீருக்கு) வந்து தனது நபித்துவத்தை பிரகடனப் படுத்தினார். அவர் இரவும் பகலும் இறை வழிபாட்டில் கழித்ததன் காரணமாக ஆன்ம உயர் நிலையை அடைந்து காஷ்மீர் மக்களுக்கு இறைத் தூதுவரானார். இவர் உண்மையில் ஹஸ்ரத் ஈஸா (இயேசு) ரூஹுல்லா என்பதையும் "யூஸ் ஆசஃப்" என்ற பெயரைக் கொண்டார் என்பதையும் ஹிந்துக்களின் ஒரு நூலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
http://en.wikipedia.org/wiki/Tarikh-i-Kashmir

கி.பி 115 இல் மஹரிஷி வேதவியாச முனிவரால் எழுதப்பட்ட பவிஷ்ய மஹா புராணத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஒரு முறை சாலவாகன் அரசன் (கி.பி 78 இல்) ஹிமாலய பிரதேசத்திற்கு வருகை தந்த பொது வெள்ளையுடை அணிந்த, மகானைப் போன்று தோற்றமளித்த ஒருவரைச் சந்தித்தார். சாலிவாகன அரசன் அவரை யாரென விசாரித்த போது அவர், "நான் இசுபுத்ரம், கன்னிக்குப் பிறந்தவன் மிலேச்ச (அன்னிய) மதத்தின் ஒரு போதகன் உண்மை கொள்கைகளைப் பின்பற்றுபவன் என்றார். அவருடைய மதம் என்ன என்பதை விளக்கச் சொன்னபோது, ராஜாவே, சத்தியம் மறைந்து நல்ல கோட்பாடுகள் அழிந்து போன காலகட்டத்தில் நான் அங்கு தோன்றினேன். என்னுடைய பணிகளால் சமுதாயத்திலுள்ள தீயவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய கரங்களால் எனக்கு பல இன்னல்கள் இழைக்கப்பட்டது, என்று அவர் சொன்னார். அவருடைய மதக் கொள்கைகளைப் பற்றிக் கேட்டபோது, அன்பு, நேர்மை, உள்ளத்தூய்மை ஆகியனவே அவை. இதன் காரணமாகவே நான் ஈஸா-மசீஹ் (இயேசு கிறிஸ்து) என அழைக்கப்பட்டேன். (இயேசு காஷ்மீரில் இறந்தாரா? என்ற தலைப்பில் டிசம்பர் 1984 இல் வெளிவந்த "மிரர்" மாத ஏட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்டவை)
http://en.wikipedia.org/wiki/Bhavishya_Maha_Purana
http://gratisenergi.se/issa.htm
http://deathofjesus.blogspot.com/
http://www.tombofjesus.com/index.php/en/
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None