ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.....!!
(பி.ஜெயினுலாபிதீன் தனது ஒரு வீடியோவில் இரண்டு விஷயங்களை ஒப்புக் கொள்கிறார்)
த த ஜ சகோ....சிந்தனைக்கு....!
ஒன்று.....,பி.ஜெ வும், இவர் என்ன சொல்கிறார் என்பதை ஆராய்ந்து அறியாமல் அவரது கூற்றுதான் வேத வாக்கு என்ற அளவுக்கு பேசக்கூடிய, அவரை பின்பற்றக் கூடிய சீடர்களும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்து சகோதரர்களுடன் ஜமாஅத் அளவிலும், தனிப்பட்ட முறையிலும் விவாதம் செய்து ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை அவர் பூத உடலோடு வானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர். இதற்கு இவர்கள் வைக்கும் ஆதாரம் 4:158 அதாவது #அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான்# என்ற வசனமாகும். அதாவது ரஃபஅஹுல்லாஹ் இலைஹி என்ற பததுக்கு அவர்கள், அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை பூத உடலோடு உயர்த்திக் கொண்டான் என்று பொருள் கொள்கின்றனர். ஆனால் இவரே (பி,ஜெ) ஓரிடத்தில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான் என்றால் அதற்கு பெயர் மரணமே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இரண்டாவது..., ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்று, ஹதீஸை முழுமையாக, மற்ற இடங்களில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயதுக்கு என்ன விளக்கம் , எப்படி கொடுத்துள்ளார்கள் என்பதையெல்லாம் அறியாமல் ஒரு மூட நம்பிக்கையை நம்பி வருகின்ற இவர்களின் தலைவர் பி .ஜெ இது தவறான கொள்கை, நபிக்கு பின் நபி உண்டு என்பதை தன்னை அறியாமல் அவரும் சொல்ல, எப்போதும் இவரின் பயானை கேட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாகா ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பி வரும் இவரின் அடியார்களும் அதனை எப்போதும் போல கேட்டு பி.ஜெ என்ன சொல்கிறார் என்பதை அறியாமல் இருக்கின்றனர். ஆனால் அவரோ ஒரு நபிக்குப் பின் நபி உண்டு என்பதை தன்னை அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் இவர்களின் இன்றய நிலை. தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது நுணலும் தன் வாயால் கெடும் என்று அதே போல் இந்த பி.ஜெ தனது ஒரு வீடியோவில் நான் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கருத்துக்களை, கொள்கைகளை அதாவது ஹஸ்ரத் ஈஸா (அலை) வை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டால் என்றால் அதுக்கு பெயர் அல்லாஹ் அவர்களுக்கு இயற்கை மரணத்தை வழங்கி விட்டான் என்பதையும், அதே போல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நபி கிடையாது என்றால் அது ஷரியத் என்ற நபியை குறிக்கும் மற்ற ஷரியத் அல்லாத நபி வரலாம் என்பதையும் தன்னை அறியாமலையே ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கைக்கு எதிராக இருக்கும் இவர்களின் கொள்கை தவறே என்பதை தனது வாயாலே ஒப்புக் கொண்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்...
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None