திருநெல்வேலி புத்தக கண்காட்சியில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்



திருநெல்வேலி மாவட்டத்தில் 14/06/13 ஆம் தேதி அன்று துவங்கி கடந்த இரண்டு நாட்களாக புத்தக கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அல்லாஹ்வின் அருளால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பாகவும் புக் ஸ்டால் போடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....இந்த புத்தக கண்காட்சிகளின் மூலமாக பலரும் பயன் பெற்று வருகின்றனர் இத்துடன் எமது ஸ்டாலிலும் பலர் தமது ஆன்மீக விஷயத்திற்கு தேவையான, தமது பொது அறிவிற்கு தேவையான நூட்களை வாங்கி கொண்டு சென்றவாறு இருக்கின்றனர். இதில் தமிழ் நாட்டிலுள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவரான திரு சரத்குமார் அவர்களும், அவர்களின் மனைவி திரு ராதிகா சரத்குமார் அவர்களும் எமது ஸ்டாலுக்கு வருகை தந்து அங்குள்ள நூட்களை பார்வையிட்டனர். எமது ஸ்டாலுக்கு வருகை தந்த அவ்விருவர்களுக்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக திருக் குர்ஆனும், அகில உலகத்திற்கும் அருட்கொடையாக வருகை தந்த நமது தூதர் ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்கையின் வரலாறு நூலினையும் அன்பளிப்பாக வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே....

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.