முஹம்மதிய்ய உம்மத்தில் ஈஸா நபியின் வருகை
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை கத்மே நுபுவ்வத்தை மறுக்கக் கூடியதாக குறிப்பிடுகின்ற
ஆலிம்கள்– அவர்கள் அஹ்லே சுன்னத்தாக இருந்தாலும், ஷியாவாக இருந்தாலும்,தேவ்பந்தியாக இருந்தாலும், பரேலவியாக இருந்தாலும்,
அஹ்லே ஹதீஸாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒரு புறம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கத்மே நுபுவ்வத் பற்றி பேசுகின்றனர்.
மேலும் "லாநபிய்ய பஅதிஹி" (எனக்குப் பிறகு நபியில்லை) என்ற நபிமொழிக்கேற்ப ஹஸரத் நபி(ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்குப் பிறகு எல்லா விதமான நுபுவ்வத்தின் வாசலும் அடைபட்டு விடுவதாக நம்புகின்றனர். அத்துடன்,கடைசி காலத்தில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் முஹம்மதிய்ய உம்மத்தின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்குவார் என்றும் அவர் நபியாக இருப்பார்,உம்மதீயாகவும் இருப்பார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்,அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அது பற்றி பாமர மக்களுக்கு அறிவுரையும் கூறுகின்றனர்.
அப்போது, இந்தக் கொள்கை கத்மே நுபுவ்வத்திற்கு மாற்றமானதாகவும் முரண்பட்டதாகவும் இல்லையா? நிச்சயமாக இருக்கின்றது. ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் எல்லா நபிமார்களையும் போன்று
மரணமடைந்து விட்டார்கள். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
வமா முஹம்மதுன் இல்லா ரசூல்; கதுஹலத் மின் கப்லிஹிர் ருசுல் (3:144)
- “முஹம்மது (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) தூதராவார்கள். மேலும் அவருக்கு முன்னுள்ள எல்லா தூதர்களும் காலம் சென்று விட்டார்கள்.” இதிலிருந்து ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் மற்ற நபிமார்களைப் போன்று மரணித்து விட்டார்கள் எனத் தெளிவாக் வெளிப்படுகிறது. ஆயினும், நபிமொழிகளில் ஈஸா இறங்குதல் என்ற சொல்லின் மூலமாக, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என மக்களுக்கு தவறு ஏற்பட்டுவிட்டது. ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த் ஒரு ஹதீஸூம் வராதபோது, அவர் வானதிலிருந்து இறங்குவார் என நேரடி பொருள் கொள்வது தவறாகும்.
ஈசப்னு மர்யம் முஸ்லிம் உம்மதிலிருந்து தோன்றுவார் எனும் பொருள்பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்:
கய்ஃப அந்தும் இசா நஸலப்னு மர்யம ஃபீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும்போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்தே தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்.(புஹாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்:3449).
அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கிறது:
"உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்". (முஸ்னது அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411)
ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்:
"வரக்கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக்கூட கூறவில்லை!
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு; இரண்டாவது மஸீஹ் வேறு என தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்தே தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, அவர் உங்களிலிருந்தே தோன்றும் உங்களின் ஓர் இமாமாக இருப்பார் என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்.
மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் என்பதை தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடயாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.(ரூகானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்:124).
ஹதீஸில் இவ்வாறு வருகிறது:
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈஸா (அலை) பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
"நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்" (புஹாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438)
இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றவிருந்த ஈசப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறு படுத்திக் கூறியிருக்கிறார்கள்:
"ஒருமுறை நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் கஃபாவை வலம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்.....இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது" (புஹாரி கிதாபுல் ஃபிதன் பாகம் 2 பக்கம் 1376-புதிய பதிபு ஹதீஸ் எண்:3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277).
இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உண்ர்த்தி விட்டார்கள்.
முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டதிலிருந்து அவர் மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உண்ர்த்தி விட்டார்கள்.
இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்;பன்றியைக் கொல்வார்;ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்;எந்த காஃபிர் வரை அவருடைய மூச்சுக்காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்து விடுவார் என்பதாகும். எனவே இந்த ஆன்மீக அடையாளத்தின் கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை (கிறிஸ்தவ) மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களின் கீழ் போட்டு நசுக்கி விடுவார்.
மேலும் எவர்களிடம் பன்றிகளின் வெட்கங்கெட்ட தன்மையும் அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலையையும் முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்".(ரூகானீ கஸாயின் தொகுதி 3 பக்கம்:142).
அவ்வாறே ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் கைவிடப்படும் என சஹீஹ் முஸ்லிம்மில் வரும் ஹதீஸ், திருக்குர் ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ள
"பத்து மாதம் கருக் கொன்ட பெண் ஒட்டகங்கள் கைவிடப்படும் போது" (81:4)
என்ற வசனத்தை உண்மைபடுத்தக் கூடியதாக இருக்கிறது. புதிய வாகனங்களின் கண்டுபிடிப்பால் ஒட்டகத்திற்கு அதற்குரிய மதிப்பு இருக்காது என்ற அளவுக்கு இதில் ஓர் அருமையான முன்னறிவிப்பு இருக்கிறது. இந்த முன்னறிவிப்பெல்லாம் நிறைவேறிவிட்டதை இன்று நாம் பார்க்கிறோம்.
இதிலிருந்து, வரக்கூடிய மஸீஹ் 14ஆம் நூற்றாண்டில் தோன்றுவார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவர் இஸ்லாத்தின் கருத்து வேறுபாடுகளும், பகைமையும் இருக்கும் காலத்தில் வருவார். சிலுவையை முறிப்பது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வேலை தான் என்பது உண்மை என்றால் 14ஆம் நூற்றாண்டில் தோன்றும் முஜத்தித் அவருடைய கடமை சிலுவையை முறிப்பதாகும். அவரே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்பதும் உண்மையாகும். காலத்தின் தேவையே அன்னாரது வருகைக்கு ஆதாரமாகும்.
அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தின் கண்களை திறப்பானாக! ஹகமை ஏற்றுக் கொள்பவர்கள் ஆவார்களாக!
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None