விஸ்வரூபம் படத்திற்கு போலி இஸ்லாமிய தலைவர்களின் கருத்து
நேற்றுவரை பீ.ஜெ வும் ஜவாஹிருல்லாஹ்வும் மற்றும் தன்னை இஸ்லாமிய மத்தத்தின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் பெயர் தாங்கி ஆலிம்களும் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய போதனையை தவறாக சித்தரித்து , இஸ்லாமிய போதனையே தீவிரவாத போதனை என்று நச்சு கருத்தை பரப்பக் கூடிய படம்தான் இந்த விஸ்வரூபம் படம் என்று கூறி, அதனை தடை செய்ய வேண்டும், அதில் எந்த காட்ச்சியையும் கட் செய்து கூட போட முடியாது, முழுவதுமாக அதனை வெளியிட தடை செய்ய வேண்டும், மீறி வெளியிட்டால் சமூதாயத்தின் அமைதி, சட்ட ஒழுங்கு சீர்குலையும் என்று சப்தமாக, ஆகோஷமாக பேசிய இவர்கள், ஒரு சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாடு முதலமைச்சர், கமல் ஹாசன் , மற்றும் 24 இஸ்லாமிய தலைவர்கள் கூடி பேசிய போது கமல் ஹாசன் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஒரு சில காட்சிகளையும், வசனத்தையும் அகற்றி விடுகிறேன் என்று கேட்டுக் கொள்ள, இஸ்லாமிய தலைவர்கள் ஓகே சரி என ஒப்புக் கொண்டது ஏன் ? நேற்று வரை இந்த படம் முழுவதுமே இஸ்லாமிய போதனையை தவறாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது, அதனை முழுவதுமாக வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கூறிய இவர்கள், கமல் ஹாசனின் வேண்டுகோளுக்கு பணிந்தது ஏன்? இவர்களின் உள் நோக்கம் என்ன? சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்...!!
இவ்வாறான பொய்யர்கள்
- ஒன்று இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு பார்த்து இதில் உள்ள கருத்துக்கள் இஸ்லாமிய போதனைகளில் இல்லாத கருத்துக்கள் என்று பொய் கூறி இருக்க வேண்டும் இல்லை என்றால்
- இஸ்லாமிய அடிப்படை போதனையினை அறியாதவர்கள் என்று கூற வேண்டும். அதுவும் இல்லை என்றால்
- அரசியலின் சாயலில் இருக்கும் இவர்களின் உள்ளத்தில் ஏதேனும் உள் நோக்கம் இருக்க வேண்டும்...
இந்த மூன்றில் ஒன்று நிச்சயம் இவர்களிடம் இருக்கிறது.. என்பது இவர்களின் கூற்றுக்களை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது....
இவ்வாறானா தனது சுய நலத்தை முன்பு வைத்து நேரத்திற்கு நேரம் தமது தீர்வை தமக்கு சாதகமாக வடிவமைத்துக் கொள்ளும் பொய் இஸ்லாமிய தலைவர்களிடமிருந்தும், மவ்லவிமார்களிடமிருந்தும் இஸ்லாமிய மக்கள் அறிந்து விலகி இருப்பதே அவர்களின் ஈமானிற்கு சிறந்தது, இல்லை என்றால் இவர்கள் நம்மை நரகத்தை நோக்கியே இழுத்து செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக..நல்லவர்களுடன் இருக்க செய்வானாக..ஆமீன்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None