19.02.11- சனி - தென் மண்டல மாநாடு
சனி கிழமை அன்று கலையில் முதல் அமர்வு, மாலையில் இரண்டாம் அமர்வு இவ்வாறு இரண்டு அமர்வு நடந்தது..
முதல் அமர்வு:
ஜனாப் சித்தீக் சாஹிப் மேலபாளையம் அவர்களின் கிராத்துடன் முதல் அமர்வு துவங்கியது. பிறகு ஜனாப் முபாரக் அஹ்மத் சாஹிப் மேலப்பாளையம் அவர்கள் உருது கவிதையில் இனிமையான குரலில் நஸ்ம் பாடினார்கள்.
இதை தொடர்ந்து தென்மண்டல அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் அமீராக விளங்கும் ஜனாப் ஆ.பி.யு. அப்துல் காதிர் சாஹிப் அவர்களின் தலைமையுரை ஆற்றினார்கள். இதில் அவர்கள் காலத்தின் ஆலிம்களின் தவறான போக்கினை விவரித்து கூறினார்கள்.
அடுத்து ஜனாப் முஹம்மது லெப்பை சாஹிப் தூத்துக்குடி ஜமாஅத் தலைவர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். அதில் அவர்கள் இக்காலத்தின் அபாயங்களும் , இஸ்லாமிய பண்புகளை பாதுகாத்தலும் என்ற தலைப்பில் தனது உரையை ஆற்றி இஸ்லாமிய அழகான பண்புகளை எடுத்து கூறி அனைத்து அபாயங்களிலிருந்தும் தவிர்ந்திருப்பதற்கு ஒரு வலி இஸ்லாமே என்பதை எடுத்து கூறினார்கள்.
பிறகு ஜனாப் ஹசன் அபூபக்கர் சாஹிப் தலைமை ஆசிரியர், ரஹ்மானிய ஸ்கூல் , மேலப்பாளையம் அவர்கள் "இயேசு போதித்த ஏகத்துவமும், இன்றைய கிறித்துவமும்" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள். அதில் அவர்கள் இன்றைய கால கிருத்துவர்கள் இயேசு போதித்ததன் படியே நடக்காமல் அவர்கள் ஒரே தேவனாகிய கர்த்தருக்கு இணையாக இயேசுவை வைத்து வணங்கி வருகின்றனர் என்பதை பைபிளின் ஆதாரத்துடன் நிருபித்து உரையாற்றினார்கள்.
இதை தொடர்ந்து மௌலவி முஸ்ஸம்மில் அஹ்மத் சாஹிப் சென்னை அவர்கள் உரையாற்றி " ஹழ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த இறுதி காலத்தின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இவ்வாறு முதல் அமர்வு இனிதே நிறைவுற்றது.
இதற்கிடையில் ஒரு கேள்வி பதில் கூட்டம் நடை பெற்றது. இதில் ரஹ்மானிய பள்ளிக்கூடத்தில் படித்து கொடுக்கும் ஆசிரியர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பிலிருந்து ஜனாப் மௌலவி மஹ்மூத் அஹ்மத் சாஹிப் கேரளா அவர்களும், ஜனாப் ஆ.பி.யு. அப்துல் காதிர் சாஹிப் தென் மண்டல அமீர் தமிழ் நாடு அவர்களும் அழகான முறையில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.
இரண்டாம் அமர்வு:
இரண்டாம் அமர்வு ஜனாப் ஜமாலுத்தீன் சாஹிப் மேலப்பாளையம் அவர்களின் கிராத்துடன், மௌலவி ரபீக் அஹ்மத் சாஹிப் கோட்டார் அவர்களின் இஸ்லாமிய உருது பாடலுடன் துவங்கியது.
தலைமை உரையாக ஜனாப் ஜாபர் அலி சாஹிப் சிவகாசி ஜமாஅத் தலைவர் அவர்கள் ஹழ்ரத் கலீபதுல் மஸிஹ் அவர்கள் தென் மடல் மாநாட்டில் கலந்திருக்கும் அஹ்மதி பெருமக்களுக்கு அனுப்பி தந்த தூது செய்தியினை வாசித்து காண்பித்தார்கள். அதில் அஹ்மதி மக்களுக்கு தொழுகை மற்றும் அல்லாஹ்வின் பால் மக்களை அழைத்தல் மற்றும் கிலாபத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி கொள்ளுதல் சம்பந்தமாக தூது இருந்தது.
முதல் சொற்பொழிவாக ஜனாப் மஹ்மூத் அஹ்மத் சாஹிப் கேரளா அவர்களின் சொற்பொழிவாக இருந்தது. அதில் அவர்கள் "அல்லாஹ்வின் பால் அழைத்தல்" என்ற தலைப்பில் மிக அருமையான முறையில் தப்லிக் பனியின் முறையை விவரித்து கூறினார்கள்.
இதை தொடர்ந்து முஅல்லிம் ஜனாப் நிஜாமுத்தீன் சாஹிப் மேலப்பாளையம் அவர்கள் தமது உரையை ஆற்றி அதில் "குடும்ப வாழ்வில் பெண்களின் பொறுப்பு" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றி பெண்களுக்கான பொறுப்பினை மிகள் அழகாக எடுத்து வைத்தார்கள்.
அடுத்ததாக மௌலவி அப்துர் ரஹ்மான் சாஹிப் சங்கரன் கோவில் அவர்கள் "இமாம் மஹ்தி குறித்து இமாம்களின் முன்னறிவிப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றி ஆதாரத்துடன் ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை பற்றி அவர்களுக்கு முன்புள்ள இமாம்களின் முன்னறிவிப்புகளை எடுத்து வைத்தார்கள்.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜமாஅத் சஹோதர, சஹோதரிகளின் கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டது.கேள்விக்கு பதில் தருவதற்காக ஜனாப் மௌலவி மஹ்மூத் அஹ்மத் சாஹிப் கேரளா, ஆ.பி.யு. அப்துல் காதிர் சாஹிப் அமீர் தென் மண்டலம் தமிழ் நாடு அவர்களும், முஅல்லிம் ஜனாப் நாசிர் அஹ்மத் சாஹிப் அவர்களும் மேடையில் வீற்றிருந்தார்கள்.
இத்துடன் இனிதே இன்றைய இரு அமர்வு முடிவுக்கு வந்தது.
20.02.11- ஞாயிறு - தர்பிய்யத் முகாம்
முதல் அமர்வு:
முதல் அமர்வை தொடர்ந்து ஜனாப் மௌலவி ஜியாவுல் ஹக் சாஹிப் சூரங்குடி அவர்களின் கிராத் மற்றும் ஜனாப் முஹம்மத் சாபிர் சாஹிப் களியக்காவிளை அவர்களின் நஸ்ம் எனும் இஸ்லாமிய பாடலுடன் முதல் அமர்வு துவங்கியது.
முதல் உரையாக ஜனாப் சலீம் அஹ்மத் சாஹிப் காயித் மேலப்பாளையம் அவர்கள் பொறுப்பாளர்களின் கடமை எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இதர பொறுப்பாளர்களை தவிர ஒவ்வொரு அஹம்தியும் பொறுப்பாளர்கள் என்று கூறி ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை கலீபதுல் மசிஹின் மேற்கோள்களை காட்டி மிக அழகாக உரையாற்றினார்கள்.
இதை தொடர்ந்து ஜனாப் மௌலவி ரபீக் அஹ்மத் சாஹிப் கோட்டார் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் தொழுகையின் ஆழ்ந்த கருத்தை முன் வைத்து தொழுகையை எப்போது எவ்வாறு எந்த சூழ்நிலையில் அதை நிறைவேற்றினால் அது உண்மையான தொழுகையாகும் என்பதை கூறி தொழுகையின் முக்கியத்துவத்தை கூறினார்கள்.
அடுத்ததாக ஜனாப் நாசிர் அஹ்மத் சாஹிப் ப்ரோபசர் மேலப்பாளையம் அவர்கள் தமது சொற்பொழிவில் இன்றைய சமுதாயத்தில் கிலாபத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மிக ஆழ்ந்த கருத்தை எடுத்துரைத்து இன்றிய முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அவனில்லை. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கடந்த 120 வருடக்காலமாக கிலாபத் எனும் அருளைக் கொண்டு எந்த அளவுக்கு பலன் பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதை மிக அழகாக கூறினார்கள்.
இதை தொடர்ந்து இன்றைய நாள் ஹழ்ரத் இரண்டாவது கலீபதுல் மஸிஹ் மிர்சா பஷீருத்தீன் (ரலி) அவர்களை பற்றி ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு இறைவன் புறமிருந்து இல்ஹாம் இறங்கிய நாளாக இருந்த பட்சத்தில் அந்த இல்ஹாமை உருதுவில் வாசித்து அதனின் தமிழ் மொழியாக்கத்தை ஜனாப் முஅல்லிம் கலீல் அஹ்மத் சாஹிப் உடன்குடி அவர்கள் உரையாற்றினார்கள்.
அடுத்ததாக முஅல்லிம் ஜனாப் நாசிர் அஹ்மத் சாஹிப் மேலப்பாளையம் அவர்கள் ஹழ்ரத் மிர்சா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) இரண்டாவது கலீபதுல் மஸிஹ் அவர்களின் தூய வாழ்வும், சாதனையும் என்ற தலைப்பில் பேசியவாறு அன்னார் தமது காலத்தில் இஸ்லாத்திற்காக ஆற்றிய சாதனைகள் வரலாறு படைத்த சாதனையாகும் என்று கூறி இன்று வரை அன்னாரின் சாதனைகளின் பிரதிபலிப்பு இருந்து வருகிறது என்பதை எடுத்துரைத்தார்கள்.
இதை தொடர்ந்து மௌலவி ஜனாப் அப்துல்லாஹ் சாஹிப் மேலப்பாளையம் அவர்கள் "ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்விலிருந்து நம்மவர்களுக்கு காட்டித் தந்த முன்மாதிரிகள் என்ற தலைப்பில் பேசியவாறு ஹழ்ரத் காதமுல் அன்பியா (ஸல்) அவர்களின் தூய வாழ்விலிருந்து மிக அழகிய முன்மாதிரியை எடுத்து கூறியவாறு பல சம்பவங்களை எடுத்துரைத்தார்கள்.
இரண்டாவது அமர்வு:
ஜனாப் முஹம்மத் அலி சாஹிப் சங்கரன் கோவில் அவர்களின் கிராத்துடனும், ஜனாப் சலீமுல்லாஹ் சாஹிப் உடன்குடி ஜமாஅத் தலைவர் அவர்களின் அழகிய குரல் கொண்ட இஸ்லாமிய தமிழ் பாடலுடன் இரண்டாவது அமர்வு இனிதே துவங்கியது.
இதை தொடர்ந்து முதல் சொற்பொழிவாக மௌலவி ஜனாப் அப்துல் காதிர் சாஹிப் சிவகாசி அவர்கள் பொருள் தியாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியவாறு பொருள் தியாகம் என்றால் என்ன, அதனை எப்போது எவ்வாறு செய்ய வேண்டும், எந்த வகையில் அதனை இறை வழியில் செலவிடவேண்டும் என்று கூறி திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸின் ஆதாரத்துடன் பொருள் தியாகத்தினை பற்றி எடுத்துரைத்தார்கள்.
இந்த இரண்டு நாள் தென் மண்டல மாநாடு மற்றும் தர்பியத் முகாமின் இறுதி உரையாக தமிழ் நாடு தென் மண்டல அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் அமீராக இருக்கும் ஜனாப் ஆ.பி.யு. அப்துல் காதிர் சாஹிப் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜமாஅத் சஹோதர சஹோதரிகளுக்கு ஒரு சில அறிவுரை கூறி இரண்டு நாள் நடந்த சொற்பொழிவில் கேட்ட விஷயங்களின் படி நடந்து வாருங்கள் என்று கூறி து ஆ வுடன் இந்த மாநாட்டை இனிதே முடித்து தந்தார்கள். ..எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே....


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None