அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் - தொடர் 5

 

அல்லாஹ்வின் வழியில் பொருள் தியாகம் - தொடர் 5

அல்லாஹ் தனது சிறப்பான அருளாலும் கருணையாலும் ஜமாஅத்திலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருள் தியாகத்தின் களத்தில் அசாதாரணமான முறையில் வியக்கதக்க வகையிலுள்ள முன்மாதிரியைக் காட்டுவதற்கான நல்வாய்ப்பை வழங்கியுள்ளான். செல்வந்தர்களுக்கும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக இறைவன் அவர்களுக்கு வழங்கி இருந்த செல்வத்திலிருந்து மனம் திறந்து பொருள் தியாகம் செய்தவாறு செலவு செய்து கொண்டே செல்வதற்கான நல்வாய்ப்பை இறைவன் வழங்கியுள்ளான். ஏழைகளும் கூட தங்களது கலப்பற்ற தன்மையுடனும் நல்ல ஆசையுடனும் தியாகங்கள் செய்வதில் எல்லா வகையிலும் பின்தங்கி விடவில்லை. இது பற்றிய எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. அவற்றில் அரிதாக காணப்படுகின்ற ஒரு சம்பவத்தை இப்போது கூறுகின்றேன்:

இது, காதியானின் ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவமாகும். ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் காலத்தில் நடந்த ஓர் ஏழை அஹ்மதி பெண் செய்த தியாகம் தொடர்பாக எனது தாயார் அவர்கள் பல முறை என்னிடம் கூறியுள்ளார்கள். ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் ஒரு சபையில் பொருள் தியாகம் தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். இந்த ஆதரவற்ற ஏழைப் பெண்ணுக்கு செல்வந்தர்கள் தியாகம் செய்து கொண்டே இருக்கின்றனர். ஆனால், எனக்கு அந்த நற்பாக்கியம் கிடைக்காமல் இருக்கின்றது என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அதனால் அந்த பெண் நிம்மதியிழந்து காணப்பட்டார். மிகவும் நிம்மதியிழந்த நிலையில் அங்கிருந்து எழுந்து அவர் வீட்டிற்குச் சென்றார். வீட்டிலுள்ள எல்லாவற்றையும் விற்று அதன் மூலம் கிடைத்த தொகையை ஆரம்பத்திலேயே அவர் சந்தாவாக கொடுத்திருந்தார். வராந்தாவில் ஒரு கோழி இருந்தது. அது அவரது கண்ணில் பட்டது. அவர் அந்த கோழியைக் கொண்டு வந்து ஹுஸூர் அவர்களிடம் கொடுத்தார். பிறகு நிம்மதியிழந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பி வந்து மூன்று முட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து அதையும் அவர் வழங்கினார். தியாகம் பற்றிய உணர்வு எந்த அளவு அதிகமாக அவருக்கு இருந்தது என்றால் அமைதியாக உட்காருவது அவருக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. அந்த சபையில் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் எழுந்து மீண்டும் தனது வீட்டிற்குச் சென்று தான் கொடுப்பதற்கு வீட்டில் ஏதாவது பொருள் இருக்கின்றதா என்று பார்வையிட்டார். அந்த பெண்ணின் கணவர் உடைந்து போன ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தார். கணவர் அவளிடம் இப்போது நீங்கள் என்ன தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்? எல்லாவற்றையும் நீங்கள் கொடுத்து விட்டீர்கள். வீட்டில் இப்போது எதுவும் இல்லை என்று கூறினார். தன்னிடம் இருந்த அனைத்தையும் இறைவனின் வழியில் வழங்கி விடுவதாக சபதம் எடுத்திருந்த அந்த பெண் மிகவும் கோபத்துடன் தனது கணவரைப் பார்த்து அமைதியாக இருங்கள். எனக்கு சக்தி இருந்தால் உங்களையும் விற்று அந்த தொகையை சந்தாவாக கொடுத்திருப்பேன் என்று கூறினார். (அஹ்மதிய்யத் னே துன்யா கோ கியா தியா பக்கம் 49)

முடிவுரை:

இஸ்லாம் மற்றும் அஹ்மதிய்யத்தின் மீது பேரன்பு கொண்டிருந்த இவர்கள் செய்திருக்கின்ற தியாகங்கள் மற்றும் அவர்களது அர்ப்பணிப்பு மனப்பாங்கை எடுத்துக் காட்டுகின்ற ஈமானுக்கு வலுவூட்டுகின்ற முன்மாதிரிகளும் நம்மை தியாகம் செய்வதற்கு அழைக்கக் கூடியவையாக இருக்கின்றன. இந்த சம்பவங்களைப் படித்து விட்டு ஒரு சில நொடிகள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு அல்லது வியப்பில் ஆழ்ந்து விட்டு இருந்து விடுவது போதுமானது அல்ல. மாறாக, இந்த தூய முன்மாதிரிகளை உங்களது வாழ்விலும் தொடர்ந்து நீடிக்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். இந்த வழியில் சென்றவர்கள் தமது இலக்கை அடைந்து விட்டனர். பொருள் தியாகம் செய்கின்ற இந்த வழிகளில் முழுமையான நன்றியுணர்வுடன் முன்னேறிச் செல்ல வேண்டியது நமது கடமையாக இருக்கின்றது. தியாகங்களின் எந்த கொடியை நமது மூதாதையர்கள் இறக்காமல் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தனரோ அதனை நாமும் நமது உயிரை அர்ப்பணித்தவாறும் நமது பொருள்களைத் தியாகம் செய்தவாறும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். எவ்வகையிலும் அஹ்மதிய்யதிற்கு எந்த ஒரு களங்கமும் அவப்பெயரும் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உலகம் தற்காலிகமானது; சில நாட்கள் மட்டுமே அது நம்முடன் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் ஒரு நாள் இந்த தற்காலிக தங்குமிடத்தை பின்னால் விட்டு விட்டு மறுமைக்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதிருக்கின்றது. நாம் இந்த மறுமை பயணத்திற்காக எந்த பயண உணவை ஆயத்தம் செய்து வைத்திருக்கின்றோம் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும், இது நாம் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். எவரது மூளையிலாவது எனது சொத்துக்களையும் மாளிகைகளையும் செல்வங்களையும் நிலங்களையும் நான் உலகை விட்டு விட்டு செல்லும்போது என்னுடன் எடுத்துச் செல்வேன் என்ற எண்ணமிருந்தால் அந்த நபரை விட அறிவற்ற மனிதர் வேறு யார் இருக்க முடியும்? இந்த உலகில் வருகின்ற ஒவ்வொரு நபரும் வெறுங்கையோடுதான் வருகின்றார். வெறுங் கையோடுதான் திரும்பிச் செல்கின்றார். உலகின் இந்த எல்லா செல்வங்களும், பொருளும், எல்லா சொத்துக்களும், இன்னும் சொல்வதென்றால் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் ஆகிய அனைவரும் இந்த உலகிலேயே இருந்து விடுவர். மரணித்தவருடன் இவ்வுலகில் ஏதாவது ஒரு பொருள் செல்கின்றது என்றால், மேலும் மறுமையில் அவருக்கு ஒரு பொருள் பயன்தரக் கூடியதாக இருக்க முடியுமென்றால் அது அவரது நற்செயல்களேயாகும்.

இந்த நற்செயல்களில் ஏனைய நன்மைகளை தவிர பொருள் தியாகத்திற்கும் ஓர் உயர்வான இடம் இருக்கின்றது. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வத்தை மகிழ்ச்சியுடன் அவனது வழியில் நீங்கள் செலவு செய்தவாறு இறைவனின் திருப்தி என்ற செல்வத்தை நீங்கள் பெற்று விட்டால் பிறகு இந்த தியாகம்தான் மறுமையில் மனிதனுடன் அவனது பயண உணவாக அவனுடன் இருக்கக் கூடியதாகும். இதுவே அனைவரும் எழுப்பப்படும் அந்த நேரத்தில் அவனுக்கு துணை நிற்கக்கூடிய உண்மையான செல்வமாகும்.

ஹஸ்ரத் சாஹிப் ஸாதா மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் எம். ஏ (ரலி) அவர்கள் தமது உருது கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்கள்.

"இந்த தங்கமும் செல்வமும் எல்லாம் இந்த உலகிலேயே இருந்து விடும். மறுமையில் நாம் எழுப்பப்படும் நாளில் நமக்கு பயனளிக்கக்கூடிய தங்கத்தை நீங்கள் உருவாக்குங்கள்."

எனவே, நம்மில் எவரும் உலகில் நாம் சம்பாதித்த செல்வம் மறுமையில் நமக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் என்ற தவறான எண்ணத்திற்கு இரையாகி விட வேண்டாம். அழிந்து போகக் கூடிய இந்த செல்வத்தை இறைவனின் வழியில் தியாகம் செய்தவாறு அல்லாஹ்வின் திருப்தியின் நிரந்தரமான, என்றும் அழியாத செல்வத்தைப் பெற்றுக் கொள்பவரே அறிவுள்ள, வெற்றி பெற்ற மனிதராக இருக்கின்றார். அவர் ஒருபோதும் செல்வத்தை செலவு செய்வதன் மூலமாக அதில் குறைவு ஏற்பட்டு விடும் என்ற சந்தேகத்தில் ஒருபோதும் வீழ்ந்து விடுவதில்லை. இது ஷய்த்தான் ஏற்படுத்தக்கூடிய ஒரு சந்தேகமாகும். உண்மை என்னவென்றால், இறை வழியில் செல்வத்தை செலவு செய்வதனால் செல்வம் குறைவதில்லை. மாறாக, நமது கணிப்பிற்கு அப்பாற்பட்ட நிலையில் அது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தமது ஒரு ஃபார்ஸி கவிதையில் இவ்வாறு கூறுகின்றார்கள்:

இறைவனின் வழியில் செல்வத்தைச் செலவு செய்வதன் மூலம் ஒருபோதும் எந்த ஒரு நபரும் ஏழையாகி விட மாட்டார். மனிதன் இவ்வழியில் வீரத்துடன் செயல்பட்டவாறு தைரியத்துடன் நிற்கும்போது சுயமே இறைவனே அவருக்கு உதவி செய்பவனாகவும் ஆதரவு அளிப்பவனாகவும் ஆகி விடுகின்றான்.

ரஹ்மானான இறைவனின் அருட்கொடைகள் நிறைந்த சுவர்க்கத்தைப் பெற வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரும் உண்மையான வாக்குறுதியைக் கூறுபவனாகிய இறைவனின் வாக்குறுதிகள் மீது முழுமையான நம்பிக்கை வைத்தவாறு பொருள் தியாகத்தின் எல்லாக் களங்களிலும் எந்த அளவு மகிமையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் இவ்வுலக வாழ்க்கையிலேயே  தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக. மேலும் எனது சுவர்க்கத்தில் நுழைந்து விடுக. (89:30-31) என்ற நற்செய்தியை இறைவனிடமிருந்து அவர் செவிமடுக்க வேண்டும். எனது வழியில் தன்னை அர்ப்பணித்து விட்ட எனது அடியார்களே! நீங்கள் ஓடிவந்து எனது திருப்தியின் நிரந்தரமான சுவர்க்கத்தில் நுழைந்து விடுங்கள் என்ற நற்செய்தியை அவர் தமது காதால் கேட்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய நன்மக்களின் அணியில் சேர்த்து விடுவானாக. ஆமீன். (முற்றும்)

-மவ்லானா அதாவுல் முஜீப் சாஹிப் ராஷித் (இலண்டன் ஃபஸ்ல் பள்ளிவாயிலின் இமாம்)

நன்றி: பத்ர் வார இதழ் பத்திரிகை

 

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.