ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
"அதாவது திருக்குர்ஆனின் காரணமாக உங்களுக்கு சந்தேகம் தோன்றிவிட்டது என்ற உங்களின் இந்த வாதம் பொய் என்பதன் பக்கம் சுட்டிக் காட்டுவதற்காக, உங்களுக்கு திருக்குர்ஆனின் காரணமாக சந்தேகம் தோன்றியிருந்தால் இவ்வாறு இவ்வாறு செய்யுங்கள் என திருக்குர்ஆன் கூறியுள்ளது. அரபியில் ஒரு வாக்கியம் உள்ளது:
'நீ எனது அடிமை என்றால் என்னை பின்பற்று.' நான் உங்களின் அடிமை ஆவேன் என ஒரு மனிதர் பொய்யான வாதம் செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இது கூறப்படுகிறது. இதற்கான பதிலை பின்பற்றப்படுபவர் இவ்வாறு கூறுகிறார்:
'நீ எனது அடிமையாக இருக்கின்றாய் என்ற உனது இக்கூற்றில் நீ பொய்யன் ஆவாய்! உண்மையானவனாக இருக்கிறாய் என்றால் நீ என்னை பின்பற்று. ஆனால் நீ பின்பற்றாமல் இருப்பதிலிருந்து வாயினால் மட்டுமே அடிமையாக இருக்கிறேன் என்ற வாதம் செய்வது தெரிந்துவிடுகிறது.'
இதே பொருளில் தான் இங்கு اِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ எனும் சொற்கள் (2:24) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது உங்களை திருக்குர்ஆன் திருக்குர்ஆன் சந்தேகத்தில் ஆழ்த்திவிட்டது என நீங்கள் வாதிக்கின்றீர்கள், அது பொய்யாகும். உண்மையாக இருந்திருந்தால், இதேபோன்ற ஒரு அதிகாரத்தை உருவாக்கி முன்வைத்து, இதற்கான சான்றை இவ்வாறு உங்களால் வழங்கியிருக்க முடியும். ஆனால் நீங்கள் இது போன்ற அதிகாரத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகூட செய்யாமல் இருப்பதிலிருந்து, திருக்குர்ஆன் உங்களை சந்தேகங்களில் ஆழ்த்திவிட்டது என்ற உங்களது இந்த வாதம் தவறு என்பது தெரியவருகின்றது; வெறும் தட்டிக் கழிப்பாக மட்டுமே இருக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் உள்ளங்களில் சந்தேகங்களை தோற்றுவிக்கும் அளவிற்கு தீய தாகவும் கெட்டதாகவும் இருக்கும் வசனத்திற்கு நிகரானதை ஒரு குழந்தையால் கூட கொண்டுவர முடியும். ஆனால் ஒட்டுமொத்த நிராகரிப்பாளர்களும் அவர்களின் உதவியாளர்களும் ஒன்று சேர்ந்தும் கூட இதற்கு நிகரானது கொண்டுவர முடியவில்லை இன்னும் சொல்லப் போனால் அதற்கான முயற்சியை செய்வதற்கு கூட தைரியம் வரவில்லை. எனவே அவர்களின் செயலிலிருந்து அவர்கள் தங்களின் வாதத்தில் பொய்யர்கள் என்பது நிரூபணமாகிறது.
ஆட்சேபனை செய்வது எளிதான காரியமாகும். எந்த ஒரு மனிதரும் தனக்கு போட்டியாக இருப்பவற்றிற்கு எதிராக ஆட்சேபனை செய்துவிடலாம். உண்மையை நிராகரிப்பவர்கள் எப்போதும் ஆட்சேபனை செய்வதுவரையே தங்களின் தாக்குதலை வரையறுத்துக் கொள்கின்றனர். ஒருபோதும் எந்த உறுதியான செயலையும் எதிர் நடவடிக்கையாக செய்வதில்லை. இதிலிருந்து அவர்களின் நோக்கமும் வெளிப்படுகிறது, அவர்களின் ஆட்சேபனையையின் உண்மை நிலையும் வெளிப்படுகிறது. திருக்குர்ஆனை நிராகரிப்பவர்களின் நிலையும் இதுவேயாகும். அவர்கள் திருக்குர்ஆன் மீது ஆட்சேபனை தான் செய்கின்றார்களே தவிர அதற்கு எதிராக; அதைவிட சிறந்ததாக இல்லாவிட்டாலும் அதற்கு நிகராகவாவது இருக்கக்கூடிய எந்த போதனையும் முன்வைப்பதில்லை. இன்றுவரை திருக்குர்ஆனின் எதிரிகளின் நிலை இவ்வாறே இருந்துவருகிறது. கிறித்தவ எழுத்தாளர்கள் திருக்குரான் மீது ஆட்சேபனை செய்து கொண்டே செல்கின்றனர். ஆனால் இன்றுவரை, இதற்கு நிகரானதை கொண்டு வாருங்கள் என்ற இந்த சவாலை நிறைவேற்றுவதற்கு அவர்களால் துணிய முடியவில்லை. திருக்குர்ஆன் இன்ஜீலின் இன்ன விஷயங்களை திருடிக் கொண்டது, தவ்ராத்திலிருந்து இன்ன விஷயங்களை எடுத்துக்கொண்டது, ஜுராஸ்டிஸ வேதநூலில் இருந்து இன்ன போதனையை எடுத்துக் கொண்டது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்ஜீல், தவராத் மற்றும் ஜுராஸ்டிஸ வேதநூல்களில் இருந்து கருத்துக்களை எடுத்து சுயமாக, திருக்குர்ஆனைப் போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு வேத நூலை உருவாக்குவதற்கு துணிவதில்லை. தேனைக் குறித்து மனிதன், தேனீக்கள் பூக்களிலிருந்து மணத்தை எடுத்துக்கொண்டது, பூக்களிலிருந்து இனிப்பை எடுத்துக் கொண்டது என எளிதாக ஆட்சேபனை செய்து விடலாம். ஆனால் அதனைப் போன்ற தேனை உருவாக்கிக் காண்பிக்கும் போதுதான் விஷயம் செல்லுபடியாகும். நல்ல பொருள்களை பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து ஒரு புதிய மற்றும் உயர்வான பொருளை உருவாக்குவது என்பதும் ஒரு சிறப்பாகும். இது எளிதான விஷயம் என்றால் ஆட்சேபனை செய்பவர்கள் இப்படிப்பட்ட செயலைச் செய்து ஏன் காண்பிப்பதில்லை!"
(தஃப்ஸீரே கபீர்-பாகம் 1, 2: 24 வசனத்தின் விளக்கத்தின் கீழ்)
மொழியாக்கம்: முஅல்லிம் M.முஸ்ஸம்மில்-தூத்துக்குடி
மிகச் சுருக்கமான அருமையான தெளிவான கருத்து கிருத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!
பதிலளிநீக்கு