ஆறு வயதையே அடைந்த ஆயிஷாவை, முஹம்மது திருமணம் செய்தார்களா? திருமணத்திற்கான சரியான வயது என்ன?
இஸ்லாமிய போதனைகள் மிகத் தெளிவாக உள்ளன. உடலளவில் முதிர்ச்சி பெற்ற ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் தமது திருமணத்திற்கான விருப்பத்தை தாமாகவே சுதந்திரமாக தெரிவிக்கலாம். பெண்களது விருப்பத்திற்கு மாறாக அவளுக்கு திருமண ஏற்பாடு செய்வதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
நம்பிக்கையாளர்களே! பெண்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்வது சட்டப்படி ஆகுமானது அன்று! (திருக்குர்ஆன் 4:20)
இது மிகச் சாதாரணமான மற்றும் வெளிப்படையான கருத்தாகும். மேலும் சில நாடுகளில் திருமணத்திற்கான, வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை மதிப்பதுடன் பின்பற்றவும் வேண்டும்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்த காலத்திலும், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் திருமணம் செய்யவில்லை. ஆனால், அது 12 முதல் 13 வரை வயதில் ஆகும் என அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நவீன காலத்திலும், ஏன் வளர்ந்த நாடுகளிலும் இந்த திருமண வயது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகும்.
இன்றைய விமர்சகர்கள் கூட தொடர்ந்து தகுதியற்ற முறையில் ஹஸ்ரத் நபி (ஸல்) மற்றும் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுடைய திருமணம், குறிப்பிட்ட வயதில் நடை பெறவில்லை எனவும், ஆறு வயதில் திருமணம் நடைபெற்றதாகவும் விமர்சிக்கின்றனர். உண்மையில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) சுமார் 15 வயதின் போது தமது விருப்பத்துடன் பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்ததாகவும் இன்னும் சில அறிவிப்புகளில், திருமணத்தின் போது அவரது வயது 19 அல்லது 20 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றின் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இந்த முடிவுக்கு வலு சேர்கின்றன.
இஸ்லாத்தின் வரலாற்றை ஆராய்வதற்கு முன், திருமணம், திருமணத்திற்கான வயது வரம்பு, காலம், கலாச்சாரம் மற்றும் மதத்தின் அடிப்படை நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, திருமணம் சமூக கட்டமைப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, இயேசுவின் தாயார் மரியாள் அவர்களது திருமணம் குறித்து கத்தோலிக்க என்சைக்ளோபீடியா இவ்வாறு கூறுகிறது:
பாதிரியார் யூதேயின் மூலம், 12 முதல் 14 வயது உடைய மரியாவுக்கு, திருமணம் செய்ய ஒரு மரியாதைக்குரிய யூதரை கண்டுபிடிக்க விரும்புவதாக அறிவித்தார். அதன்படி 90 வயதை உடைய ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் எருசலேமுக்கு சென்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களது திருமண அறிவிப்பு நிறைவேற்றப் பெற்றது. (The Catholic Encyclopedia: An International Reference of Work on the Constitution, Doctrine, Discipline, and History of the Catholic Church, vol 8. (New York: Robert Appleton Company), 505.
அதேபோல், தாலமூதில் "ஒருவரின் மகளை முடிந்தவரை வயதுக்கு வந்தவுடன், திருமணம் செய்து கொடுக்க பரிந்துரைக்கிறது. அது அவருடைய அடிமைக்கு ஆனாலும் சரியே!" (Talmud, Pesachim 113a)
உண்மையில், தாலமூத் திருமணத்தைப் பற்றிய சில விசித்திரமான வழிகாட்டுதல்களை முன்வைக்கிறது, மேலும், “மூன்று வயதுக்கு ஒரு நாள் அதிக வயதை யடைந்த பெண் திருமண பந்தத்தால் பெறப்படலாம், மேலும் இறந்த அவரது கணவரின் சகோதரர் அவளுடன் இணைந்தால், அவள் அவனுடையவளாவாள்” என்று குறிப்பிடுகிறது..(Talmud, Sanhedrin 55b)
எனவே, கத்தோலிக்க என்ஸைக்லோபீடியா சொல்வது போல் மரியாள்-ஜோஸப் திருமணம் 12 முதல் 14 வயது மற்றும் 90 வயதில் நடந்திருப்பதால், தாலமூதும் மூன்று வயது ஒரு நாள் நிறைவடைந்தால் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இது கிறித்துவம் மற்றும் யூத மதம் மீதான தாக்குதல் போலத் தெரியாதபடி, அது மேற்கின் திருமணச் சட்டங்களைக் கருத்தில் கொள்கிறது. ஸ்காட்லாந்தில் பல நூற்றாண்டுகளாக, சிறுமிகளுக்கான சம்மதத்தின் வயது பன்னிரண்டு - மற்றும் பெற்றோரின் ஒப்புதல் தேவையற்றது என்று கருதப்படுகிறது. (E. Ewen, “The early modern family” in T. M. Devine and J. Wormald, eds, The Oxford Handbook of Modern Scottish History (Oxford: Oxford University Press, 2012), 271)
1929 ஆம் ஆண்டில்தான் வயது பதினாறு ஆக உயர்த்தப்பட்டது. (Ibid) அமெரிக்காவில் இன்றும் கூட, நபிகள் நாயகத்துடன் ஹஸ்ரத் ஆயிஷா ஒப்புதல் அளித்த திருமணம் செல்லுபடியாகக் கூடியதாக கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நியூ ஹாம்ஸ்பயரில், பெற்றோரின் ஒப்புதலுடன் சிறுமிகளுக்கான சட்டப்பூர்வ திருமண வயது பதின்மூன்று ஆகும். (Entry for New Hampshire at http://topics.law.cornell.edu/wex/table_marriage#g) மஸ்ஸாசூசெட்ஸில், பெற்றோரின் ஒப்புதலுடன் சிறுமிகளுக்கான சட்டப்பூர்வ திருமண வயது பன்னிரண்டு. (Entry for Massachusetts at http://topics.law.cornell.edu/wex/table_marriage#g) மிசிசிப்பியில், பெற்றோரின் ஒப்புதல் இருக்கும் வரை, சிறுமிகளுக்கு குறைந்தபட்ச திருமண வயது இல்லை. (Entry for Mississippi at http://topics.law.cornell.edu/wex/table_marriage#g) கலிஃபோர்னியாவில், பெற்றோரின் ஒப்புதல் இருக்கும் வரை, சிறுமிகளுக்கு குறைந்தபட்ச திருமண வயது இல்லை. (Entry for California at http://topics.law.cornell.edu/wex/table_marriage#g)
இன்றல்ல, மாறாக அமெரிக்க அரசு சட்டங்கள் பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன என்பது உண்மைதான். அதே போன்று பொதுவாக பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் அமெரிக்கர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. எவ்வாறாயினும், தற்போதய அமெரிக்க வரலாற்றில் கூட, அமெரிக்கர்கள் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் (அல்லது அதைவிட இளையவர்களாக) திருமணம் செய்து கொள்வதை மதிக்கின்றனர். ஆட்சேபனை செய்வதில்லை, அந்த மதிப்பை உறுதிப்படுத்த அந்தந்த மாநில சட்டமன்றங்கள் மூலம் சட்டங்களை இயற்றினர். இந்த நடவடிக்கை எந்த வகையிலும் அத்தகைய திருமண வயதுக்கு திரும்புவதற்கு வாதிடுவதில்லை. மாறாக, பொருத்தமான, திருமண வயது என்பது எப்போதும் மாறிவரும் சமூக கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்று பறைசாற்றுகிறது. எனவே இன்றைய சூழலில் அதனை எதிர்ப்பதில்லை.
ஆகவே, ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை, அவர்களது பதினைந்து வயதில் திருமணம் செய்து இருந்தாலும், அதற்கு குற்றம் சாட்டப்பட்டால், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, ஐரோப்பா மற்றும் ஏராளமான அமெரிக்க மாநிலங்களையும் நாம் குற்றம் சாட்ட வேண்டும். அமெரிக்க திருமணச் சட்டங்களைப் பற்றி இதுவரை அறியப்படாத மற்றும் அதிர்ச்சியூட்டும் சட்டம் என்னவென்றால், அமெரிக்காவில் குழந்தை திருமணம் இன்னும் சட்டபூர்வமானது.
அதன்படி, 2000ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. சில குழந்தைகள் 11 வயதிற்குட்பட்டவர்கள். (Chris Baynes, “More than 200,000 children married in US over the last 15 years,” available at http://www.independent.co.uk/news/world/americas/200000-children-married-us-15-years-child-marriage-child-brides-new-jersey-chris-christie-a7830266.html)
ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை விமர்சிப்பவர்கள் எப்படி அமெரிக்காவில், குழந்தை திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட இந்த தொற்றுநோயைக் கண்டும் மவுனமாக இருக்கிறார்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஸ்ரத் ஆயிஷாவின் திருமணம் காலத்தையும், கலாச்சாரத்தையும் ஒப்பிடும்போது, ஏன்! இக் காலத்துடன் ஒப்பிடும்போதும் எந்த வகையிலும் நடைமுறைக்கு மாற்றமானதல்ல. எனினும், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் திருமணத்தின்போது ஆறு வயதுதான் என்ற இவர்களின் கூற்று அபத்தமானது.
ஹதீதின் நம்பகத்தன்மையை நிர்ணயிப்பதில், ஒரு ஹதீஸை மூலத்துடன் எத்தனை வெவ்வேறு அறிவிப்பாளர்கள் தொடர்புபடுத்த முடியும் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். அந்த ஆதாரம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்), ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அல்லது ஒரு தோழர் அறிவித்த மூல அறிவிப்பாகும். மிகவும் உறுதியான அறிவிப்பாளர்கள் இருக்கிறார்கள், மேலும் அவர்கள் அறிவிப்பதில் ஒருவருக்கொருவர் உடன்படுகிறார்கள். - அந்த ஹதீஸை நாம் மிகவும் நம்பகமானதாகக் கருதலாம்.
ஹஸ்ரத் ஆயிஷாவின் திருமணத்தின்போது ஆறு வயது என ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே உள்ளன, இன்னும் பல சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையான அறிவிப்புகள் அவர் பதின்ம வயதினராக இருந்ததைக் குறிக்கின்றன. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நேரத்தில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) பதினைந்து அல்லது பதினாறு அல்லது பத்தொன்பது அல்லது இருபது வயதுடையவராக இருக்கலாம் என்பதை பல வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஹதீத் அறிவிப்புகள் நிரூபிக்கின்றன. விமர்சகர்கள் இவை ஒவ்வொன்றையும் புறக்கணிக்கின்றனர். அதன்படி, திருமணத்தின்போது ஹஸ்ரத் ஆயிஷாவின் வயது, பதினைந்து முதல் இருபது வரை என்பதை உறுதிப்படுத்தும் பல வாதங்களில் மூன்றை மட்டும் இங்கே காணலாம்.
முதலில், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி), ஹஸ்ரத் அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள் ஆவார்கள். இமாம் தபரி அவர்கள் அறிவிக்கையில், “(அபூபக்கரின்) நான்கு குழந்தைகளும் அவருடைய இரு மனைவியரிடமிருந்து இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் பிறந்தவர்கள். (அதாவது கி.பி 610-க்கு முன்).” (Al-Tabari, Tarikh al-umam wal-mamloo’k, vol. 4 (Beirut: Dar al-fikr, 1979), 50) ஹஸ்ரத் ஆயிஷாவின், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனான திருமணம், ஹிஜ்ரி (மதீனாவுக்கு குடிபெயர்ந்தது) ஒரு வருடம் கழித்து அல்லது கி.பி 624 இல் நடந்தது. ஆகையால், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தை வாதிப்பதற்கு ஒரு வருடம் முன்னரே கி.பி 609-ம் ஆண்டில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) பிறந்திருந்தாலும், 623-ல் மதீனாவுக்கு குடிபெயர்ந்தபோது அவர் சுமார் பதினான்கு வயதாக இருந்திருப்பார், எனவே, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் திருமணமானபோது ஹஸ்ரத் ஆயிஷா வின் வயது 15-ற்கும் குறைவானது அல்ல. விமர்சகர்கள் வலியுறுத்துகின்ற ஆறு வயது என்ற கூக்குரல் அபத்தமானது.
அதேபோன்று, பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் ஹஸ்ரத் ஆயிஷாவின் மூத்த சகோதரியான ஹஸ்ரத் அஸ்மா (ரலி) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷாவை விட பத்து வயது மூத்தவர் என்று தெரிவிக்கின்றனர். (Imam Az-Zahabi, Siyar A`la’ma’l-nubala’, vol. 2 (Beirut: Mu’assasatu’l-risala’h, 1992), 289) தஹ்ஸீபுத் தஹ்ஸீப் மற்றும் அல்-பிதாயா வன்நிஹாயா என்ற இந்த இரண்டு புத்தகங்களும் ஹஸ்ரத் அஸ்மா தமது 100 வது வயதில், ஹிஜ்ரி 73 (கி.பி 695)இல் மரணம் அடைந்தார் என்று அறிவிக்கின்றன. (Ibn-e-Kathir, Al-Bidaayah wa an-Nan-Nihaayah, vol. 8 (Al-jizah: Dar al-fikr al-`arabiy, 1933), 371–372) இதன் படி, ஹஸ்ரத் அஸ்மா (ரலி) குடியேற்ற நேரத்தில் இருபத்தேழுக்கு குறைவானவராக இருக்க வாய்ப்பில்லை. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனான ஹஸ்ரத் ஆயிஷாவின் திருமணம் ஹிஜ்ரி 1-ல் அல்லது சில ஆதாரங்களின் படி ஹிஜ்ரி 2-ல், அஸ்மா இருபத்தெட்டு வயதில் இருந்தபோது நடை பெற்றுள்ளது. இதன் படி குறைந்தபட்சம், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனான திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தபோது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுடையவராக இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
நிறைவாக, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர்ப்பாளர்கள் யாரும் இந்த திருமணத்தை அவரது வாழ்நாளில் அல்லது அதற்குப் பிறகு எதிர்க்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. நபிகளாரை எதிர்ப்பதற்கும், அவதூறு கூறுவதற்கும் எந்தவிதமான காரணத்தையும் வீணாக்காத இத்தகைய நபர்கள், இந்த பொருத்தமற்ற திருமணத்தைக் கண்டும், முற்றிலும் அமைதியாக இருந்தனர்.
அவ்வாறு இருக்க எப்படி முடியும்?
ஒரே தர்க்கரீதியான விளக்கம் என்னவென்றால், இந்த திருமணத்தைப் பற்றி ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை, ஏனென்றால், அது இரு முதிர்ச்சியடைந்த கூட்டாளர்களிடையே நடைபெற்ற இருமனம் ஒன்று பட்ட திருமணம் ஆகும்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சகர்கள் அவரது சமகாலத்தவர்களைக் காட்டிலும் அவரது பண்புகள் மற்றும் செயல்களுக்கு சிறந்த நீதிபதி என்று கருதுவது நகைப்புக்குரியது. திருக்குர்ஆனை ஓதும் போது, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த வாதத்தை முன்வைத்தார்கள்:
"உண்மையிலேயே, இதற்கு முன்பு நான் உங்களுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கிறேன். அப்போதும் உங்களுக்கு புரியவில்லையா?” (திருக்குர்ஆன் 10:17) இந்த திருக்குர்ஆன் வசனத்தில், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிப்பவர்கள் அவரது முழு வாழ்க்கையையும் பிரதிபலிக்கவும், அவர்களது பண்பில் ஒரு குறைபாடு, அவர்கள் செய்த ஒரு அநீதி அல்லது அவர்கள் சொன்ன ஒரு பொய்யை மேற்கோள் காட்டவும் நினைவூட்டப்படுகிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாதத்திற்கு முன்னும் பின்னும் ஒரு சமகாலத்தவரான நண்பர் அல்லது எதிரி, நட்பு அல்லது விரோதி ஆகியோரால் கூட அவர்களது நபித்துவ வாதத்தை தவிர ஒரு குறைபாட்டையும் மேற்கோள் காட்ட முடியாது என்று வரலாறு பதிவு செய்கிறது.
அதன்படி, நபித்துவ வாதத்திற்குப் பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பெற்ற எந்தவொரு விமர்சனமும் அவர்களது பண்பு அல்லது செயல்களால் அல்ல, மாறாக, அவர்களது நபித்துவ வாதத்திற்கு மட்டுமே என வரலாறு பதிவு செய்கிறது. இந்த வாதம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குறைபாடற்ற மற்றும் உண்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்ற ஒரு வெளிப்படையான அறிக்கையாகும் என நிரூபணமாகிறது. அந்த அளவுக்கு அவர்களின் நபித்துவ வாதத்திற்காக, அவரைக் கொல்ல முயன்றவர்கள் கூட அவருடைய ஒழுக்கத்திலோ அல்லது நடத்தைகளிலோ குறைபாட்டைக் காண முடியவில்லை.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் முழுமையானவை அல்ல, ஆனால் விமர்சகர்கள் புறக்கணிக்கும் ஆதாரங்களை தெளிவுபடுத்துகின்றன. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களை குறைந்த வயதில் மணந்தார் என்ற விமர்சகரின் குற்றச்சாட்டை பல உண்மையான ஹதீத் மற்றும் உறுதியாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் நிராகரிக்கின்றன. எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட எடுத்துக்காட்டுகள், ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள், ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தமது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்ய முதிர்ச்சியுள்ள நபராக இருந்தார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்களாக இருக்கிறது.
நன்றி: alislam.org
மொழியாக்கம்: ஜனாப் நயீம் அஹ்மது சாஹிப்-சென்னை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None