நான்‌ ஏன்‌ இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொண்டுள்ளேன்‌? - பகுதி-2

 

நான்‌ ஏன்‌ இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொண்டுள்ளேன்‌? - பகுதி-2

பிறகு இஸ்லாம் சிறுமிகளின்‌ உரிமைகளையும்‌ புறக்கணித்து விடவில்லை. அவர்களுக்கு குறிப்பாக கல்வி கொடுப்பதில்‌ அழுத்தம்‌ தருகிறது. மேலும்‌ மேலும்‌ எவர்‌ தனது பெண்ணிற்கு நல்ல கல்வி கொடுக்கிறாரோ மற்றும்‌ அவளுக்கு நல்ல ஒழுக்கப்‌ பயிற்சி கொடுக்கிறாரோ அவருக்கு சொர்க்கம்‌ கட்டாயமாகி விடுகிறது என்று கூறுகிறது‌. மேலும்‌ இஸ்லாம்‌ பெண்களையும்‌ பெற்றோரின்‌ சொத்துகளுக்கு வாரிசாக ஆக்கியுள்ளது.

பிறகு இஸ்லாம்‌ அதிகாரிகளிடம்‌ குடிமக்களிடமும்‌ நீதியுடன்‌ நடந்துள்ளது. இஸ்லாம்‌ அதிகாரிகளிடம்‌ கூறுகிறது: ஆட்சி உங்களது சொத்து அன்று; மாறாக அது நம்பி ஒப்படைக்கப்பட்ட ஒன்றாகும்‌. எனவே நீங்கள்‌ ஒரு நேர்மையான மனிதரைப்‌ போன்று ஒப்படைக்கப்பட்ட இதனை முழுவதுமாக நிறைவேற்ற எண்ணுங்கள்‌. மேலும்‌ மக்களின்‌ ஆலோசனையின்படி செயல்படுங்கள்‌.

மேலும்‌ இஸ்லாம்‌ மக்களிடம்‌ கூறுகிறது: இறைவன் உங்களுக்கு ஆட்சியை ஓர்‌ அருளாக அளித்திருக்கிறான்‌. ஆட்சி செய்ய தகுதியுள்ளவரை உங்கள்‌ ஆட்சியாளராக தேர்ந்தெடுங்கள்‌. மேலும்‌ அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முழுவதுமாக கீழ்ப்படியுங்கள்‌. மேலும்‌ கலகம்‌ செய்யாதீர்கள்‌. ஏனெனில்‌, இவ்வாறு செய்வது நீங்கள்‌ உங்கள்‌ வீடுகளைக்‌ கட்டி உங்கள்‌ கைகளாலேயே அதனை அழிப்பது போன்றதாகும்‌.

மேலும்‌ இஸ்லாம்‌ முதலாளி தொழிலாளியின்‌ உரிமைகளையும்‌ நீதியுடன்‌ தீர்ப்பளிக்கிறது. அது முதலாளியிடம், நீங்கள் ஒருவரை கூலிக்காக அமர்த்தும்போது அவருடைய முழு உரிமையையும் கொடுங்கள். மேலும் அவரது வியர்வை காயும் முன்பே அவரது கூலியை கொடுத்துவிடுங்கள். மேலும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவரை இழிவுபடுத்தாதீர்கள்‌. ஏனெனில்‌ அவர்‌ உங்களது சகோதரர்‌ ஆவார்‌. அவரை கண்காணிக்கும்‌ பொறுப்பை இறைவன்‌ உங்களிடம்‌ கொடுத்திருக்கிறான்‌. மேலும்‌ அவரை உங்களது வலிமையின்‌ காரணமாக ஆக்கியுள்ளான்‌. எனவே நீங்கள்‌ உங்களின்‌ வலிமையை அறியாமையினால்‌ நீங்களே உடைத்து விடாதீர்கள்‌ என்று கூறுகிறது.

 

மேலும்‌ இஸ்லாம்‌ தொழிலாளியிடம்‌, நீங்கள்‌ கூலிக்காக ஒருவருடைய வேலையை செய்யும்போது நேர்மையுடன்‌ செய்யுங்கள்‌. மேலும்‌ சோம்பல்‌ மற்றும்‌ கவனமின்றி செய்யாதீர்கள்‌ என்று கூறுகிறது. மேலும்‌ இஸ்லாம்‌ ஆரோக்கியமான மற்றும்‌ பலசாலிகளிடம்‌ கூறுகிறது: நீங்கள்‌ பலவீனமானவர்களின்‌ மீது அநீதி இழைக்காதீர்கள்‌. மேலும்‌ குறைபாடுள்ள உடல்‌ உடையவர்களை ஏளனப்படுத்‌தாதீர்கள்‌. மாறாக உங்கள்‌ அண்டை வீட்டாரின்‌ பலவீனம்‌ உங்களிடத்தில்‌ கருணையை தூண்ட வேண்டும்‌. அவரைக்‌ கண்டு ஏளனமாக சிரிக்க கூடாது.

மேலும்‌ செல்வந்தர்களிடம்‌ இஸ்லாம்‌ கூறுகிறது: அவர்கள்‌ ஏழைகளை கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. மேலும்‌ உங்களுடைய செல்வத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்‌ நாற்பதில்‌ ஒரு பங்கு 1/40 அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்‌. அதிலிருந்து அரசாங்கம்‌ ஏழைகளின்‌ முன்னேற்றத்திற்காக செலவு செய்ய வேண்டும்‌. மேலும்‌ ஏழை ஒருவர்‌ கஷ்டத்திலிருக்கும்போது அவருக்கு வட்டிக்கு பணம்‌ கொடுத்து அவரது கஷ்டத்தை அதிகப்படுத்தாதீர்கள்‌. மாறாக தனது செல்வத்திலிருந்து அவருக்கு உதவி செய்யுங்கள்‌.

ஏனெனில்‌ இறைவன்‌ நீங்கள்‌ ஆடம்பரமாக வாழ வேண்டும்‌ என்பதற்காக உங்களுக்கு செல்வத்தைக்‌ கொடுக்கவில்லை. மாறாக செல்வத்தினால்‌ உலக முன்னேற்றத்தில்‌ பங்கு பெற்று தனக்கென ஈருலக நற்கூலியை பெறுவதற்கே ஆகும்‌. ஆனால்‌ இஸ்லாம்‌ ஏழைகளிடமும்‌ கூறுகிறது: நீங்கள்‌ செல்வந்தர்களின்‌ செல்வத்தை பேராசை மற்றும்‌ பொறாமையுடன்‌ பார்க்காதீர்கள்‌. அது உங்கள்‌ உள்ளத்தை கருப்பாக்கி விடுகிறது. மேலும்‌ சரியான வலிமைகளைப்‌ பெறவிடாமல்‌ தடுத்து விடுகிறது. எனவே நீங்கள்‌ இறைவனின்‌ உதவியால்‌ உங்களுக்கும்‌ எல்லா விதத்திலும்‌ முன்னேற்றம்‌ கிடைக்கும்‌ அந்த ஆற்றல்களை உருவாக்குங்கள்‌.

மேலும்‌ இஸ்லாம்‌ அரசாங்கத்திற்கும்‌ நல்வழிகாட்டுகிறது. அது கூறுகிறது: ஏழைகளின்‌ இந்த முயற்சிகளில்‌ அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம்‌ முன்‌ வரவேண்டும்‌. மேலும்‌ செல்வமும்‌ ஆற்றலும்‌ சிலரது கைகளில்‌ மட்டும்‌ இருக்குமளவிற்கு விட்டுவிடக்‌ கூடாது. மேலும்‌ தங்களது மூதாதையர்களின்‌ பெரிய வேலைகளினால்‌ எவர்களுக்கு கண்ணியம்‌ கிடைத்துள்ளதோ அதன்‌ காரணத்தால்‌ தமது சந்ததிகளும்‌ மக்களிடம்‌ கண்ணியத்திற்குரியவர்களாகி விட்டார்களோ அவர்களிடம்‌ இஸ்லாம்‌ கூறுகிறது: உங்கள்‌ மூதாதையர்களுக்கு அவர்கள்‌ செய்த உயரிய செயல்களுக்காக அவர்களுக்கு கண்ணியம்‌ கிடைத்தது. நீங்களும்‌ நல்ல செயல்களினால்‌ அந்த கண்ணியத்தை தக்க வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. மேலும்‌ மற்ற சமுதாயங்களை ஏளனமாகவும்‌ அற்பமாகவும்‌ எண்ணாதீர்கள்‌. ஏனெனில்‌ இறைவன்‌ எல்லா மனிதர்களையும்‌ சமமாக படைத்துள்ளான்‌. மேலும்‌ எந்த இறைவன்‌ உங்களுக்கு கண்ணியத்தைக்‌ கொடுத்‌தானோ அந்த இறைவன்‌ மற்ற சமுதாயத்திற்கும்‌ கண்ணியத்தை கொடுக்கலாம்‌. எனவே நீங்கள்‌ அவர்களுக்கு அநீதி இழைத்தால்‌ நாளை அவர்கள்‌ உங்களுக்கும்‌ அநீதி இழைப்பார்கள்‌. எனவே மற்றவர்களைவிட உங்களை உயர்ந்தவர்‌ என பெருமையடித்து ஆணவம்‌ கொள்ளாதீர்கள்‌. மாறாக, மற்றவர்களை உயர்வாக எடுத்துக்‌ கூறி பெருமைப்பட்டுக்‌ கொள்ளுங்கள்‌.

ஏனெனில்‌ எவர்‌ தன்‌ தாழ்த்தப்பட்ட சகோதரரை உயர்வாக்குகிறாரோ அவரே உயர்ந்தவராவார்‌.

மேலும்‌ இஸ்லாம்‌ கூறுகிறது: ஒரு நாடு மற்றொரு நாட்டுடன்‌, ஒரு சமுதாயம்‌ மற்றொரு சமுதாயத்துடன்‌ பகைமை கொள்ளவேண்டாம்‌. மேலும்‌ ஒருவர்‌ மற்றவரது உரிமையை பறிக்க வேண்டாம்‌. மேலும்‌ ஒருவர்‌ மற்றவரது உரிமையை பறிக்க வேண்டாம்‌. மாறாக அனைவரும்‌ இணைந்து உலக முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யுங்கள்‌. மேலும்‌ சில சமுதாயங்கள்‌, நாடுகள்‌ மற்றும்‌ மக்களுக்கு எதிராக திட்டம்‌ தீட்ட வேண்டாம்‌. மாறாக, சமுதாயங்கள்‌, நாடுகள்‌, மற்றும்‌ மக்கள்‌ இணைந்து, மற்றவர்களுக்கு அநீதி இழைப்பதிலிருந்து தடுப்போம்‌ என்றும்‌ மற்ற நாடுகள்‌, சமுதாயங்கள்‌ மக்களை ஊக்கப்படுத்துவோம்‌ என்றும்‌ உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்‌.

சுருக்கமாக, இந்த உலகின்‌ திரைகளில்‌, என்னுடைய அன்பிற்குரியவர்கள்‌ யாராக இருக்கட்டும்‌, எதுவும்‌ இருக்கட்டும்‌ இஸ்லாம்‌ நமக்காக சாந்தி மற்றும்‌ சமாதானத்திற்கு வழி வகை செய்கிறது என்பதை நான்‌ காண்கிறேன்‌. நான்‌ என்னை எந்த நிலையில்‌ வைத்து பார்த்தாலும்‌ நான்‌ அறிவது என்னவெனில்‌, இஸ்லாமிய போதனையின்‌ காரணமாக நான்‌ இந்நிலையில்‌ இருந்து கொண்டும்கூட, முன்னேற்றம்‌ மற்றும்‌ வெற்றியின்‌ வழிகளிலிருந்து நான்‌ தடுக்கப்படவில்லை. என்மனம்‌ கூறுவது என்னவெனில்‌, இஸ்லாம்‌ எனக்கும்‌, என்‌ உறவினர்களுக்கும்‌, என்‌ நண்பர்களுக்கும்‌ மேலும்‌ நான்‌ அறிந்திராத அந்த அந்நியனுக்கும்‌, பெண்களுக்கும்‌, ஆண்களுக்கும்‌, உயர்ந்தவர்களுக்கும்‌, தாழ்ந்தவர்களுக்கும்‌, ஏழைகளுக்கும்‌, பணக்காரர்களுக்கும்‌, உயர்ந்த மற்றும்‌ தாழ்ந்த சமுதாயங்களுக்கும்‌, மக்களுக்குள்‌ ஒற்றுமையை விரும்புபவர்களுக்கும்‌, தேசப்பற்றுடையவர்களுக்கும்‌ முழுக்க முழுக்க பயனுள்ளதும்‌ ஒட்டுமொத்த பயனளிக்கக்‌ கூடியதும்‌ ஆகும்‌. மேலும்‌ எனக்கும்‌ மற்றும்‌ என்‌ இறைவனுக்கும்‌ இடையில்‌ உறுதியான தொடர்பையும்‌ அன்பையும்‌ ஏற்படுத்துகிறது. எனவே நான்‌ இஸ்லாத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்‌. இப்படிப்பட்ட மார்க்கத்தை விட்டு மற்றொன்றை எப்படி என்னால்‌ ஏற்றுக்‌ கொள்ளவும்‌ முடியும்‌?

(ரிவியூ ஆஃப் ரிலீஜியன்ஸ்-மார்ச் 1940 பக்கம் 26-31)

நன்றி: நபிவழி மாத இதழ்

தமிழாக்கம்: முரப்பி சுல்தான் முஹ்யுத்தீன் சாஹிப்-மேலப்பாளையம்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.