கேள்வி: கண் படுதல் காரணமாக
ஒரு மனிதனுக்கு
எவ்வாறு தாக்கம் ஏற்படுகிறது?
பதில்: மனதின் ஆற்றல் மூலமாக நஸர் (தீய கண்) நீங்கள்
எண்ணுவதையே பிறரையும்
எண்ணுமாறு செய்கிறது. ஹஸ்ரத்
மூஸா (அலை) அவர்களின் காலத்தில் கயிறுகள் பாம்புகளைப் போன்று தோற்றமளித்தன. அது
மொத்த மனோவசியமாகும்.
மந்திரவாதிகள் எதனை
தாம் எண்ணினார்களோ அதனையே
பார்ப்பவர்களும் எண்ணும்படி செய்தனர். ஒரு மனோவசிய நிகழ்ச்சியில், மனோவசியம் செய்பவர் காலை
1௦ மணிக்கு வருவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அவர் காலை 11 மணிக்கு
வந்தார். அவர் வந்த போது தான்
கூறியபடி சரியான நேரத்திற்கு,
(10 மணிக்கு) வந்துள்ளதாக
கூறினார். அவருக்காக அதுவரை
காத்திருந்த மக்கள் அனைவரும் கோப மடைந்து,
அவர் ஒரு மணி நேரம் தாமதித்து
வந்திருப்பதைக் கூறினர். அப்போது அவர் அவர்களின் கைக்கடிகாரங்களைப்
பார்க்கும் படி கூறினார்.அவர்கள்
பார்த்தபோது, அவர்கள் அனைவரின் கைக்கடிகாரமும்
10 மணியையே காட்டிக் கொண்டிருந்தன.
இது மொத்த மனோவசியம்
(mass hypnotism) ஆகும்.
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் சம்பவத்தில் மந்திரவாதிகள்
சிரம் பணிந்தனர்.
ஏனென்றால் மனோவசியம் செய்யப்பட்ட ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் திகைத்து பின்வாங்கினார்கள்.
அப்போது அல்லாஹ்
கூறியபடி தமது கைத்தடியை எறிந்த போது (மந்திரவாதிகள்
ஏற்படுத்தியிருந்த)
மனோவசியம் கலைந்தது. அதனை ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் கலைத்திருக்க முடியாது. (ஏனெனில்
அவர்கள் ஏற்கனவே
மந்திரவாதிகளின் வசியத்திற்கு ஆளாகியிருந்தார்கள்.) அந்த வசியத்தை அல்லாஹ்வே கலைத்தான். இதனை
மந்திரவாதிகள் அறிந்து
கொண்டனர். (எனவே அவர்கள் சிரம் பணிந்தனர்.)
தீய கண் (நஸர்) குழந்தைகளப் பாதிக்கின்றது.
ஒரு குழந்தை சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் போது ஒருவர் அதனை கோபத்துடன் பார்த்தால் அல்லது அக்குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை
அவர் விரும்பாவிட்டால் அக்குழந்தைக்கு பசி போய் விடும். இதனை விஞ்ஞான ரீதியாக
நிரூபிக்க முடியாது.
ஆனால் இது மனோதத்துவ
உண்மையாகும். தீய மனம் குழந்தைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனை சரி செய்வதற்கு
குழந்தைகளுக்கும் அதன்
தாய்க்கும் மனோதத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவேண்டும்.
அவர்களது உள்ளத்தை
எதுவும் பாதிக்காது என்று அவர்களிடம் கூற வேண்டும். அவர்கள்
சரியாகி விடுவர். ஒரு
குழந்தை சாப்பிட்டு கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது
உங்களது உள்ளத்தில்
மகிழ்ச்சியும், நல்ல எண்ணங்களும் தோன்றினால் அப்போது
அந்த குழந்தை அதிகமாக
சாப்பிடும். காரணம் உங்களது நல்ல
எண்ணங்கள் குழந்தைக்கு செல்கின்றன. இது ஒரு மனோதத்துவ உண்மையாகும்.
ஆனால் உங்கள்
மனதிலிருந்து குழந்தைகளின்
மனதிற்கு சென்றது எது என்பதை விஞ்ஞான முறைப்படி நிரூபிக்க முடியாது.
தமிழாக்கம்: ஜனாப் A.நாசிர் அஹ்மது சாஹிப்-அமீர் மேலப்பாளையம்
இயற்கையாகவே, மனித உள்ளம் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் பிரதிபலிக்கின்றது இதற்கு இந்த பதில் நல்லதோர் ஆதாரம்
பதிலளிநீக்கு