பள்ளி வாயிலில் நுழையும்போதும் வெளிவரும்போதும் செய்யும் துஆவின் உயிரூட்டும் தத்துவம்

 


ஹஸ்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் நுழையும்போதும், தரூத் ஷரீஃப் ஓதிவிட்டு பிறகு இவ்வாறு துஆ செய்வார்கள், எனது (மனித) குறைபாடுகளை மன்னிப்பாயாக. உனது ரஹ்மத்தின் வாசலை எனக்காக திறப்பாயாக. பிறகு மஸ்ஜிதை விட்டு வெளியேறும்போது தமது இறைவனிடம் இவ்வாறு துஆ செய்வார்கள், இறைவா! எனது (மனித) குறைபாடுகளை மன்னிப்பாயாக. எனக்காக உனது ஃபஸ்லின் - அருளின் வாசலை திறப்பாயாக.

ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களுடைய இந்த வலுவான சுன்னத்திற்கேற்ப இந்த பதினான்கு நூற்றாண்டுகளாக இறைவன் மீதும் நேசம் கொள்பவர்கள் மஸ்ஜிதுகளில் தமது சிரம்பணிதலை எடுத்து வைக்கும் முன்னும், எடுத்து வைத்த பிறகும் இந்த துஆவை செய்து வருகின்றனர்.

கேள்வி என்னவென்றால், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாக இறைவன் முன்னாள் முதலில் ரஹ்மத்தையும் பிறகு ஃபஸ்லின் வாசலையும் திறக்குமாறு வேண்டுகின்றனர். இதில் அடங்கியுள்ள தத்துவம் என்ன?

இந்த கேள்விக்கு மார்க்க உலகில் பிரபலமான ஜனாப் முஹம்மது மன்ஸூர் நுஃமானி சாஹிப் எழுதுகிறார்:

"குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ரஹ்மத் என்ற வார்த்தை அதிகமாக மறுமைக்காகவும், மார்க்க ஆன்மீக அருட்களுக்காகவும் வருகிறது. ஃபஸ்ல் என்ற வார்த்தை உணவு மற்றும் உலகியல் அருட்களின் செறிவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் நுழைவதற்கு முன் ரஹ்மத்தின் வாயிலை திறக்கும் துஆவை செய்யுமாறு போதித்தார்கள். 

ஏனெனில் மஸ்ஜிது மார்க்க, ஆன்மீக, மறுமையின் அருட்களை பெருவதற்குரிய இடமாகும். மேலும் மஸ்ஜிதிலிருந்து வெளியேறும்போது அவனது ஃபஸ்லை அதாவது உலகியல் அருட்களை அதிகரிக்குமாறு கேட்குமாறு அறிவுரித்தியுள்ளார்கள். ஏனெனில் மஸ்ஜிதிற்கு வெளியே செல்லும் வேலையில் இந்த துஆவை செய்வதே பொருத்தமாகும். இவ்விரு விஷயங்களின் குறிப்பான நோக்கம் என்னவெனில் மஸ்ஜிதிற்கு வரும்போதும் போகும்போதும் மனிதன் கவனமற்றவானக இருக்கக்கூடாது என்பதாகும்.

("மஃரிஃபல் ஹதீஸ்" கிதாபுஸ் ஸலாத்-நாஷிர் உமர் பாரூக் அக்காடமி லாஹூர்)

இந்த உண்மையின் மைய்யக் கருத்தை மேலும் விரிவாக பார்க்கும்போது அறிவு மற்றும் இறை ஞானத்தின் ஒரு வாசல் திறப்பதற்கு காரணமாக விளங்கும்.

அமீருல் முஃமினீன் செய்யதுனா ஹஸ்ரத் அலி இப்னி அபி தாலிப் அவர்கள் "அவன் தனது ரஹ்மத்தினால் தேர்ந்தெடுக்கிறான்" (எக்தஸ்ஸி பி ரஹ்மத்திஹி- சூரா பக்கரா: 105) என்ற வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, இங்கு ரஹ்மத் என்பது நுபுவ்வத் என்று கூறியுள்ளார்கள். இறை சிங்கத்தின் இந்த ஞானமிகு விளக்கத்திற்கு ஏற்ப உம்மத்தே முஸ்லிமா 15 நூற்றாண்டுகளாக ஒவ்வொருமுறை மஸ்ஜிதில் காலடி வைப்பதற்கு முன்னும் "என் இறைவா! நுபுவ்வத்தின் வாசலை எங்கள் மீது திறப்பாயாக என்று துஆ கேட்கிறது. அது மற்ற உம்மத்துக்களுக்கு அவர் இறை சமூகத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாக இருப்பதால் கியாமத் வரை முற்றிலும் அவ்வாசல் அடைக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். 

இதே துஆவில் (கிலாஃபத் அலா மின்ஹாஜின் நுபுவ்வத்) நுபுவ்வத் வழியில் கிலாஃபத் நிலைநிற்றலுக்கான துஆவும் அடங்கும். இது குறித்த தகவலையும், உண்மை தகவல்களை மட்டுமே தருபவராகிய ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) தமது தூய நாவினால் நவின்றுள்ளார்கள். மேலும் அது வெளிப்படும் காலம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அவர்களுடன் தொடர்புள்ளதாகும். 

(மிர்காத் ஷரஹ் மிஷ்காத் அன்ஃதார் வ தன்ஃதீர்)

ஓர் அஹ்மதி இக்காலத்திற்கு என்று நியமிக்கப்பட்ட மஹ்தியின் கிலாஃபத்தை தொடர்பு கொண்டிருக்கிறார் எனில் அவர் மற்றவர்களின் துஆவை போன்ற வெறும் சம்பிரதாயமான துஆவை செய்வதில்லை. மாறாக அகப்பார்வையுடன் செய்கிறார் என்பதை இவ்விளக்கத்தின் மூலம் மதிப்பிட முடியும்.

சூரத்துல் ஜுமுஆவிற்கு ஒரு சிறப்பு உள்ளது. இதில் 'ஆகரீன மின்ஹும்' என்ற வார்த்தையில் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் இரண்டாவது வருகை அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் ஜமாஅத் பற்றிய நற்செய்தி தரப்பட்டுள்ளது. இந்த மகத்தான அருளுக்கு ஃபஸ்ல் என்று கூறப்பட்டுள்ளது.

சூரத்துல் ஜுமுஆவில் அல்லாஹ் கூறுகிறான், 'வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹக்கூ பிஹிம்- வஹுவல் அஸீஸுல் ஹக்கீம்- தாலிக்க ஃபஸ்லுல்லாஹி யுஃதிஹி மய் யஷாஉ வல்லாஹு துல் ஃபஸ்லில் அஸீம்.' (62:4,5)

மேலும் மற்றவர்களுக்கிடையிலும் அவரை எழுப்பினான். அவர்கள் இதுவரை இவர்களுடன் சேரவில்லை. அவன் முழுமையான மிகைத்தவனும் ஞானமுள்ளவனும் ஆவான். இது அல்லாஹ்வுடைய அருளாகும். அதனை அவன் யாரை விரும்புகிறானோ அவருக்கு வழங்குகிறான். அல்லாஹ் மிகவும் அருளுக்குரியவன் ஆவான். 

இதே சூரா ஜுமுஆவில் இறுதியில் கடைசி காலத்தில் அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்தில் வாழும் மஹ்தியின் ஜமாஅத்திற்கும் கூட இறைவன் இவ்வாறு வழி காட்டியுள்ளான். ஜுமுஆவின் நாளில் ஒரு பகுதியின் (ஜுமுஆ) தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவுக் கூறுவதன் பக்கம் விரையுங்கள். வியாபாரங்களை விட்டு விடுங்கள். உங்களுக்கு அறிவு இருந்தால் இதுவே மிகச் சிறந்ததாகும்.

மேலே தொழுகையை நிறைவேற்றிவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள் (வப்தகூ மின் ஃபழ்லில்லாஹ்). மேலும் அல்லாஹ்வுடைய அருளில் இருந்து சிறிது தேடுங்கள். மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள் அதனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வழி காட்டுகிறான்.

அதில் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் ஜமாஅத்திற்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி அவருடைய உலகளாவிய வெற்றிற்காக அதிக அளவில் துஆ செய்யுமாறு பதினான்கு நூற்றாண்டுகளாக முன்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அக்காலத்து முஸ்லிம்களின் உலக வணக்கமும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. 

(அதாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்திற்கு முன் எப்போதும் இருந்திராத அளவுக்கு வியாபாரம் அதிக அளவில் நடைபெறும் காலமாக இருக்கும். அக்காலத்தில் உலக ரீதியாக வியாபாரம் செய்பவர்களும் கூட இருவகைப்படுவர். ஒன்று வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் வரும் காலக்கட்டத்தில் அவரை ஒப்புக் கொண்டவாறு உலக வேளைகளில் ஈடுபடுவார்கள். அதனால் அவர்களின் அசல் நோக்கம் மார்க்கத்தின் வெற்றியாகவே இருக்கும். லஅல்லக்கும் துஃப்லிஹூன்.

இன்னொரு பிரிவினர் உலக வணக்கம் செய்பவர்கள். அவர்களின் உலக வேலைகள் அவர்களை இறை திக்ரின் பக்கம் திரும்புதல், இறைவனிடமிருந்து வந்தவரை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றில் இருந்து அவர்களைத் தடுத்துவிடும். அவர்கள் புறக்கணித்துவிட்டு, அவரை நிற்க வைத்துவிட்டு தமது வேலைகளில் மூழ்கி விடுவார்கள். அதைப்பற்றி சூரா ஜுமுஆவின் அடுத்த வசனம் அழகாக விவரிக்கிறது.)

அவர்கள் வியாபாரத்தையோ, கேளிக்கைகளையோ காணும்போது, அதன் பக்கம் ஈர்க்கப்பட்டு, உம்மை (தனித்து) நிற்க வைத்து விடுகின்றனர். நீர் கூறுவீராக, அல்லாஹ்விடமுள்ளது கேளிக்கையை விடவும், வியாபாரத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ் மிகச் சிறந்த உணவளிப்பவன் ஆவான். (62:12)

இங்கு சூரா ஜுமுஆவில், வாக்களிக்கப்பட்ட மஸீஹை நம்புபவருக்கும் நம்பாத முஸ்லிம்களுக்கும் இடையில் ஃபஸ்லை தேடுவதில் உள்ள வேறுபட்ட அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. சூரா ஜுமுஆவின் முந்தைய சூராவாகிய சூரா ஸஃப்ஃபில் நேரடியாக ஜமாஅத்தே அஹ்மதிய்யாவை வானத்தின் அருளை (ஃபஸ்ல்) பெறும் ஏற்பாடாக கூறப்பட்டுள்ளது. அது ஃபவுஸுன் அழீம் (மகத்தான வெற்றி) ஐ விளைவிக்கக் கூடியது. அதாவது இறைவன் மீது உயிருள்ள ஈமான், பொருள் தியாகம், வாழ்வை அர்ப்பணித்தல் அதனிடம் இருக்கும். இதனை விளக்கும் வகையில் அல்லாஹ் கூறுகிறான்:

"நம்பிக்கை கொண்டவர்களே! வேதனையளிக்கக் கூடிய தண்டனையில் இருந்து உங்களை காப்பாற்றும் வாணிபம் ஒன்றை பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

நீங்கள் அல்லாஹ்விடத்தும் அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு உங்கள் பொருள்களையும் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் கடுமையாக உழைப்பதே (அந்த வாணிபம்) ஆகும். நீங்கள் அறிந்திருப்பின் இது உங்களுக்கு மிகச் சிறந்தது ஆகும். (61:11,12)

சுருக்கமாக, ரஹ்மத், ஃபஸ்ல் இவற்றை கேட்கிற துஆவை ஆழமான நுட்பமான கண்ணோட்டத்துடன் சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் மறைவான தூதுச் செய்திகள், நற்செய்திகளின் ஒரு விரிவான ஊற்றின் தோற்றம் நம் கண்முன் வருகிறது. அறிவு ஸ்தம்பித்து விடுகிறது. ஒவ்வொரு அஹ்மதியின் ஆன்மாவும் ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் இந்த நல் உதவிகள் மற்றும் விளக்கங்களால் பொங்கி எழுகிறது.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் இன்னக்க ஹமீதும் மஜீது. 


ஆக்கம்: மர்ஹூம் மௌலானா தோஸ்து முஹம்மது சாஹிப் ஷாஹிது

மொழியாக்கம்: முஅல்லிம் நிஜாமுத்தீன் சாஹிப்

உதவியது: அல்ஃபஸ்ல் இன்டர்நேஷனல் 18 ஜூலை 2004) 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.