ஹதீஸில் பல்வேறு இடங்களில் இவ்வும்மத்தில் தோன்றக்கூடிய ஈஸாப்னு மர்யம் (அலை) மற்றும்
இமாம் மஹ்தியை பற்றி பரவலாக பல்வேறு அறிவிப்புகள் இருப்பதை நாம் அறிகின்றோம். இவ்வனைத்து
அறிவிப்புகளை வைத்து இன்றய கால முஸ்லிம்கள் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய ஈஸாவும்
(அலை) இமாம் மஹ்தியும் வெவ்வேறானவரே என்று வாதம் செய்து வருகின்றனர். இது அவர்களின்
ஆராயுதலின் குறைபாடை காட்டுகிறது. இவர்களின் இந்த கொள்கை அறவே தவறானது என்பதை நாம்
கீழே ஒரு சில ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க முயற்சித்துள்ளோம்.
முதல் பதில்: ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கு இறுதி காலத்தில் தோன்றவிருக்கின்ற
ஒரு சீர்திருத்தவாதியைப் பற்றி முன்னறிவித்துள்ளார்களோ அங்கு 'மஸீஹ்' என்ற பெயர் மட்டுமே வருகின்றன. மஹ்தி என்ற பெயர் வரவில்லை. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
கூறுகின்றார்கள்:
کیفَ تَھلکُ اُمۃٔ انا اولھا و عیسیَ ابن مریمَ اٰخرھا
அதாவது எந்த உம்மத்தின் முதல் காலத்தில் நானும் இறுதி காலத்தில் மஸீஹும் இருக்கிறோமோ
அந்த உம்மத் எவ்வாறு அழியக்கூடும். (மிஷ்காத் பாகம் 2 பக்கம் 583 பாப் 'ஸவாபு ஹாஸிஹில் உம்மா | இக்மாலுத்தீன் பக்கம்
157 ஷியா பிரிவினர்களின் நூல்
| கன்ஸுல் உம்மால் பாகம் 7 பக்கம் 203 கிதாபுல் கியாமா பாப் நுஸூல் ஈஸா மின் கிஸ்முல்
அக்வால் | ஹஜஜூல் கராமா பக்கம்
423)
மஹ்தி என்பவர் தனி ஒருவர் என்பதாக இருந்தால் அவர்களை பற்றியும் இங்கு ஹஸ்ரத் நபி
(ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆகவே இருவரும் வெவ்வேறானவரே என்பது புலப்படுகிறது.
இரண்டாவது பதில்: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹை அவர்களே மஹ்தி
என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அன்னார் (ஸல்) கூறுகின்றார்கள்:
یوشکُ من عاشَ منکم ان یلقیٰ عیسیَ ابنَ مریمَ امامًا مھدیًّا
و حکمًا عدلًا
அதாவது: உங்களில் எவர் உயிரோடு இருப்பாரோ அவர் நிச்சயமாக ஈஸப்னு மர்யமை சந்திப்பார். அவர் இமாம் மஹ்தியாகவும்,
நீதியாளனாகவும் இருப்பார். (முஸ்னது அஹ்மது பின் ஹன்பல் பாகம் 6 பக்கம் 411)
மஹ்தியின் முன்னறிவிப்பிற்காக எந்த சொல்லை ஹதீஸில் கய்யாளப்பட்டுள்ளதோ அதே சொல்லை
இங்கு இந்த ஹதீஸில் வைத்து மஹ்தி யார் என்பதை தெளிவுப்படுத்தி விட்டார்கள்.
மூன்றாவது பதில்: முஹத்திஸீன் மஹ்தி பாடத்தின் அனைத்து ஹதீஸ்களையும் பலகீனமானது
என்று கூறியுள்ளனர். (பார்க்க: முகத்தமா இப்னு குல்தூன்) ஆனால் இதை தொடர்ந்து வரும்
"லா மஹ்தி இல்லா ஈஸா" (இப்னு மாஜா பாகம் 2 கிதாபுல் ஃபித்ன் ஹதீஸ் நம்பர் 4039, பாப் ஷித்ததுஸ் ஸமான்) என்ற ஹதீஸ் ஸஹீஹ் ஆனது ஆகும்.
ஏனென்றால் இதனின் அறிவிப்பாளராக முஹம்மது இப்னு காலிதுல் ஜுன்தி ஆவார். இவர் நம்பத் தகுந்தவர்
ஆவார். ஏனென்றால் இமாம் ஷாஃபி (ரஹ்) போன்ற பிரித்தறியும் திறமை பெற்ற இமாம் கூட இவர்களிடமிருந்து
அறிவிப்பை பெற்றுள்ளார்கள். மேலும் இப்னு முயீன் என்பவர்களும் இந்த அறிவிப்பாளரை உறுதியானவர்
என்று கூறியுள்ளார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 9 பக்கம் 144)
மேலும் எஹ்யா இப்னு முஈன் ஒரு சாதாரண மனிதர் அல்ல.
மாறாக "ஹுவ இமாமுல் ஜர்ஹி வத் தஅதீலி" (அவர் ஒரு சட்டத்தை அறிந்த இமாமாகவும்,
நீதியை மேற்கொள்ளும் இமாமாகவும்
இருக்கிறார்) மேலும் இவர்களைப் பற்றி "குல்லு ஹதீஸின் லா யஅரிஃபுஹு இப்னு முஈனின்
ஃபலைச ஹுவ பிஹதீஸின்"(தஹ்ஸீபுத் தஹ்ஸீப்) எந்த ஹதீஸை பற்றி இப்னு முயீன் அறிந்திருக்கவில்லையோ
அந்த ஹதீஸே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவர் எந்த அறிவிப்பாளரை குறித்து
இவர் உறுதிமிக்கவர் என்று கூறுகிராரோ அவ்வாறானவரின் ஹதீஸ் எவ்வாறு சந்தேகத்திற்குரியதாக
கருதப்படும்!? ஆகவே இதன் மூலமும்
மஸீஹ் என்பவரே மஹ்தியாகவும் இருக்கிறார் இவரை தவிர வேறு மஹ்தி இல்லை என்பது புலனாகிறது.
நான்காவது பதில்: வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியினை பற்றி எந்த நிறங்களை
பற்றி, எந்த வேலைகளைப் பற்றி மற்றும்
இவ்விருவரின் இறங்குதலை பற்றி கூறப்பட்டுள்ளதோ அவ்வனைத்தும் ஒன்றுபட்ட கருத்தை கொண்டிருப்பதினால்
இவ்விருவரும் ஒருவரே ஆவார் ஆனால் பல்வேறு ஹதீஸ்களில் இரு வேறு பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது
என்பது தெளிவாகிறது.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ், இமாம்
மஹ்தி (அலை) இவ்விருவர்களுக்கும் இடையிலான ஒப்புமையை குறித்து ஹதீஸ் என்ன கூறுகிறது
என்பதை கீழே காண்போம்.
வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நிறம் குறித்து ஹதீஸ்:
فاذَا رجلٌ اُدمٌ کاَحسنِ ما یُریٰ من اُدمِ الرِّجالِ
"....அதாவது மனிதர்களின் மா நிறத்திலேயே மிக அழகான மாநிறமான
மனிதர் ஒருவர் அங்கிருந்தார்...."(புகாரி | கிதாபுல் அன்பியா | ஹதீஸ் நம்பர் 3440)
வாக்களிக்கப்பட்ட மஹ்தி (அலை) அவர்களின் நிறம்:
اُدمُ ضَربٌ من الرِّجال
(கன்ஸுல் உம்மால் பாகம் 7 பக்கம் 262
| அன் நஜ்முஸ் ஸாகிப் பாகம்
2 பக்கம் 90 | முஸ்லிம் கிதாபுல் ஈமான் பாபுல் இஸ்ரா பி ரஸூலில்லாஹ்
பக்கம் 71 பாகம் 1 மிஸ்ரி)
அதாவது வரக்கூடிய மஹ்தி (மாநிறம் கொண்ட) கோதுமை நிறத்தை கொண்டவராகவும்,
இடைப்பட்ட உயரம் கொண்டவராகவும்
இருப்பார்.
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் இறங்குதலைப் பற்றி:
یَنزِلُ بینَ مھزُورتینِ
அதாவது "....இரு மஞ்சள் நிறம் ஆடை அணிந்தவராக இறங்குவார்....." (திர்மிதி
அப்வாபுல் பித்ன் பாப் மா ஜாஅ ஃபில் இலாமாத் குரூஜுத் தஜ்ஜால் பாகம் 2 பக்கம் 119, நோல் கிஷோர் லக்னோ பதிப்பகம் | மிஷ்காத் பாப் அல் இலாமாத் பைன ரூயஸ் ஸாஅஹ் வ திக்ருத்
தஜ்ஜால்)
மஹ்தி (அலை) இறங்குதலை குறித்து ஹதீஸ்:
علیہ عباتانِ قُطوفتانِ کاَنّہ من رجالِ بنی اسرائیلَ
அதாவது அவர் மீது மஞ்சள் நிறம் கொண்ட இரு போர்வை போர்த்தப்பட்டிருக்கும். (அபூ
தாவூத்)
வாக்களிக்கப்பட்ட மஸீஹீன் (அலை) பணியை குறித்து ஹதீஸ்:
یُفیضُ المَالَ
அதாவது "...அவர் நிதியை வாரி வழங்குவார்..." (முஸ்லிம் கிதாபுல் ஈமான்
பாப் நுஸூலுள் ஈஸா இப்னு மர்யம் பாகம் 1 | புகாரி கிதாப் பாப் நுஸூலுள் ஈஸா இப்னு மர்யம்)
ولَیُدعَوُنَّ الی المالِ
"...நிதியை நோக்கி அழைப்பார்..."(புகாரி கிதாபுல்
அன்பியா பாப் நுஸூலுள் ஈஸா இப்னு மர்யம் | முஸ்லிம் கிதாபுல் ஈமான் பாப் நுஸூலுள் ஈஸா இப்னு மர்யம் பாகம் 1)
மஹ்தியின் (அலை) பணியை குறித்து வரும் ஹதீஸ்:
فیقسمُ المالَ و یعملُ فی الناسِ بِسنَّۃِ نَبِیِّھمْ
"....அவர் (மக்களுக்கு) நிதியை வாரி வழங்குவார் மேலும்
மக்கள் மத்தியில் அவர்களின் நபியை பின்தொடர்ந்து பணி புரிவார்..." (சுனன் அபூ
தாவூத், கிதாபுல் மஹ்தி பிரிவாயது
உம்மே சல்மா (ரலி) ஹதீஸ் நம்பர் 8)
மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய மஸீஹும்,
இமாம் மஹ்தியும் ஒருவரே அன்றி
இருவர் அல்ல என்பது நிருபணமாகிறது.
இப்போது, பனூ இஸ்ரவேலர்களுக்கு
அனுப்பப்பட அந்த ஈஸா வர முடியாது என்று சொன்னால் பிறகு ஏன் ஹதீஸில் "இப்னு மர்யம்"
என்று கூறப்பட்டுள்ளது ? என்ற ஒரு கேள்வி பொதுவாக
மக்கள் மத்தியில் எழுவது உண்டு. இதற்கான பதில்;
ஒப்புமை என்ற அடிப்படையில் ஒரு நபரின் பண்பை குறித்து ஒரு நபரின் பெயரை மற்றொருவருக்கு
வழங்குவது உண்டு. உதாரணமாக புகாரி ஹதீஸ் பாகம் 1 பக்கம் 87,88,92,93 இல் இவ்வாறு ஒரு ஹதீஸ் இடம்பெறுவதை நாம் பார்க்கிறோம்.
அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை குறித்து இவ்வாறு கூறுகின்றார்اِنَّ
کُنَّ لاَنتُنَّ صَواحبُ یوسفَ அதாவது நீங்கள் யூசுஃபின் சகோதரிகளாக இருக்கின்றீர்கள்"
என்று கூறினார்கள். (இதனின் முழு வாசகம் சுனன் நஸாயில் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஒப்பான
வாசகம் புகாரியிலும், இப்னு மாஜாவிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தாம் யூஸுஃபாக இல்லாதிருந்த போதிலும் தம்மை யூஸுஃபாகவும்
(அலை), தனது தூய மனைவிமார்களை அவர்களின்
சகோதரிகளாகவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.
ஆகவே குணம் மற்றும் பண்பின் ஒப்புமை என்ற அடிப்படையில் ஒரு நபரின் பெயரை மற்றொருவருக்கு வழங்குவது வழக்கமாகும் இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இருந்ததுண்டு என்பது நிரூபணமாகிறது. உதாரணத்திற்கு இன்றய காலத்திலும் கூட இன்னார் "ஹாத்திமாக" இருக்கிறார் என்று கூறுவதுண்டு. ஆனால் அவர் உடல் ரீதியாக "ஹாத்திமாக இருப்பதில்லை ஆனால் வாரி வழங்குதல் என்ற பண்பின் அடிப்படையில் அந்த நபர் ஹாத்திமாக இருக்கிறார் என்பதை ஒப்புமை செய்து மக்களுக்கு வாரி வழங்கும் அந்த நபரை குறித்து "ஹாத்திம்" என்று கூறுவதுண்டு. இவ்வாறே இந்த உம்மத்தில் தோன்றக்கூடிய சீர்திருத்தவாதி இப்னு மர்யம் (அலை) அவர்களுக்கு குணம் மற்றும் பண்பின் அடிப்படையில் ஒத்து விளங்கவிருப்பதினால் அவர்களை குறித்து இப்னு மர்யம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது பதில்:
ஹஸ்ரத் ஈஸா இப்னு மர்யம் (அலை) அவர்களே இமாம் மஹ்தியாக இருப்பார்கள் என்பதற்கு ஒரு சில சான்றுகளை கீழே தருகிறோம்.
இப்னு ஷீபா அவர்கள் தமது நூலாகிய "அல்முஸன்னஃப் " என்பதில் ஒரு ஹதீஸை இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: அல் மஹ்திய்யு ஈஸப்னு மர்யம் அதாவது ஈஸா இப்னு மர்யம்தான் மஹ்தி ஆவார்கள். (பாகம் 14 பக்கம் 181)
அதேபோன்று இப்னு ஹமாது அவர்கள் "அல்ஃபித்ன்" என்ற தமது நூலில் ஒரு ஹதீஸை இவ்வாறு பதிவு செய்து வைத்துள்ளார்கள்: அனில் ஹஸன் கால அல்மஹ்திய்யு ஈஸா இப்னு மர்யம் அதாவது ஹசன் பஸரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் "ஈஸா இப்னு மர்யம் அவர்கள்தான் இமாம் மஹ்தி ஆவார்கள். (பாகம் 1 பக்கம் 376)
இப்னு மர்யம் குறித்து இதர பதிவுகள் கீழே
http://trueahmad.blogspot.in/p/blog-page.html
http://imaammahdi.blogspot.in/2013/12/blog-post_29.html
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None