நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது. அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) நூல் : திர்மிதி (2145)
இந்த ஹதீஸில் 30 என்று குறிப்பிட்டு கூறியதின் மூலம்
ரசூல் (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு உண்மை நபி வர வேண்டியதிருந்தது என்பது
தெளிவாகிறது. இல்லை என்றால் நேரடியாக எனக்கு பிறகு வருபவர் அனைவரும் பொய்யாராகவே
இருப்பர் என்று கூறி இருக்கலாம் அல்லவா.
2- இந்த ஹதீஸ்
புகாரி, திர்மதி மற்றும் அபு தாவூதிலும்
இருக்கிறது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்ப தகுந்தவர்கள் கிடையாது. ஏனென்றால்
புகாரி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பை அபுல் யமானிடமிருந்து சுஐப் மற்றும் அபுஸ்
சனாத் மூலமாக நகல் செய்துள்ளார்கள். அபுல் சனாதை பற்றி ரபீஆ கூறுவது, "லைச பிசகதின் வலா ரலன்"
(மீசானுல் ஈததால்
பாகம் 2 பக்கம் 33)
அதாவது இந்த
அறிவிப்பாளர் நம்ப தகுந்தவரும், விரும்பதக்கவரும் இல்லை. அபுல் யமான்
இந்த அறிவிப்பை ஷூஐப் இடமிருந்து எடுத்துள்ளார். ஆனால் மீசானுல் ஈததால் பாகம் 1 பக்கம் 272 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "அபுல் எமான் ஷூஐப் இடமிருந்து எந்த ஹதீஸும் கேட்கவில்லை.
ஆகவே இந்த அறிவிப்பானது நம்ப தகுந்த அறிவிப்பாக இல்லை என்பது தெளிவாகிறது.
3- திர்மிதியில்
வருகின்ற இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் அபுல் கலாபா மற்றும் சௌபான் எனும்
இரு அறிவிப்பாளர்கள் நம்ப தகுந்தவர் கிடையாது. அபுல் கலாபா பற்றி "தஹ்ஸீபுத்
தஹ்ஸீப் பாகம் 5 பக்கம் 146"
இல் இவ்வாறு
எழுதப்பட்டுள்ளது, " அபுல் கலாபா ஃபுக்ஹாவை சார்ந்தவராக
இருந்ததில்லை.......அவர் கிடைப்பதை பற்றியும் கிடைக்காததை பற்றியும் இட்டுகட்டி
கூறுபவராம். இவ்வாறே சவ்பானை பற்றி அஸ்தி அவர்களின் கூற்று இவ்வாறு வருகின்றது,
"இந்த ராவியின்
தரத்தில் வெறும் பேச்சே இருக்கிறது."
(மீசானுல் ஈததால்
பாகம் 1 பக்கம் 173)
திர்மிதி யின்
இரண்டாவது வழியில் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் மற்றும் மஃமர் பின் ராஷித் என்று
இருக்கும் இரு அறிவிப்பாளரும் பலகீனமானவர் ஆவார். அப்துல் ரஹ்மான் பின் ஹம்மாம்
ஷியாவாக இருந்தவர். நஸாயின் பார்வையில் நம்ப தகுந்தவர் கிடையாது. அப்பாஸ் அம்பரி
அவர் பொய்யர் மேலும் வாக்தி யை விட அதிக பொய்யுரைப்பவராக இருந்தார். இந்த மனிதர்
பொய்யாராக இருந்தார், ஹதீஸை திருடுபவராக இருந்தார் என்று கூறுகின்றார்.
இந்த அறிவிப்பை
அப்துல் ரஹ்மான் பின் ஹம்மாம் மஃமரிடமிருந்து எடுத்துள்ளார். மீசானில் இவரை பற்றி
இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, அதாவது "மஃமரிடமிருந்து எடுத்து
கூறுவதாக கூறும் அறிவிப்பில் இவர் தவறு இழைத்து வந்தார். இப்னு உஐனியா கூறுவதாவது, "இந்த அறிவிப்பாளர் குர்ஆனின் இந்த வசனதுக்கு ஒத்துப்
போகிராரோ என்ற அச்சம் உள்ளது, அந்த வசனமாவது, "ளல்ல சஃயுஹும் ஃபில் ஹயாதித் துன்யா" (அல் கஹஃப்-105)
இவ்வாறு மஃமர் இப்னு ராஷித் ஐ பற்றி எஹ்யா இப்னு முயீன் "அவர் பலகீனமானவர்" என்று கூறுகிறார். (மீசானுல் ஈததால்
பாகம் 3 பக்கம்
188) இப்னு சஅத்
"இவர் ஷியாவாக இருந்தார்" என்று கூறுகிறார். பஸ்ராவில் இவர் அறிவித்த
அறிவிப்பில் தவறான அறிவிப்பும் இருக்கின்றன என்று
அபு ஹாதம்
கூறுகிறார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 10
பக்கம் 244)
4- அபு தாவூதில்
உள்ள அறிவிப்பில் அபுல் கலாபா மற்றும் சவ்பான் இவர்கள் இருவரும் இருக்கின்றனர்.
இவரை பற்றி மேலே கூறப்பட்டுவிட்டது. இவர்களை தவிர சுலைமான் பின் ஹிஸ்ப் மற்றும்
முஹம்மத் பின் ஈஸா இவர்கள் இருவரும் பலகீனமானவரே. சுலைமான் பின் ஹிஸ்ப் ஐ பற்றி
அபு தாவூதே இவ்வாறு கூறுகிறார், " இந்த அறிவிப்பாளர் ஒரு ஹதீஸை முதலில் ஒரு
மாதிரியாகவும், மற்றுமொரு முறை கூறும்போது அதே ஹதீஸை
மாற்றி கூறுபவராக இருந்தார். கதீப் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், "இந்த மனிதர் அறிவிப்பின் வார்த்தைகளை மாற்றி எழுதுபவராக
இருந்தார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 4
பக்கம் 180) முஹம்மத் பின் ஈஸா வை பற்றி அபு தாவூத் இவ்வாறு
கூறுகின்றார்கள், "காண ருபமா யுதல்லிசு" அதாவது சில
சமயம் ஏமாற்று வேலையையும் செய்து வந்தார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 9 பக்கம் 394) அபு தாவூதின் இரண்டாவது வழிமுறையில்
இருக்கும் அப்துல் அசீஸ் பின் முஹம்மத் மற்றும் அல்உலா இப்னு அப்துல் ரஹ்மான் ஆகிய
இருவரும் பலகீனமானவர் ஆவார்கள். அப்துல் அசீஸ் இப்னு முஹம்மத் ஐ பற்றி இமாம்
அஹ்மத் இப்னு ஹம்பல் தவறிழைப்பவர் என்றும்,
அபு ஸர்ஆ
"சய்யியுல் ஹிஃப்ல்" என்றும்,
நஸாயீ "லைச
பில் கவிய்யி" (அதாவது வலுவில்லாதவர்) என்றும் கூறுகின்றார்கள். இப்னு சஅத்
இன் பார்வையில் "கஸீருல் கலத்" மேலும் சாஜியின் பார்வையில்
"வஹ்மி" யாக இருந்தார். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 6 பக்கம் 354) இவ்வாறு அபு தாவூதின் இரண்டாவது
அறிவிப்பாளர் அல் உலா இப்னு அப்துல் ரஹ்மான் இவரும் பலகீனமானவர் ஆவார். ஏனென்றால்
இவரை பற்றி இப்னு முஈன் இவ்வாறு கூறுகின்றார்கள்: "ஹாஉலாயில் அர்பஅதி லைச
ஹதீஸுஹும் ஹுஜ்ஜதுன்" 1-சஹல் இப்னு அபீ ஸாலிஹ், 2- அல்உலா பின் அப்துல் ரஹ்மான்,
3- ஆசிம் பின் உபைதுல்லாஹ், 4- இப்னு அகீல். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 6 பக்கம் 14)
ஆக ராவியின் (அறிவிப்பாளரின்) அடிப்படையில் இந்த அறிவிப்பானது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
5- ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸ் ஸஹீஹ் ஆனது என்று வைத்துக் கொண்டாலும், ஒன்றை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும், அதாவது, முஸ்லிம் ஹதீஸின் ஷரஹ் "இக்மாளுல் இக்மால்" இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "30 தஜ்ஜால் என்ற பொய்யர்கள் வந்துவிட்டனர்.....மேலும் ரசூல் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரையில் பொய் நபித்துவ வாதம் புரிந்தவர்களின் எண்ணிக்கை நிறைவேறிவிட்டது. வரலாறை படிப்பவர்கள் இவ்விஷயத்தை அறிந்து கொள்வர். (இக்மாளுல் இக்மால் பாகம் 7 பக்கம் 458)
இந்த நூலை எழுதியவர் ஹிஜ்ரி 828 இல் காலம் எய்துவிட்டார். அதாவது சுமார் 500 வருடங்கள் கடந்து விட்டன. முப்பது பொய்யர்களும் இவ்வாறு வந்து சென்றுவிட்டனர்.
ஆனாலும் இன்றைய மௌலவிமார்கள் இன்று வரை எண்ணிக்கை 30
ஐ நீடித்து
கொண்டே செல்கின்றனர்.
6- நவாப் சித்தீக்
ஹசன் கான் சாஹிப் (போபாலை சார்ந்தவர்) ஹஸ்ரத் மிர்ஸா
சாஹிபின் வாதத்திற்கு முன்பே எழுதிய தனது நூலாகிய ஹஜஜூல் கராமா எனும் நூலில், தஜ்ஜாலின் எண்ணிக்கை பூர்த்தியாகிவிட்டது" என்று எழுதியுள்ளார். அவர்
கூறுகின்றார், " இந்த உம்மத்தில் தோன்றவிருந்த தஜ்ஜாலின்
வருகையை பற்றி ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் அறிவித்த முன்னறிவிப்பானது நிறைவேறி
எண்ணிக்கை பூர்த்தியாகிவிட்டது. (ஹஜஜூல் கராமா பக்கம் 239)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு, வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் வரை நுபுவ்வத், மற்றும் தமக்கு வஹீ வருகிறது என பொய்யாக வாதம் செய்தவர்களின் பட்டியலை நாம் கீழே தருகிறோம்.
அஸ்வத் அன்ஸி (ஹிஜ்ரி 11, கொலை செய்யப்பட்டான்)
முஸைலிமா கஸ்ஸாப் (ஹிஜ்ரி 12, கொலை செய்யப்பட்டான்)
ஸுஜாஹ் பின்த் ஹர்ஸ் தமீமா (இவள் ஒரு பெண். இவளும் இவளை பின்பற்றியவர்களும் இடம் தெரியாமல் போனார்கள்)
ஹாரிஸ் கஸ்ஸாப் தமிஷ்க்கீ (ஹிஜ்ரி 69, கொலை செய்யப்பட்டான்)
முகைரா பின் சயீது அஜ்லீ (ஹிஜ்ரி 119, கொலை செய்யப்பட்டான்)
பயான் பின் சம்ஆன் தமீமி (ஹிஜ்ரி 119, கொலை செய்யப்பட்டான்)
அபூ மன்ஸூர் அஜ்லீ (கொலை செய்யப்பட்டான்)
அபூ மன்ஸூர் அஸ்பி பர்குவாத்தி (ஹிஜ்ரி 369, கொலை செய்யப்பட்டான்)
பஹா ஃபரீது ஸவ்ஜானி நேஷாபூரி (கொலை செய்யப்பட்டான்)
ஸாலிஹ் பின் தரீஃப் பர்குவாத்தி (ஹிஜ்ரி 125 அல்லது 127, இவரும் இவரை பின்பற்றியவர்களும் இடம் தெரியாமல் போனார்கள்)
அலீ இப்னு முஹம்மது காரிஜீ (ஹிஜ்ரி 207, கொலை செய்யப்பட்டான்)
ஸக்கரவியா பின் மாஹிர் கரம்த்தீ (வாதம்: மஹ்தி மற்றும் வஹீ வருதல், ஹிஜ்ரி 280, கொலை செய்யப்பட்டான்)
யஹ்யா பின் ஸக்கரவியா கரம்த்தீ (ஹிஜ்ரி 289, கொலை செய்யப்பட்டான்)
அலீ பின் ஃபஸல் யமனீ (ஹிஜ்ரி 303, கொலை செய்யப்பட்டான்)
அபூ ஈஸா இஸ்ஹாக் அஸ்ஃபஹானீ (கி.பி 754 லிருந்து 775, இவரும் இவரை பின்பற்றியவர்களும் இடம் தெரியாமல் போனார்கள்)
இஸ்ஹாக் அக்ரஸி அஸ்ஃபஹானி (ஹஜஜுல் கராமா பக்கம் 238) (சுமார் ஹிஜ்ரி 135, கொலை செய்யப்பட்டான்)
பாபக் பின் அப்துல்லாஹ் கர்ரஹீ (ஹிஜ்ரி 222, கொலை செய்யப்பட்டான்)
அஸ்கர் இப்னு அபுல் ஹுஸைன் துக்லபீ (ஹிஜ்ரி 439, கொலை செய்யப்பட்டான்)
அப்துல் அஸீஸ் பாசிந்தி (ஹிஜ்ரி 322, கொலை செய்யப்பட்டான்)
ஹாமீம் பின் மன்னல்லாஹ் மஜ்கஸி (ஹிஜ்ரி 329, கொலை செய்யப்பட்டான்)
அப்துல் அஸீஸ் தராபில்ஸி (ஹிஜ்ரி 717, கொலை செய்யப்பட்டான்)
முக்தார் இப்னு அபூ உபைது சகஃபி (ஹிஜ்ரி 27, கொலை செய்யப்பட்டான்)
சராக்தீன் ஜம்மு வாலா (தனக்கு வஹீ வருகிறது என்று வாதம் புரிந்தார். பிளேக் நோயில் அகப்பட்டு மரணம் அடைந்தார். அவரும் அவரை பின்பற்றியவர்களும் இடம் தெரியாமல் போனார்கள்)
அலக்ஸாண்டர் டூயி (இவனும் இவனை பின்பற்றியவர்களும் இடம் தெரியாமல் போனார்கள்)
உஸ்தாத் சேஸ் குராசானி (ஹிஜ்ரி 150, கொலை செய்யப்பட்டான்)
அபுல் காசிம் அஹ்மது பின் கஸீ (ஹிஜ்ரி 560, கொல்லப்பட்டான்)
அப்துல் ஹக் இப்னு சப்ஈன் முர்ஸா (ஹிஜ்ரி 668, கொல்லப்பட்டான்)
அபூ தய்யிப் அஹ்மது இப்னு ஹுஸ்னைன் முதனப்பி (ஜெயிலில் அடைக்கப்பட்டார், பிறகு தவ்பா செய்ய சொல்லி விடுவிக்கப்பட்டார்)
பா யஸீது ரோஷன் ஜலந்தரி (10 ஆம் நூற்றாண்டு, தமது குறிக்கோளில் தோல்வி அடைந்தார். அவரும் அவரி பின்பற்றியவர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள்)
மீர் முஹம்மது ஹுஸைன் மஷ்ஹதி அல்-மஃரூஃப் நமூத் (தமது குறிக்கோளில் தோல்வி அடைந்தார். அவரும் அவரி பின்பற்றியவர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள்)
பஹ்பூது ஈராக்கீ (ஹஜஜுல் கராமா பக்கம் 236, கொலை செய்யப்பட்டான்)
அபூ தாஹிர் கரம்தீ (ஹஜஜுல் கராமா பக்கம் 236, கொலை செய்யப்பட்டான்)
அக்பர் பாதுஷா (ஹஜஜுல் கராமா பக்கம் 237, தௌபா செய்துவிட்டார்)
மர்தே நஹாவந்தி (ஹஜஜுல் கராமா பக்கம் 237, கொலை செய்யப்பட்டான்)
காஸாரி ஸாஹர் (ஹஜஜுல் கராமா பக்கம் 237, கொலை செய்யப்பட்டான்)
மர்தே பைதுல் முகத்தஸி (ஹஜஜுல் கராமா பக்கம் 237, கொலை செய்யப்பட்டான்)
அப்துல்லாஹ் பின் மைமூன் பின் முஸ்லிம் பின் அக்கீல் (ஹஜஜுல் கராமா பக்கம் 239, கொலை செய்யப்பட்டான்)
ஆக வரவிருந்த அந்த 30 பொய்யர்களும் வந்து சென்றுவிட்டனர். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 31 வது நபர் ஆவார் அதாவது வரக்கூடிய அந்த பொய்யர்களுக்கு பிறகு வந்த உண்மையான நபி ஆவார்கள்.
மிர்சா நபி என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் படி ஆதாரங்கள் தரவும்
பதிலளிநீக்குஒருவர் நபி என்பதற்கு குர்ஆன் கூறும் அடிப்படை ஆதாரம், தான் ஒரு நபி என்று வாதம் செய்தவரின் முன்னுள்ள வாழ்க்கை பரிசுத்தமானதாக இருக்க வேண்டும். இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது, ரசூல் (ஸல்) அவர்கள் தமது நபித்துவ வாதத்தின் உண்மைக்காகவும் வைத்த வாதம் இது. அதாவது "லகத் லபிஸ்தும் ஃபீக்கும் உமரன் அஃபலா தஃகிலூன்." அதாவது நாம் உங்களது மத்தியில் வாழவில்லையா. எமது வாழ்க்கையில் ஏதாவது குறை கூறும் வகையில் இருந்ததா என்ன! இப்போது பொய்யோ புறட்டோ செய்வதற்கு, நீங்கள் இதனை சிந்திப்பதில்லையா!? என்று நபி ஸல் அவர்களை அல்லாஹ் கூற சொன்னதாக திருக்குர்ஆன் பதிவு செய்கிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் அவர்களின் வாழ்க்கை பரிசுத்தாமனதாக இருந்தது. அப்படி இருக்கும்போது அவர் எவ்வாறு நபித்துவ வாதத்தில் பொய்யுரைத்திருப்பார், இட்டுக்கட்டியிருப்பார்! இதனை சிந்திப்பதில்லையா என்று இறைவன் கேட்க வைத்தது போல், நாம் உங்களிடம் கேட்டுக் கொள்வது, இதனை நீங்கள் சிந்திப்பதில்லையா!?
நீக்கு