14 வது நூற்றாண்டின் முஜத்தீத் (மார்க்க சீர்திருத்தவாதி) எங்கே...!?

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது உம்மத்தின் நாசம் மற்றும் அழிவை பற்றி எவ்வாறு முன்னறிவித்துள்ளார்களோ அதே சமயம் இஸ்லாத்தின் வெற்றி எதை சார்ந்து இருக்கிறது என்பதை பற்றியும் பல்வேறு முன்னறிவிப்புக்களை செய்துள்ளார்கள். அதில் ஒன்று முஜத்தித் என்ற முன்னறிவிப்பும் ஆகும். ஆனால் இன்றய உலமாக்கள் இதனை மக்கள் மத்தியில் மறைத்து வருகின்றார்கள். காரணம் மக்கள் முஜத்தீதை தேட ஆரம்பித்து விடுவார்கள். நமது பொழப்புக்கு ஆப்பு வைத்துவிடுவார்கள் என்ற ஓர் சுயநலம். இவ்வாறு சுய நலத்தை கொண்ட ஆலிம்களையே இன்றுள்ள முல்ஸிம்கள் நம்பி வருகின்றனர். பின்பற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கோ அல்லாஹ் குர்ஆனின் அறிவையும், ஞானத்தையும் கொடுப்பதில்லை. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: 

இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.(22:4)

ஆக மார்க்க விஷயத்தில் எந்த அறிவும், ஞானமும் இல்லாது தர்க்கம் செய்யும் ஆலிம்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பது இந்த வசனம் மூலம் தெரிகின்றது.


இந்த ஆலிம்கள் மூலமாகத்தான் மார்க்கத்திற்கு இழிவு ஏற்படும் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறி சென்றுள்ளார்கள்

மக்களில் ஒரு காலம் வரும், அப்போது இஸ்லாம் பெயரளவிலே இருந்துவிடும், குர்ஆன் எழுத்து வடிவின் அளவிலே இருக்கும். வெளிப்படையாக அவர்களின் பள்ளி நிறைந்ததாக காணப்படும் ஆனால் நேர்வழியிலிருந்து காலியாக இருக்கும். அவர்களின் ஆலிம்கள் வானத்தில் கீழ் மிக கேட்ட ஜந்துக்கலாக இருப்பார்கள். அவர்களிடமிருந்தே குழப்பங்கள் உருவாகி அவர்களிடமே திரும்பிவிடும்.                                                           (மிஷ்காத், பாடம்: கல்வி)
மேலும் கூறுகின்றார்கள்:

ஒரு காலம் வரும் அப்போது மக்களிடம் இல்ம் என்ற இந்த ஞானம் இல்லாமல் போகிவிடும் அப்போது ஒரு நபி தோழர் கேட்டார்கள் எப்படி எங்களிடம் இல்ம் என்ற இந்த ஞானம் இல்லாமல் போகும் நாங்கள் எங்கள் சந்ததிகளுக்கு இந்த குர்ஆன்னை கற்று தருவோம் அவர்கள் அவர்களுடைய சந்ததிக்கு கற்றுத்தருவார்கள் இப்படி வழிவழியாக கற்று தருகின்ற இந்த நிலையில் எப்படி எங்களிடம் இல்ம் இல்லாமல் போகும் என்று கேட்டதர்க்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வளவு நாள் நான் உன்னை அறிவுடையவனாக கருதினேன் ஆனால் நீயோ மூளை இல்லாதவராக உள்ளீர் என்று கூறிவிட்டு சொன்னார்கள் இந்த யூதர்களிடமும் கிறித்தவர்களிடமும் வேதம் இல்லையா அவர்களிடம் தவ்ராத் மற்றும் இஞ்சில் உள்ளது அதனை அவர்கள் படிக்கிறார்கள் அவர்கள் அதனை நேர்வழி தரக்கூடிய வேதமாக அவர்கள் கருதுகின்ற நிலையில் அவர்கள் வழிதவறி செல்லவில்லையா அது போன்று என்னுடைய மக்களும் வழிதவறி சென்றுவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                                   (நூல் : முஸ்னத் அஹமத், மிஸ்காத் (கிதாபுல் இல்ம்)

அதே வேலையில் அவர்களின் இந்த செயலை, அவர்கள் இருக்கும் வழி கேட்டினை மக்களுக்கு எடுத்து கூறவே ஒவ்வொரு நூற்றாண்டு காலகட்டத்திலும் அல்லாஹ் மார்க்க சீர்திருத்தவாதியை (முஜத்தித்மார்களை) அனுப்புவான் என்பதையும் முன்னறிவிப்பாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களை கட்டு காத்து அவர்களுக்கு சரியான போதனையை எடுத்து கூறும் ஆசிரியர்கள் இல்லை என்றால் அந்த மாணவர்கள் கல்வி வழியில் சீரழிந்து போவார்கள் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் அறியக்கூடியவர்களாக இருக்கிறோம். இது உலக கல்வி.

ஆனால் மார்க்க கல்வி நூலை நமக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் நமக்கு வழங்கி தந்துள்ளான். அந்த கல்வி வரக்கூடிய காலத்தில் அன்னார் (ஸல்) வகுத்த வகுப்பில் உம்மத்தில் மாணவர்களாக இருக்கும் நாம் சீரழிந்து போகிவிடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டு காலத்திலும் முஜத்தீத் மார்களை அனுப்புவான் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது ஆன்மீக கல்வி.

நம்மில் சிலர் கூறலாம், அதான் பல்வேறு ஆலிம்கள் நமக்கு இந்த மார்க்க கல்வியை கற்று தருவதற்கு இருக்கின்றார்களே பிறகு ஏன் முஜத்தீது மார்களின் அவசியம் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு ஆசிரியர்தான் பாடம் எடுப்பார். எடுக்கவும் முடியும். அதே சமயம்  ஒரே நேரத்தில் பலர் பாடம் எடுத்தால் மாணவர்கள் குழம்பிதான் போவார்களே தவிர அவர்கள் என்ன எதை சொல்கிறார்கள், சொல்வதை சரியாகத்தான் சொல்கிறார்களா என்பது மானவர்களுக்கு புரியாது. இந்த நிலைதான் இந்த உம்மத்தே முகம்மத்தியா எனும் வகுப்பிலுள்ள மானவர்களாகிய நமக்கும் இருக்கிறது. இன்று இந்த ஆலிம்களின் பல்வேறு பத்வாக்கள் மூலமாகத்தான பல மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். இஸ்லாத்தில் எது சரி எது தவறு என்பதை சரியாக அவர்களால் சிந்தித்து கூட பார்க்க முடியாத வண்ணம் இந்த ஆலிம்கள் பாமர மக்களை ஆக்கி வைத்துள்ளார்கள். 

"கம்பெடுத்தவனெல்லாம் வேட்டை காரன் ஆகிவிட முடியாது" என்பது பலமொழி. இந்த அடிப்படையிலே இஸ்லாத்தின் கல்வியை அனைவராலும் புரிந்து அதை மற்றவர்களுக்கு புரிய வைத்து விட முடியாது. அந்த மார்க்க கல்வியாகிய குர்ஆனின் போதனை (கல்வி) இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. அதிலுள்ள ஞானத்தை இறைவன் தன் அடியான் மூலமாகத்தான் வெளிப்படுத்துவானே அல்லாமல் எல்லா மக்கள் மூலமாக வெளிப்படுத்த மாட்டான். இது இறைவன் வகுத்த வழி. இதனை குர்ஆன் படிக்கும் நம்மில் ஒவ்வொருவரும் அறிவர். ஆனால் இன்று இந்த நிலை முற்றிலும் தலை கீழாக உள்ளது. அவரவர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதற்கேற்ப இதுதான் மார்க்கம் என்று சொல்லி கொண்டு வருவது மட்டுமல்லாமல் தனது விளக்கத்தை ஏற்பவர்களை கொண்டு ஒரு பிரிவையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாரு பிரிவை ஏற்படுத்துபவர்களோடு நபியே உமக்கு எந்த தொடர்புமில்லை என்று இறைவன் குர்ஆனில் கூறி காட்டுகிறான்.

'நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்" (6:160)

ஆகவே இந்த பிரிவு நிலை இந்த உம்மத்தே முஹம்மதியாவில் தோன்றி அது நிலைத்துவிடக் கூடாது என்பதற்காக  ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த உம்மத்தின் ஒற்றுமைக்காக ஒரு சீர்திருத்தவாதியை முஜத்தீதை தோற்றுவான் என்று கூறியுள்ளார்கள். ஹதீஸின் வார்த்தை இவ்வாறு வருகின்றது:

"ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்," அல்லாஹ் தஆலா ஒவ்வொரு நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்த மார்க்கத்தை புதுப்பிப்பதற்காக ஒருவரை தோற்றுவிப்பான்"           (சுனன் அபி தாவூத், பாகம்;4, கிதாபுல் மலாஹிம், பக்கம்:109) (ஹதீஸின் மூலம் கீழே)


ஆக வகுப்பிலுள்ள  அந்த மாணவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுக்க அந்த பாடத்தில் தேர்ச்சி அடைந்த ஒரு ஆசிரியரால் மட்டுமே முடியும் அன்றி அனைத்து ஆசிரியர்களாலும் நடத்தி விட முடியாது. அவ்வாறே இறை வேதத்தை அதன் ஞானத்தை அறிந்த அதில் தேர்ச்சி பெற்ற ஒருவரால் மட்டுமே இந்த உம்மத்தை நேரிய வழியில் கொண்டு செல்ல முடியுமே அன்றி அந்த வேதத்தை கற்று அறிந்த அனைவராலும் முடியாது. அதனின் ஞானம் பெறுவது அவசியம். அந்த ஞானம் ஒருவருக்கு கிடைக்குமென்றால் அது இறைவனால் மட்டுமே கிடைக்கும் அதுவும் அவன் யாரை தேர்ந்தெடுக்கின்றானோ அவருக்கே கிடைக்கும்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித் மார்கள் வந்து சென்றுள்ளார்கள். அந்த வரிசையில் வந்த 14 வது நூற்றாண்டு முஜத்திதே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஆவார்கள். அவர்கள் தன்னை 14 வது நூற்றாண்டின் முஜத்தித் என்று வாதித்தார்கள். அவர்களை பலர் ஏற்றுமுள்ளனர். பலர் கேடுகெட்ட ஆலிம்களின் மூடத்தனமான பேச்சை கேட்டு எதிர்த்தும் வந்துள்ளனர். எதிர்க்கவும் செய்கின்றனர். ஒன்று இந்த ஆலிம்கள் 14 வது நூற்றாண்டின் முஜத்தீதை மக்களுக்கு காட்ட வேண்டும். இல்லை என்றால் வந்த முஜத்தித் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். காரணம் 14 வது நூற்றாண்டின் முஜத்தித் நானே என்று அவர்கள் வாதித்துள்ளார்கள். இவ்விரண்டும் இல்லை என்றால் இந்த ஆலிம்கள் மேற்சொன்ன ஹதீஸை நிராகரிக்க வேண்டும். இதில் இவர்கள் எதை ஏற்கப்போகிறார்கள்...?

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.