அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை எதிர்க்கும் சகோதரர்களில் கொள்கை நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்பதே. இதற்கு அவர்கள் வைக்கும் ஆதாரம், 33:40 வது வசனம். அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தில் நபிமார்களில் இறுதியானவர் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று கூறுகிறார்கள். இந்த வசனதுக்கு நம்மைவிட ரசூல் (ஸல்) அவர்களே அதிகமாக "காதமன் நபிய்யீன்" என்பதற்கு நபிமார்களில் இறுதியானவர் என்பதை அறிந்திருக்க வேண்டும் ஆனால் ரசூல் (ஸல்) அவர்கள் இதற்கு இவ்வாறு பொருள் கொடுக்கவில்லை. அவர்களின் கொள்கையும் எனக்கு பிறகு எந்த நபியும் இல்லை என்பது இல்லை. காரணம், இந்த வசனம் இறங்கிய வருடம் ஹிஜ்ரி 5 ஆம் வருடம்.
ஹிஜ்ரி 9 இல் அன்னாரின் (ஸல்) புதல்வன் இப்ராஹீம் அவர்கள் இறக்கிறார்கள். அப்போது ரசூல் (ஸல்) அவர்கள் கூறுவது, இவர் உயிரோடு இருந்திருந்தால் உண்மை நபியாக இறுதிருப்பார்" என்பதாகும். எனக்கு பிறகு இனி எந்த நபியும் கிடையாது என்று ஹிஜ்ரி 5 இல் அறிந்திருந்த ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 9 இல் இவ்வாறு கூறுவார்களா....? சகோ சிந்திக்க வேண்டும்...மேலே சொன்ன ஹதீஸின் ஆதாரம் கீழே:
அது மட்டுமல்லாது, புதல்வன் இப்ராஹீமின் கபரின் மீது கைவைத்து அவர் நபியே என்று கூட கூறியதாக அறிவிப்பில் வருகிறது. ஆதாரம் கீழே:
இப்னு மாஜாவில் வருகின்ற இந்த ஹதீஸ் பலகீனமானது என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் இந்த ஹதீஸ் பலகீனமானது இல்லை மாறாக வலுவானதே என்பதை ஆதாரத்தோடு கீழே தருகின்றோம்:
இந்த ஹதீஸ் வலுவானது என்பதற்கு இரு நம்பகத்தகுந்த நபர்கள் சாட்சி பகர்கின்றனர்.
ஒன்று ஷஹாப் அலி அல்பைலாவி."இந்த ஹதீஸின்
வலுவில் எவ்வித சந்தேகமும் இல்லை".
(அஷ்ஷிகாபு
அலி பைலாவி பாகம் 7 பக்கம் 175)
இரண்டாவது நபர், முகத்திஸ் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்,"சிலர் இந்த ஹதீஸ் பலகினமானது என்று கூறுகின்றனர்
ஆனால் இந்த ஹதீஸ் பலகினமானது இல்லை. ஏனென்றால் இது மூன்று வழிகளில் அறிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வழியும் பிறிதொரு வழியை வலுவூட்டுகிறது.(மவ்லூஆத் கபீர் பக்கம் 58) இதனை மேலும் இவர் வலுவூட்டும் வகையில் இவ்வாறு கூறுகிறார், இந்த ஹதீஸ் வசனம் காதமுன் நபிய்யீனுக்கு நேர்மாறானது அல்ல. ஏனென்றால் ஹஸ்ரத் ரசூல்
(ஸல்) அவர்களுக்கு பிறகு அன்னாரின் ஷரியத்தை தகர்த்தெரியக்கூடிய, அன்னாரின் உம்மத்திலல்லாத எந்த ஒரு நபியும் வர முடியாது. (மவ்லூஆத்
கபீர் பக்கம் 59)
இந்த ஹதீஸின் சனதில் (அறிவிப்பு வரிசையில்) மொத்தம் 6 அறிவிப்பாளர்கள்
இருக்கிறார்கள். 1 அப்துல் குத்தூஸ் பின் முஹம்மத். இவர் சம்பந்தமாக
ஹாஃபிஸ் ஹஜர் அஸ்கலானி "தஹ்ஸீபூத் தஹ்ஸீப் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:
"قال النسائی ثقۃ و
ذکرہ ابن حبان فی الثقاتـ
(தஹ்ஸீபுத் தஹ்ஸீப்,அய்ன் ஹர்ஃப் பாகம் 6 பக்கம் 370)
2 வது அறிவிப்பாளர், தாவூத் பின் ஷூஐப் அல்பாஹ்லி.
قال ابو حاتم صدوق و
ذکرہ ابن حبان فی الثقات
(தக்ஸீபுத்
தஹ்ஸீப் பாகம் 3 பக்கம் 188)
3 வது அறிவிப்பாளர் இப்ராஹீம் பின் உஸ்மான்.
சிலர் இவர்களை பலகினமானவர் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு எந்தவித காரணமும் அவர்கள்
கூறவில்லை. இவர் "வாஸ்த்" என்ற இடத்தின் காஜியாக இருந்தார். இவரை பற்றி தஹ்ஸீபுத்
தக்ஸீப் இல் இவ்வாறு எழுத்தப்பட்டுள்ளது,
"
قال یزید ابن ھارون ما قضیٰ علیٰ الناسرجل یعنی فی زمانہ اعدل فی القضاء
منہ۔۔۔۔۔قال ابن عدیٍّ
لہ احادیث صالحۃ وھو خیر من ابراھیم بن ابی حیّۃ
(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பக்கம் 145 வல் அக்மாலு ஃபிஸ் சமாயிர் ரிஜாலி, எழுத்தாளர் அல்லாமா கராஜி (ரஹ்) அடி குறிப்பு பக்கம் 20)
அபு ஹய்ய அவர்களை பற்றி தஹ்ஸீபுத் தஹ்ஸீப் இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,"قال النسائی
ثقۃ۔۔۔۔۔۔۔ووثقۃ الدار قطنی۔۔۔۔۔۔۔ابن حبان
(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 1 பக்கம் 113)
4 வது அறிவிப்பாளர், அல்ஹகம் பின் உதைபஹ். இவர் வலுவானவர், நம்பகமானவர், அருளுக்குரியவர் தொழுகையாளி.....என்று தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 2 பக்கம் 433 இல் எழுதப்பட்டுள்ளது.
5 வது அறிவிப்பாளர் மிக்ஸம். இப்னு ஷாஹீன்
மற்றும் அஹ்மத் பின் ஸாலிஹ் இவரை வலுவானவர் மற்றும் நம்பகமானவர் என்று கூறி உள்ளனர்.
(தஹ்ஸீபுத் தஹ்ஸீப், மீம் ஹர்ஃப் பாகம் 10 பக்கம் 289)
6 வது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி). முல்லா அலி காரி எழுதுகின்றார்கள்,"ابن عباس صحیح لا
ینکرہ الا معتزلی (மவ்லாது கபீர் பக்கம் 39) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை பற்றி அனைவரும்
அறிந்ததே, அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சச்சாவாக
இருந்தார்கள் மட்டுமல்லாமல் இரண்டு முறை ஹஸ்ரத் ஜிப்ராயீல் (அலை) அவர்களை சந்தித்து
இருக்கின்றார்கள். இதுவும் இந்த ஹதீஸின் வலுவை மேலும் வழுப்படுத்துகிறது. (தஹ்ஸீபுத்
தஹ்ஸீப் பாகம் 5 பக்கம் 279, அய்ன் ஹர்ஃப்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்)
ஆகவே மேலே கொடுக்கப்பட்டுள்ள வலுவான சான்றுகள் துவக்கத்தில் கூறிய இப்னு மாஜாவில் வருகின்ற ஹதீஸ் வலுவானதே பலகீனமானது இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. ஃபல்ஹம்துலில்லாஹ் அலா தாலிக்...
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None