இஸ்லாமிய பிரிவினர்களின் பலரும் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் 33 வயதை அடைந்த போது அவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்திவிட்டான் என்ற எந்தவித ஒரு ஆதாரமும் இல்லாத ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு கிருத்தவர்கள் ஒரு இஸ்லாமியனை நோக்கி கை காட்டி பேசும்படி செய்துள்ளார்கள். ஆனால் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அனைத்து நபிமார்களை போன்று அனைத்து மனிதனை போன்று இந்த பூமியிலேயே வாழ்ந்து மரணம் அடைந்துள்ளார் என்று கூறிய, கூறி வருகின்ற ஒரே இஸ்லாமிய கூட்டம், ஜமாஅத் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஒன்றே. அதற்கான பல ஆதாரங்களை தன்னகத்தே வைத்துள்ளன. அல்லாஹ் மிகத்தெளிவாக குர்ஆனிலும் கூறி காட்டியுள்ளான். ஹதீஸ் மூலமும் தெளிவாகிறது. அதில் ஒன்று கன்ஸுல் உம்மால் என்ற ஒரு ஹதீஸின் தொகுப்பு நூல். அதில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இந்த பூமியில் 120 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார்கள் என்பதை எடுத்து கூறும் ஹதீஸ் இடம்பெற்றுள்ளன. (கன்ஸுல் உம்மால் பாகம் 11, ஹதீஸ் நம்பர்: 32262)
மூல ஆதாரம் கீழே:

நிச்சயமாக... நன்றி சகோ
பதிலளிநீக்கு