ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் பார்வையில் :
"எந்த அளவுக்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கூற முடியுமோ அந்த அளவுக்கு வேறெந்த சமுதாயமும் தமது நபியின் நடைமுறையை எடுத்துக் கூறமுடியாது. உதாரணமாக மசீஹ் (அலை) அவர்களின் பொறுமை பற்றி  மட்டும் கிடைக்கும் , அதாவது அவர் அடி வாங்கி கொண்டே இருந்தார்.  ஆனால் அவர்களுக்கு வலிமை  கிடைத்தது  என்று எங்கிருந்து கிடைக்கும். அந்த நபி உண்மையாளராகவே இருக்கின்றார். ஆனால் அவர்களின் அனைத்து வகையான நடைமுறைகளும் நிரூபிக்கபடாததாகும். அவர்களை பற்றி திருக் குரானிலும் வந்துள்ளது. ஆகவே நாம் அவர்களை நபி என்று ஏற்றுக் கொள்கிறோம். இன்ஜீலில் ஓ‌ர் ஆற்றல் மிகுந்த நபியின் மகத்துவம் எவ்வாறு இருக்குமோ அவ்வாறான எந்த நடைமுறையை பற்றி எதுவும் இன்ஜீலில் அவர்களை (ஹஸ்ரத் ஈஸா (அலை)) பற்றி  நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறே எமது முழுமையான நேர்வழி காட்டி (ஸல்) அவர்களும் துன்பம் நிறைந்த முதல்  13 ஆண்டு காலத்தில் மரணம் அடைந்திருந்தால் அன்னாரின் பல நடைமுறைகள் நமக்கு ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை போன்று நிரூபிக்கப்பட்டிருக்காது. ஆனால் இரண்டாவது காலமான வெற்றியின் காலம் வந்த போது, குற்றவாளிகள் அன்னாரின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அன்னாரின் கருணை மற்றும் மன்னித்தல் என்ற குணத்தின் முழு ஆதாரம் (நமக்கு) கிடைக்கின்றது. இதன் மூலம் அன்னார் (ஸல்) அவர்களின் எந்த பணியும் கட்டாயத்திற்கு உட்பட்டது அல்ல நிர்பந்தத்திற்கும் உட்பட்டது அல்ல  என்பதும் தெளிவாக விளங்குகிறது." (மல்ஃபூசாத்)

1 கருத்து:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.