அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் வருடாந்திர மாநாடு
2012 டிசம்பர் 29,30,31
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் 121 வது அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் வருடாந்திர மாநாடு பஞ்சாபிலுள்ள காதியான் எனும் இடத்தில் டிசம்பர் 29,30,31 சனி ஞாயிறு திங்கள் அன்று நடைபெறவிருக்கிறது. இன்ஷா அல்லா...
ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்களுக்கு ஒரு முன்னறிவிப்பை அல்லாஹ் இந்த வருடாந்திர மாநாடு சம்பந்தமாக அறிவித்தான் அதாவது,
" உம்மிடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவர். எந்த அளவுக்கு என்றால் பாதைகள் குண்டும் குழியுமாக ஆகிவிடும் "
மேலும் கூறினான்,
"உமது ஸ்தலத்தை விரிவாக்கிக்கொள்."
அல்லாஹ் அன்னாருக்கு அறிவித்த இந்த முன்னரிவிப்பிர்கேற்ப இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி பல நல் உள்ளம் படைத்த அஹ்மதி முஸ்லிம்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) மற்றும் அவர்களின் அடிமையாகிய ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்றுக்களை கேட்டு தனது ஆன்மீக தாகத்தை பூர்த்தி செய்து கொள்ள வருகை தருகின்றனர்..மூன்று நாட்கள் அல்லாஹ்வுக்காக இங்கிருந்து ஆன்மீக விஷயங்களை கேட்டு திரும்பி செல்கின்றனர்..இவ்வாறு இவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்காக ஹஸ்ரத் மசீஹ் மஊத் (அலை) அவர்கள் செய்த துஆவிற்கும் வாரிசாகின்றனர்..அல்லாஹ் வருகை தரும் ஹஸ்ரத் மசீஹ் மஊது (அலை) அவர்களின் விருந்தினர்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக..இந்த மாநாடு அனைத்து வகையிலும் சீரும் சிறப்புமாக, வெற்றிகரமாக நடந்து முடிய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்..
மேலும் விபரம்....
http://www.jalsasalana.org/qadian/2012/


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None