|
ஆன்லைன் பொய்யனின்
அட்டகாசம் - ஆங்கிலத்தில் இறங்கிய வஹியில் தவறு இருந்ததா?
|
ஹஸ்ரத் அஹ்மத்
(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
"சத்தியத்தின்
விரோதிகள் முன்பு எப்போதாவது தங்களின் கொடூரமான குற்றமுடைய செயல்களால் வெற்றி
பெற்றிருந்தால் இவர்களும் வெற்றி பெற முடிந்திருக்கும். ஆனால் இறைவனுக்கும்
அவனுடைய நோக்கங்களுக்கும் விரோதமாக செயல் புரிந்து வந்தவர்களுக்கு எப்பொழுதும்
தோல்வியே கிடைத்தது. இது உண்மைஎன்றால் இவர்களுக்கும் இழிவும் அழிவும் தோல்வியும்
வரக்கூடிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இறை வசனங்கள் ஒரு போதும் தோல்வி
அடையாது. இறைவனும் இறைத்தூதர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு சட்டமாக
ஆக்கப்பட்டிருக்கின்றது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.... எனவே ஆதாமின் காலம்
முதல், எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை
மேற்கூறப்பட்ட விதியும் சட்டமும் சத்தியமாகப் பூர்த்தியாகி வந்ததைப்போல, என்னுடைய விஷயத்திலும் அது நிச்சயமாகப் பூர்த்தியாகியே தீரும் என்று நான்
ஆணித்தரமாகக் கூறுகிறேன். (நுஸூலுல் மஸீஹ்)
ஆதிகாலத்திலிருந்தே
இறைத்தூதர்களையும் அவர்களால் நிறுவப்பட்ட ஆத்மீக இயக்கங்களையும் தீய சக்திகள்
எதிர்த்து வந்ததாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. இதுபற்றி திருமறையில்
இறைவன் மிகத் தெளிவாக கீழ்வருமாறு கூறியுள்ளான்.
"ஒவ்வொரு
நபிகேதிராகவும் நாம் குற்றவாளிகளிலிருந்தே விரோதிகளை உண்டாக்குகின்றோம்."
(சூரா புர்கான்)
"கொடூரமான
இயல்புள்ள ஜின்களிலிருந்தும், நாம் ஒவ்வொரு
நபிக்கெதிராகவும் விரோதிகளை உண்டாக்குகின்றோம்." (சூரா அன்பியா)
"அடியார்களுக்கு
அந்தோ பரிதாபம்! அவர்களால் ஏளனம் செய்யப்படாத எந்த ஒரு நபியும் அவர்களிடம்
தோன்றியதில்லை. (சூரா யாசீன்)
அல்லாஹ்வுடைய
இக்கூற்றின் படியே ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் ஹஸ்ரத் முஹம்மது நபி அவர்கள்
வரை தோன்றிய நபிமார்கள் அனைவரும் அவரவர் காலத்திலுள்ள மக்களும் பண்டிதர்களும்
எதிர்த்துக் கொண்டே வந்துள்ளனர்.
இதே சட்டத்தின்
படியே இக்காலத்தில் தோன்றிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இமாம்
மஹ்தி(அலை) அவர்களை ஆன்லைன் பொய்யனும் அவனுடைய அடிவருடிகளும் எதிர்கிறார்கள்
என்றால் அதில் ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றுமில்லை.
மேலும்
முஸ்லிம்களை, முஸ்லிமல்லாதவர்கள் என பிரகடனப்படுத்துவதும் ஆன்லைன்
பொய்யனுக்கு கைவந்த கலையாகும். இந்த ஆன்லைன் பொய்யனின் கைங்கரியத்தால் இன்றைக்கு
இஸ்லாமிய சமுதாயத்தில் என்னத்தனைய பிரிவுகள் மலிந்துள்ளன.
இமாம் மஹ்தி அலை
அவர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதி வந்த ஆன்லைன் பொய்யன் தற்போது புதிதாக இரண்டு குற்றச்சாட்டுகளை
எடுத்து வைத்திருக்கிறார். இதற்க்கு முன்பு எழுப்பிய 11 குற்றச்சாட்டுகளுக்கும் நாம் விளக்கம் கொடுத்தோம் இதற்க்கு மறுப்பு தெரிவிக்க
முடியாத நிலையில் புளுகு மூட்டை என்ற பெயரில் இமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி
இந்த ஆன்லைன் பொய்யன் புளுகியிருக்கிறார்.
இது போன்ற
குற்றச்சாட்டுகள் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் காலத்திலேயே இறையச்சமற்ற
முல்லாக்களால் எழுப்பப்பட்டது. அப்போதே அதற்க்கு பதில் கொடுக்கப்பட்டு அந்த
முல்லாக்களின் வாய் முத்திரையிடப்பட்டது. இப்படிப்பட்ட அவுட் ஆப் டேட் ஆனா ஆகாசப்
புளுகுகளுக்கு புதுவடிவம் கொடுத்திருக்கிறார் இந்த ஆன்லைன் பொய்யன். இதன் மூலம்
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தைப் பற்றி தவறான என்னத்தைப் பரப்பி தங்களுடைய
வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது பகற்கனவேயாகும். ஏனென்றால்
நாம் கொடுத்த விளக்கங்களைப் பார்த்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்துவிட்டார்கள்
என்றும், நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி இல்லை என்றும் புரிந்து
கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இதுபோன்ற ஆகாசப் புளுகுமூட்டைகளை
அவிழ்த்துவிடுவதை நிறுத்தி விட்டு இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள்.
இமாம் மஹ்தி
(அலை) அவர்களுக்கு இறைவன் இறக்கிய இல்ஹாம்
"இன்னி முஹீனுன்
மன் அராத இஹானத்தக்க"
"எதைக் கொண்டு
ஒருவன் உம்மை இழிவுபடுத்துவானோ அதைக் கொண்டே நாம் அவனை இழிவுபடுத்துவோம்"
மேலும் ஹஸ்ரத்
மஸீஹ் (அலை) அவர்கள் தமது பார்ஸி கவிதை ஒன்றில் தம்முடைய எதிரிகளை நோக்கி
கூறுகிறார்கள். "எனது பகைவனே! எச்சரிக்கையாய் இரு. நல்லடியார்களின்
துஆக்களின் ஓசையால் உனக்கு பயம் ஏற்படுவது இயல்பே!அதிலும் அந்த பத்துவா
மிர்சாவுடையதாக இருந்தால் நீ அதிகமாகப் பயப்பட வேண்டும்."
இனி ஆன்லைன்
பொய்யனின் குற்றச்சாட்டைப் பார்ப்போம்.
ஆகாசப் புளுகு
ஆகாசப் புளுகன்
பொய்யன் ஜைனுலாப்தீன் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் இறங்கிய வஹியின்
தவறு இருத்ததாக புளுகி இருந்தார். ஆனால் அவர்களுக்கு இறங்கிய வஹியில் எந்த தவறும்
ஏற்படவில்லை.
1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு இந்த வஹி இறங்கியது. அது ததுகிறா என்ற நூலில்
பக்கம் 78 யில் இவ்வாறு காணப்படுகிறது.
Though all men should be angry but god is with you.
He shall help you. Words of god can not exchange.
அதன் போட்டோ காபி
1883 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம்(இந்த வஹி இறங்கி ஐந்து மாதம் கடந்த பின்னர்) மீர் அப்பாஸ் அலி
என்பவருக்கு எழுதிய கடிததத்தில் words of god not can exchange என்று எழுதியுள்ளார்கள். இதன் மூலம் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு இறங்கிய
வஹியில் தவறில்லை. அதை எடுத்து எழுதும் போதுதான் அவர்களுக்கு தவறு
ஏற்பட்டிருக்கிறது. இதை ஆன்லைன் பொய்யன் உணரவேண்டும். ஆன்லைன் பொய்யன் தத்தகிர
என்ற நூலில் இருந்து எடுத்த போட்டோ காபி தான் கீழே இடம்பெற்றிருக்கிறது.
ஆன்லைன் பொய்யனுக்கு நாம் கூறும் அறிவுரை. திருக்குரானைன்யும் ஹதீசையும்
பிறருக்கு சொன்னால் மட்டும் போதாது. அதை தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.
இல்லை என்றால் நீங்கள் மக்கள் மத்தியில் செல்லாக்காசாகிவிடுவீர்கள். விரைவில்
உங்களுடைய தௌஹீது புளுகு மூட்டையை கட்டிக் கொண்டு ஓட நேரிடும்.
ஆட்சேபனையுடன்
சேர்த்து இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்தான் திருக்குரானில் வருகிறது "மா
அர்ஸல்னா மின் ரசூலின் இல்லாபி லிசானிக் கவ்மிஹி லியு பய்யின லஹும்" நாம்
எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை அவருடைய சமுதாய மொழியிலேயே அன்றி, அவர் அவர்களுக்கு விளக்கிச்சொல்வதற்க்காக. ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை
அனுப்புகிறான் என்றால் அந்த சமுதாய மொழியில் தான் வஹி இறங்க வேண்டும். அனால்
இவருடைய சமுதாய மொழி பஞ்சாபி, மற்றும் உருது
மொழியாகும். இவர் தனக்கு ஆங்கிலத்தில் வஹி இறங்கினதாக குறிப்பிடுகின்றார். இந்த
திருக்குரானுடைய வசனத்திற்கு இவர் முரண்படுகிறார். என்று எடுத்துவைத்தார்.
இதற்க்கு அஹ்மதியா தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. எனவே இந்தப் பொய்யன்
அதை இங்கு குறிப்பிடவில்லை.
இந்த வசனத்தில்
இறைவன் குறிப்பிடுவது ஒரு சமுதாயத்திற்கு இறைவன் தூதரை அனுப்புகிறான் என்றால் அந்த
சமுதாய மொழியை அவர் தெரிந்தவராக இருக்கவேண்டும் என்பதே. இங்கு மொழியைப் பற்றி
வருகிறதே தவிர அந்த இறைத்தூதருக்கு இறைவன் இறக்குகின்ற வஹியைப் பற்றி
வரவில்லை.ஏனென்றால் திருக்குரானில் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியில் வஹி
இறங்கியதாக வருகிறது.
"உல்லிம்னா
மந்திக்க தைர்" நாம் சுலைமான் நபிக்கு பறவையின் மொழியைக் கற்றுக் கொடுத்தோம்
என்று வருகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குரானை இறைவன் கற்றுக் கொடுத்தது
போன்று சுலைமான் நபிக்கு பறவையின் மொழியை கற்றுக் கொடுத்ததாக வருகிறது. எந்த
சமுதாயத்திற்கு சுலைமான் நபி தூதராக அனுப்பப்பட்டாரோ அந்த சமுதாயத்தினுடைய மொழி
பறவையின் மொழியாக இருந்ததா? உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தில் வஹி
இறங்கியதை இஆட்சேபனையும் செய்யும் இந்தப் பொய்யன், சுலைமான் நபிக்கு பறவையின் மொழியின் வஹி இறங்கியதை எந்த அளவுக்கு ஆட்சேபனை
செய்ய வேண்டும். இந்தப் பொய்யன் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீது எந்த ஆட்சேபனை
செய்தாலும், அந்த ஆட்சேபனைகள் மற்ற நபிமார்களையும்
நிராகரிக்கும்படி தானாகவே வந்து அமைந்துவிடும்.
வஹி இறங்கும்
போது ஒரு வேகம் வருகிறது என்று இமாம் மஹ்தி (அலை) கூறியதை இந்தப் பொய்யன்
கிண்டலடித்தான்.
வஹீ இறங்கும்
போது ஒரு வேகம் வருகிறது என்பதை ஹதீதும், திருக்குரானும் கூறுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குரானுடைய வசனங்கள்
வஹியாக இறங்கும்போது மனனம் செய்ய வேண்டும் என்பதற்காக தம்முடைய நாக்கை மிக வேகமாக
அசைத்ததாக வருகிறது . இதைப் பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறும்போது "வலா
துகர்றிக் பி லிசானிக்க" நீர் உம்முடைய நாக்கை அசைக்கவேண்டாம். இதனை
தொகுப்பது தம்முடைய பொறுப்பாகும் என்று வருகிறது.
இமாம் மஹ்தி
(அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் இறங்கிய ஒரு வஹியில் இலக்கணப் பிழை இருந்ததே தவிர
கருத்துப் பிழை எதுவும் வரவில்லை.
வஹீ இறங்கும்போது
இது போன்ற பிழைகள் வருவது சகஜம் என்று உளறினான். என்று இந்தப் பொய்யன்
குறிப்பிடுகின்றான். இஸ்லாத்தின் எதிரிகள் திருக்குரானிலிருந்து இந்தமாதிரியான
ஆட்சேபனையை கிளப்பினார்கள். உதாரணமாக திருக்குரானில் வருகிறது
"காலு இன்ஹாசாணி ல
ஷாஹிரானி" 'iஇவ்விருவரும் இரு ஷாஹிர்கள் (மந்திரவாதிகள்) என்று
வருகிறது.
அரபி
இலக்கணத்தின்படி இன் என்று வந்தால் ஹாஷானி என்று வரக்கூடாது, ஹாஷைனி என்று தான் வரவேண்டும் என்று கூறினார்கள். இதற்க்கு இஸ்லாமிய
அறிஞ்சர்கள் கூறிய விளக்கம் என்னவென்றால் இலக்கணம் என்பது மனிதர்கள் புரிந்து
கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இதன் பின்னால் இறைவன் போக வேண்டிய அவசியமில்லை.
என்று விளக்கம் கொடுத்தார்கள்.
இஸ்லாத்தினுடைய
எதிரிகள் திருக்குரானில் இருந்து எடுத்துக் காட்டும் இந்த ஆட்சேபனையை வைத்து
இந்தப் பொய்யன் "அல்லாஹ் திருக்குரானில் பிழையாகப் பேசியுள்ளான்
(நவூதுபில்லாஹ்) என்று கூறுவானா?



கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None