வக்பே நவ் இஜ்திமா தென்மண்டலம் தமிழ்நாடு 2011
அல்ஹம்துலில்லாஹ், மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு தென்மண்டலத்திற்கு வக்பே நவ்விற்கான இஜ்திமா நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இஜ்திமா 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று மேலப்பாளையம் அஹ்மதிய்யா முஸ்லிம் மிஷனில் வைத்து நடைபெற்றது. இதில் கணிசமான அளவில் வக்பே நவ் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர். இந்த திட்டம் ஹஸ்ரத் நான்காவது கலிபதுள் மஸிஹ் (ரஹ்) அவர்களால் 1987 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஒவ்வொரு பெற்றோர்களும் தமது குழந்தையை பிறப்பதற்கு முன்னதாகவே சேர்க்க வேண்டும்.
இத்திட்டம் துவங்கி நாளிலிருந்து இன்றுவரைக்கும் முழு உலகிலும் சுமார் ஆயிர கணக்கில் பெற்றோர்கள் தமது குழந்தைகளை இணைத்துள்ளனர். தமிழ் நாடு தென்மண்டலத்தில் சுமார் 36 பேர் இந்த இறை திட்டத்தில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் முழு நோக்கமானது ஹழ்ரத் காதமுன் நபிய்யீன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த உண்மை இஸ்லாத்தினை முழு உலகிலும் எட்ட வைப்பதாகும்.
இதை தொடர்ந்து முழு உலகிலும் சுமார் 200 நாடுகளில் எங்கெல்லாம் இந்த இறை ஜமாஅத் இருக்கிறதோ அங்கெல்லாம் வருடா வருடம் இந்த திட்டத்தில் தன்னை இணைத்தவர்களுக்காகவும் அவர்களது பெற்றோர்களுக்காகவும் ஓர் இஜ்திமா ஒன்றை நடத்தப்படும். இதில் அவர்களுக்கு தர்பியத் சம்பந்தமான விஷயங்களை எடுத்து கூறப்படும்.
இதை தொடர்ந்து தமிழ் நாடு தென்மண்டலத்தில் இவ்வருடம் வக்பே நவ் இஜ்திமா மேற்கூறப்பட்ட தேதியில் நடைபெற்றது. இக்கூட்டம் இத்திட்டத்தின் மண்டல செயலர் ஜனாப் மஹ்மூத் அஹ்மத் சாஹிப் மண்டல இளைஞயர் அணித் தலைவர் தமிழ் நாடு தென்மண்டலம் அவர்களின் கீழ் நடைபெற்றது. ஜனாப் ஆ.பி.யு.அப்துல் காதிர் சாஹிப் அமீர் தென் மண்டலம் தமிழ்நாடு அவர்களின் தலைமயில் இக்கூட்டம் இனிதே துவங்கி து ஆ வுடன் இனிதே முடிந்தது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து வக்பே நவ் குழந்தைகளுக்கும் ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இரண்டு வக்பே நவ் குழந்தைகள் YESSARNAL QURAN ஓதி முடித்து திருக் குர் ஆன் ஓத ஆரம்பித்ததால் "பிஸ்மில்லாஹ்" நிகழ்ச்சியும் வைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.




ஜசாகுமுல்லாஹ்
பதிலளிநீக்கு