கத்மே நுபுவ்வத்தைப் பற்றிய சத்திய ஞானம்

ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 
   நுபுவ்வத் என்பதால் என் கருத்து நான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக நின்று நுபுவ்வத்திற்கான வாதம் செய்கிறேன் என்பதோ அல்லது புதிய ஒரு ஷரீஅத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதோ அல்ல. நஊதுபில்லாஹ். நுபுவ்வத் என்றால் இறைவனுடன் அதிகமான அலவில் உரையாடுவதாகும். அது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதால் கிடைக்கின்றது.
எனவே இறைவனுடன் உரையாடும் கொள்கையை நீங்களும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். எனவே இது வெறும் சொல் அளவிலான தர்க்கம்தான். அதாவது நீங்கள் எதனை இறைவனுடன் உரையாடுதல் என்று பெயர் வைத்திருக்கிறீர்களோ அதுவே அதிக அளவில் கிடைக்கும்போது அதற்கு இறைக்கட்டளைக்கு ஏற்ப நான் நுபுவ்வத் என பெயர் வைக்கின்றேன்
(ததிம்மா ஹகீகதுல் வஹீ பக்கம் 68)

     ”ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளைவிட்டும் தனிப்பட்டு நுபுவ்வத்திற்கான வாதம் புரிபவர்கள் மீது சாபம்தான். ஆனால்  (எனது) இந்த நுபுவ்வத் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்துதான். எந்தவொரு புதிய நுபுவ்வத்தும் அல்ல. மேலும் இ(ந்)த(நுபுவ்வத்தி)ன் நோக்கமும், இஸ்லாத்தின் உண்மையை உலகத்தின் மீது வெளிப்படுத்துவதும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மையை வெளிப்படுத்துவதுமே ஆகும்”
(சஷ்மயே மஃரிஃபத் பக்கம் 325)

     ”இக்காலத்தில் நபி என்ற சொல்லினால் இறைவனின்  கருத்து, ஒருவர் முழுமையான முறையில் இறைவனுடன் உரையாடும் சிறப்பைப் பெறுகிரார் என்பதும் அவர் மார்க்கத்தைப் புதுப்பிப்பதற்காக இறைவனால் நியமிக்கப்படுகிறார் என்பதாகும். அவர் இன்னொரு ஷரீஅத்தைக் கொண்டு வருகிறார் என்று பொருள் அல்ல. ஏனெனில் ஷரீஅத் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முடிந்து விட்டது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு உம்மத்தீ என்று சொல்லாதவரை எவர் மீதும் நபி என்ற சொல்லை பொருத்துவது ஆகுமானதல்ல- அதன் பொருள், அவர் ஒவ்வொரு அருளையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதனால் பெற்றாரேயொழிய நேரடியாக பெறவில்லை என்பதாகும்.
                              (தஜல்லியாதே இலாஹிய்யா பக்கம் 9)

     எனக்கு இந்த எல்லா சிற்ப்புகளும் ஒரு நபியை பின்பற்றியதால் கிடைத்திருக்கிறது. அம்மாநபியின் உயர் பதவிகளையும், அந்தஸ்துகளையும் உலகம் அறியாது. அவர்தான் செய்யதுனா ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்).
        (சஷ்மயே மஸீஹி பக்கம் 24)

     இறுதியாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு உம்மத்தீ ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றியதினால் அவர் வஹீ, இல்ஹாம், நுபுவ்வத்தின் அந்தஸ்தை பெறுகிறார் என்றால், நபி என்ற பெயரால் கண்ணியப்படுத்தப் படுகிறார் என்றால் அதனால் நுபுவ்வத்தின் முத்திரை உடைந்துவிடாது. ஏனெனில் அவர் உம்மத்தீ (உம்மத்தை சேர்ந்தவர்) ஆவார். அவருக்கென்று தனிப்பட்ட எந்த தகுதியுமில்லை. அவருடைய சிறப்பு, பின்பற்றப்பட்ட (ஹஸ்ரத் நபி (ஸல்)) அவர்களின் சிறப்பாகும். மேலும் அவர் நபி என்று மட்டும் அழைக்கப்பட மாட்டார் நபி என்றும் உம்மத்தி என்றும் அழைக்கப்படுவார். ஆனால் உம்மத்தி அல்லாத ஒரு நபி மீண்டும் வருவது கத்மே நுபுவ்வத்திற்கு மாறுபட்டதாகும்.
    (சஷ்மயே மஸீஹி பக்கம் 68)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.