ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி

ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது. அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில் கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள். நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும், உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது துஆ செய்தாலும், கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை ஏற்பட்டாலும், காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன். எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும்.

பாருங்கள்! நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில் இணைகின்றனர். வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது. வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர். இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா? உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள்.

நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும் நீங்களும் செய்து பாருங்கள். எதையும் விட்டு வைக்காதீர்கள்....... பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள்.இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான். எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்க முடியும்? இறைவா நீ இந்த சமுதாயத்தின் மீது கருணை கட்டுவாயாக! ஆமீன்..."
 (அர்பஈன்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.