முஸ்லிம்களின் ஒற்றுமையும், ஒரு தலைமையும்


முஸ்லிம்கலாஹிய நம்முள் பெரும்பாலோர் பிறப்பால் முஸ்லிம்கலாக இருக்கிறோம்.நம்முள் சிலர் இஸ்லாம் கூறும் சமூக நிதி,சமத்துவம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மாற்று மார்க்கதிளிருந்து முஸ்லிம்களாக மாரியுள்ளோம்.இன்னும் சிலர் இஸ்லாத்தின் உண்மையையும் அதன் அழகையும் அறிந்து இஸ்லாத்தை தளுவியுள்ளோம்.எப்படி இருப்பினும்,நாம் அனைவரும் அல்லாஹ்வின் மீதும் ஹழ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மீதும் ஈமான் கொண்டுள்ளோம்.மேலும் திருக்குர்ஆனை நமது வேதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.இருந்த போதிலும் இன்றைய காலத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நம் அனைவரையும் ஒன்றினைபதற்கு பதிலாக பல்வேறு பிருவுகலாகவும்,அமைப்புகளாகவும்,இயக்கங்களாகவும் மேலும் மேலும் பிரிந்து சென்று கொண்டே இருக்கின்றன.



முஸ்லிம் அமைப்புகளும் சில, சமுதாயத்திலிருந்து ஷிர்க்கை அகற்றுவதையும்,சில அமைப்புகள் வரதட்ச்சனை,வட்டி போன்ற சமுதாய அவலங்களை களைவதையும்,இன்னும் சில அமைப்புகள் முஸ்லிம்களுக்கு அரசியல் முன்னேற்றம் தந்து இஸ்லாமிய ஆட்ச்சியை நிறுவுவதையும் தமது குறிக்கோளாக கொண்டு செயல் படுகின்றன.இவற்றுள் எந்த அமைப்பும் இஸ்லாம் கூறும் நல்லோளுக்கத்தையோ தூய ஆன்மீக மாற்றத்தயோ சமுதாயத்தில் ஏற்படுத்துவதை தமது குறிக்கோளாக கூறவில்லை.தமிலஹத்தின் எல்லையை தாண்டாத இந்த இயக்கங்களில் எதுவுமே முழு உலகிலும் இஸ்லாத்தை பரப்புவதையும்,முழு உலக மக்களை இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒரே தலைமயில் ஒன்று சேர்ப்பதையும் தமது குறிக்கோளாக கொண்டு செயல்படவில்லை.தம்மளவில் பிரிவினைக்கு ஆளாகி கொண்டிருக்கும் இந்த இயக்கங்களுக்கு அதற்கான தகுதி இல்லை.

தமிழகத்தில் மட்டுமல்ல,முழு உலகிலும் இஸ்லாமிய சமுதாயம் இவ்வாறுதான் தலைமை இல்லாததால் சிதைந்து கொண்டிருக்கிறது.இதனைப் பார்க்கும்போது முழு உலக முஸ்லிம்களின் ஒற்றுமையும் ஒரு தலைமையும் ஏற்பட சாத்தியமில்லை என்றே என்ன தொன்றுகிறது.மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளும் இயக்கங்களும் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த தகுதி அற்றவை என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆனால் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் பெயரளவில் மாறி குழப்பத்தில் தட்டளியும் போது முஸ்லிம்களின் எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஒரு தலைமைக்குமான எர்ப்பட்டினை அல்லாஹ்வே செய்வான் என்ற நற்ச்செய்தியை ஒரு முறையல்ல,பல முறை கூறியுள்ளார்கள்.

ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்

ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு மரியம் என்ற பெயரில் ஒரு இமாம் முஸ்லிம்களிடமிருந்தே தோன்றி முஸ்லிம்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 2 )என்றும்,அவர் இமாம் மஹ்தி எனவும் வேற்றுமைகளை நீதியுடன் கலைபவர் எனவும் அறியப்படுவார்.(முஸ்லிம் அஹ்மத் பின் ஹம்பல் பாகம் 2 பக்கம் 411 ) என்றும்,அந்த இமாம் 1240 வருடங்கள் கழித்து தோன்றுவார்.(அன்னஜ்முசாகிப் பாகம் 2 பக்கம் 209) என்றும்,அவரை சென்றடைவதில் எந்த தடை ஏற்ப்பட்டாலும் பனி மலைகளில் தவழ்ந்து செல்ல நேரிட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.(இப்னு மாஜா,கிதாபுல் பிதன் பாகம் 2,பக்கம் 1367 ) எண்டும் கூறியுள்ளார்கள்.

மேலும் அந்த இமாம் தோண்டும் காலத்தில் முஸ்லிம்கள் 73 பிரிவுகளாக பிரிந்து கிடப்பர்; அவற்றுள் அந்த இமாம் ஏற்படுத்தும் ஒரு ஜாமத்தை தவிர ஏனைய 72 பிரிவுகளும் நரகத்திற்கு உரியவை; அந்த இமாமின் ஜமாஅத் தம்மை போன்றும் தமது சஹாபாக்களை போன்றும் ஒரு தலைமையை பின்பற்றும்.(திர்மிதி,மிஷ்காத்)என்றும் கூறியுள்ளார்கள்.

இமாம் மஹ்தியின் வருகை நிறைவேறி விட்டது

ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பின் படியே இக்காலத்தில் இமாம் மஹ்தியாக ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள்.அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க 1889 -ம் ஆண்டு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை தோற்றுவித்தார்கள்.ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மீது அளப்பெரும் பற்று கொண்ட அவர்கள் தமது வருகையின் நோக்கமாக கூறுகின்றார்கள்:

"இறைவனுடைய ஏகத்துவத்தையும் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்துவத்த்யும் உலகில் நிலை நாட்டுவதுதான் என் வருகையின் முக்கியமான நோக்கமாகும்.நான் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஊழியனாக இருக்கிறேன்.அவர்களுடைய நபித்துவத்தின் ஒளியிளிருந்துதான் எனக்கும் ஒழி கிடைக்குதே தவிர எனக்கு சொந்தமாக எதுவுமே இல்லை.(மல்பூசாத் தெகுதி 3 பக்கம் 287 )

வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் ஆகவும், உள்ளும் புறமும் உள்ள வேற்றுமைகளை அகற்றக்கூடிய நீதி தீர்ப்பவராகவும் நானே நியமிக்கப்பட்டிருப்பதாக இறைவனின் தூய வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டயுக்கிறது.(நூல்: அர்பயீன்)

நான் சுயமாக வாதிக்கிறேன் என்றால் நீங்கள் என்னை பொய்யன் என்று கருதுங்கள்; அன்றி,இறைவனுடைய தூய நபி (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்புகளும் இறைவனுடைய அடையாளங்களும் எனக்கு சாட்சி கூருஹின்றன என்றால்,நீங்களும் என்னை மறுப்பதன் மூலம், உங்களை நீங்களே அணியாயக்காரர்கலாக்கி விடாதீர்கள்.நாங்கள் முஸ்லிம்கள்,எங்களுக்கு இனி ஒரு மசீஹுடைய உதவியும் தேவை இல்லை என்று கூறாதிருங்கள்.நான் ஆணையிட்டு கூருஹிறேன்,எவர் என்னை ஏற்று கொல்ஹிராரோ அவர் 1300 வருடங்களுக்கு முன் என்னை பற்றி முன்னறிவிப்புகள் தந்தவரையே ஏற்று கொல்ஹிறார்.எவர் என்னை நிராஹரிப்பரோ அவர் அவரையே நிராஹரிக்கின்றனர்.(அய்யாமஸ்ஸுல்ஹ் பக்கம் 93 )

நுபுவ்வத் வழியில் கிலாபத் பிற்காலத்தில் ஏற்ப்படும் (முஸ்னத் அஹ்மத் பாகம் 5 )

என்ற நபி மொழிக்கு ஏற்ப 1908 -ல் இமாம் மஹ்தி ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் மறைவிற்கு பிறகு,அவர்களின் கலீபாக்களின் தலைமையில் இந்த ஜமாஅத் இயங்கி வருகிறது.இந்த ஜாமத்தின் தற்போதைய தலைவர் ஐந்தாவது கலீபாதுள் மஸீஹ் ஹழ்ரத் மிர்சா மஸ்ரூர் அஹ்மத் அவர்கள் ஆவார்கள்.கடந்த 120 ஆண்டுகளாக ஒரு தலைமையின் கீழ் கட்டுக்கோப்புடன் முழு உலகிலும் பரவி வரும் ஒரே முஸ்லிம் அமைப்பு அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மட்டுமே ஆகும்.

முழு உலகிலிருந்தும் முஸ்லிம்களின் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க ஹழ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனையும்,அல்லாஹ்வின் ரசூலாகிய ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறை,சொல் ஆகியவற்றையும் அப்படியே பின்பற்றுவதுதான் உண்மை இஸ்லாம் ஆகும்.இந்த உண்மை இஸ்லாத்தையே அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பின்பற்றி அதனை பரப்பி வருகின்றது.

இந்த ஜாமத்தின் முழு உலக இஸ்லாமிய பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்து மாற்று மார்கத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் இந்த ஜாமத்தில் இனைந்து வருகின்றனர்.

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் பணிகள்

இறை அருளால் தற்போது சுமார் 20 கோடி உறுப்பினர்களுடன் 195 நாடுகளில் பரவி விட்ட இந்த ஜமாஅத் ஒரு தலைமையின் கீழ் நாடு,இன,மொழி,நிற எல்லைகளை கடந்து ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடியின் கீழ் முழு உலகிலிருந்தும் மக்களை ஒன்று சேர்க்கும் பணியில் இறை அருளால் தன்னை அர்ப்பணித்துள்ளது.

ஹழ்ரத் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி உலகம் தழுவிய பைத்துல் மால் அமைப்பு அஹ்மதிய்யா முல்சிம் ஜாமத்தில் மட்டுமே உள்ளது.முழு உலகிலும் 15877 பிரமாண்டமான பள்ளிவாயில்களையும்,2011 தப்லீக் மையங்களையும் இந்த ஜமாஅத் உருவாக்கியுள்ளது.உலகத்தின் புகழ்பெற்ற 69 மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா (MTA) என்ற செயற்கைக்கோள் ஒளிபரப்பின் மூலம் முழு உலகிலும் 24 மணி நேரமும்,ஆப்ரிக்காவில் 3 சக்தி வாய்ந்த வானொலி நிலையங்கள் 24 மணி நேரமும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து வருகின்றது.அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள Humanity First-மனிதம் முதலில் என்ற தொண்டு நிறுவனம் ஐ.நா.சபை அங்கீகாரத்துடன் 30 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றது.இது தவிர,41 மருத்துவமனைகள்,510 கல்வி நிறுவனங்கள்,13 மதரசாக்கள் ஆகியவற்றை இந்த ஜமாஅத் நிறுவியுள்ளது.இவை அஹ்மதிய்யா ஜாமத்தின் சேவைகளுள் சிலவாகும்.

அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் முன்னரிவித்தப்படி தோன்றிய இமாம் மஹ்தியைக் கண்டுணர்ந்து அவரது ஜாமத்தில் இணைந்து இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்கும்,முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்கும் பாடுபட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும்.இந்த ஜமாஅத் அல்லாஹ்வின் பார்வையில் உண்மையானது எனில்,இதனை நீங்கள் புறக்கணித்து விட்டால் மறுமையில் உங்களின் நிலை என்ன?அல்லா நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!ஆமீன்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.