நாங்கள் யார்?
காதியானிகள் அஹ்மதிகள் என அழைக்கப்படும் நாங்கள் முஸ்லிம்களே எங்களின் கலிமா லா இல்லஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதாகும். நாங்கள் ஈமானின் ஆறு விஷயங்களை உளப்பூர்வமாக நம்புகிறோம். நாங்கள் ஐந்து நேர தொழுகை, புனித ரமலான் மாதத்தில் நோன்பு, சக்காத், புனித மக்காவுக்கு ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றுகிறோம். எங்களின் கிப்லா மக்காவில் உள்ள புனித காபதுல்லாஹ்வே ஆகும். நங்கள் கூறும் பாங்கு எவ்வித மாற்றமும் இல்லாததாகும். திருக்குர்ஆன், சுன்னத், ஹதீஸ் ஆகியவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். திருக்குர்ஆன் மட்டும் போதும் என்றுக் கூறி நாங்கள் ஹதீஸ்களை மறுப்பவர்கள் அல்ல. அதுபோல் ஹதீஸ்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருக்குரானை புறக்கநிப்பவர்களும் அல்லர்.
திருக்குர்ஆன், சுன்னத், ஹதீஸ் ஆகியவற்றை நாங்கள் மார்க்கத்தின் அடிப்படைகளாக நாங்கள் ஏற்றிருக்கின்றோம். ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆரம்ப கால முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்பட்ட சுன்னத்களை நாங்கள் கடைப்பிடிக்கின்றோம். அதுமட்டுமல்ல ஹழ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை எங்களின் ஒரே வழிகாட்டியாகக் கொண்டு அவர்களின் உம்மத்தாக எங்களைக் கூறிக்கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அந்த மேன்மைமிகு நபி மீது சலாமும் சலவாத்தும் கூறுகின்றோம்.
இவ்வாறிருக்க எங்களை காஃபிர்கள் என்று கூறுவதும் அண்மைக் காலத்தில் தோன்றிய சில அவசர கோஷ்டிகளுடன் எங்களை இணைத்துப் பேசுவதும் முழுக்க முழுக்க தவறும் அநீதியும் ஆகும். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றவர்கள் பொய்யர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும் என்ற திருக்குரானின் எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல எங்களைக் காஃபிர்கள் என்றுக் கூறுபவர்கள் ஒரு முஸ்லிமை காஃபிர் என்று கூறுபவர் காஃபிராகிவிடுகின்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பள்ளி வாசல் அல்லாஹ்வின் வீடுகளாகும். அவை தனிப்பட்ட எவருடைய சொத்துக்கள் அல்ல. அவற்றில் தொழுவதற்காக வருகின்றவர்களை தடுக்கவோ இவர்கள்தான் வர வேண்டும் இவர்கள் வரக்கூடாது என வரையறுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அப்படி தடுப்பவர்களை அநியாயக்காரர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
அது மட்டுமல்ல அவர்களுக்கு அதிரடி தண்டனை வழங்கப்படும் என்றும் அது எச்சரிக்கை செய்கிறது. இப்படி மாற்று கருத்துடையவர்களை காஃபிர் என்றுக் கூறி அவர்களை பள்ளிவாசலுக்கு வரவிடாமல் தடுத்ததன் விளைவாகவே முஸ்லிம்களிடையே பல பிரிவுகள் தோன்றின. தனித்தனி
பள்ளிவாசல்களும் ஏற்ப்படுத்தப்பட்டன.
ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் போதிக்க வேண்டிய ஆலிம்கள் வெறுப்பையும் வேறுபாட்டையும் வளர்க்கின்றனர். கருத்து வேறுபாட்டை கலந்துரையாடி களைவதற்கு பகரமாக அவதூறுகளையும் பொய்களையும் கூறி பகைமையையும் வேறுப்புனர்வையும் ஏற்படுத்துகின்றனர். ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது எதிரிகளுக்காக கூட துஆ செய்தார்கள். ஆனால் இவர்களோ நம்மவர்களையே பழிக்கின்றார்கள்.
ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் போதிக்க வேண்டிய ஆலிம்கள் வெறுப்பையும் வேறுபாட்டையும் வளர்க்கின்றனர். கருத்து வேறுபாட்டை கலந்துரையாடி களைவதற்கு பகரமாக அவதூறுகளையும் பொய்களையும் கூறி பகைமையையும் வேறுப்புனர்வையும் ஏற்படுத்துகின்றனர். ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது எதிரிகளுக்காக கூட துஆ செய்தார்கள். ஆனால் இவர்களோ நம்மவர்களையே பழிக்கின்றார்கள்.
இக்கால ஆலிம்கள் மிக கெட்டவர்களாகவும் குழப்பவாதிகளாகவும் இருப்பார்கள் என ஒரு ஹதீஸ் நம்மை எச்சரித்துள்ளது. எனவே முஸ்லிம்கள் தமது இன்றைய நிலையினை எண்ணிப்பார்க்க வேண்டும். எடுப்பார் கை பிள்ளைகளாக இனியும் அவர்கள் செயல்படக் கூடாது. வேகத்திற்கு பகரமாக அவர்களிடம் விவேகம் பிறக்க வேண்டும்.
ஆத்திரத்திற்கு பகரமாக அறிவிற்கு அவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். உண்மை எது பொய் எது என்பதை அவர்கள் சுயமாக தெரிந்துக் கொள்ள வேண்டும். அஹ்மதிய்யா ஜமாஅத் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல. மாறாக, அது இஸ்லாத்தின் மறு மலர்ச்சிக்க்காகவும் முஸ்லிம்களின் ஆன்மீக விழிப்புனர்வுக்க்காகவும் எழுச்சிக்க்காகவும் பாடு பட்டு வரும் ஓர் உலகளாவிய அமைப்பாகும். அது மட்டுமல்ல, ஒரே தலைமையின் கீழ் உலகெங்கும் இயங்கி வரும் ஒரே ஜமாஅத்தும் அதுவே ஆகும்.
இந்த ஜமாஅத் அரசியல், வன்முறை, தீவிரவாதம் இவற்றில் நம்பிக்கை வைக்கவில்லை. மாறாக இது முழுக்க முழுக்க இறைவனையே சார்ந்து நிற்கின்றது. இந்த ஜமாஅத் ஒரு சாதாரண அமைப்பல்ல. அரசியல் தலைவறாலோ, ஆலிம் ஒருவராலோ ஆரம்பிக்கப் பட்டதுமல்ல. சிலர் கூறுவதுப் போன்று, ஆங்கிலையர்கலாலோ யூத, சியோனிய சக்திகளாலோ உருவாக்கப்படதுமல்ல. மாறாக, இந்த ஜமாஅத் இறைவனின் திட்டத்திற்கேற்ப தோற்றுவிக்கப்பட்டதாகும்.
இமாம் மஹ்தி தோன்றுவார் என ஹழ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவர் தோன்றும்போது ஏற்ப்படும் அடையாளங்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இமாம் மஹ்தி தொன்றினால் அவரை ஏற்று அவரிடம் "பைஅத்" செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.
இந்த முன்னரிவிப்பிற்க்கேர்ப்ப, இமாம் மஹ்தியாக ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தோன்றினார்கள்.(1835-1908) இவர்களின் காலத்தில் முன்னறிவிக்கப்பட்ட அடையாளங்கள் ஏற்ப்பட்டன. அவை அவருடைய உண்மைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையின்படி இமாம் மஹ்தியை ஏற்று அவர்களின் கைகளில் "பைஅத்" செய்தவர்களே அஹ்மதிகள்! எனவே இவர்கள் எவ்வாறு காஃபிர்களாகவும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களும் ஆவார்கள்? ஹழ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், தங்களை நபி என்று கூறியிருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் தம்மை ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை விட உயர்ந்த நபி என்றோ புதிய மார்க்கத்தை கொண்டு வந்த நபி என்றோ கூறவில்லை. மாறாக ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியதாலையே தமக்கு நபிப்பதவி கிடைத்ததென்றும் தாம் உம்மத்தி நபி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் மதிப்பு இம்மியளவு கூட குறையவில்லை.
ஆனால் ஆலிம்கள் இந்த நபி என்ற வாதத்தை பூதாகரமாக்கி அஹ்மதிகள் மீது மக்கள் தப்பெண்ணம் கொள்ள செய்துள்ளனர். இறுதி நபிக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்றும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டவர் என்றும் இந்த ஆலிம்கள் மார்க்க தீர்ப்பு வழங்குகின்றனர். ஆனால் இவற்றிற்கு திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை.
இறுதி நபிக் கொள்கையை இவ்வளவு தூரம் வலியுறுத்தும் இந்த ஆலிம்கள் ஈஸா நபி வருவார் என்று கூறுகின்றார்கள். மார்க்கம் முழுமை பெற்றிருக்கும்போது ஈஸா நபி (அலை) வரவேண்டிய அவசியமென்ன? ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை பின்பற்றிய ஒருவர் நபியாக வருவதை சரி காணாத இவர்கள் ஹழ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை பின்பற்றாது வேறு சமுதாயத்திற்க்காக வந்த ஈஸா நபி இந்த இஸ்லாமிய சமுதாயத்தை வழி நடத்த வருவார் என்கின்றனர். அகில உலகிருக்கும் அருட்க்கொடையாக வந்த அருமை ரசூல் (ஸல்) அவர்களே இறையடி சேர்ந்து விட்ட போது ஈஸா நபி (அலை) உயிருடன் இருக்கிறார் என்கின்றனர்.
இப்படி குழப்பத்தின் மொத்த உருவமாக, அடிப்படையற்ற ஆதாரமற்ற கூற்றுக்களை இந்த ஆலிம்கள் கூறி வருகின்றனர். எனவே முஸ்லிம்கள் இந்த ஆலிம்களின் அபத்தமானக் கருத்துக்களை மட்டும் கேட்டுக்கொண்டிருக்காமல் உண்மைகளை ஆராய்ந்தறிய முயல வேண்டும். இறைவனின் பெயரால் இட்டுக்கட்டி கூறுபவர்கள் வாழ்வதுமில்லை வளர்வதுமில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
பொய்யாக நபி என்று வாதித்தவர்கள் எக்காலத்திலும் வாழ்ந்ததுமில்லை வளர்ந்ததுமில்லை. ஆனால் ஹழ்ரத் மிர்சா குலாம் (அலை) அவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.. அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத் வளர்ந்திருக்கிறது. வளர்ச்சிஎன்றால் சாதாரண வளர்ச்சியல்ல. உலகின் நூற்றி தொண்ணூற்றி நான்கு நாடுகளில் இந்த ஜமாஅத் கிளை பரப்பிருக்கிறது. இலட்ச்சக்கனக்கான மக்களை முஸ்லிம்கலாக்கியுள்ளது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களை கட்டியுள்ளது. அறுபதிற்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா MTA என்ற பெயரில் லண்டனிலிர்ந்து செயற்கைக்கோள் ஒளிபரப்பு மூலமாக இருபத்தி நான்கு மணி நேரமும் இஸ்லாமிய பிரச்சாரத்தை உலகெங்கும் நடத்தி வருகின்றது.
அதுமட்டுமல்ல, ஒரே தலைமையின் கீழ் அதாவது கலீஃபாவின் கீழ் இந்த ஜமாஅத் உலகெங்கும் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இலட்ச்சக்கணக்கானோர் இந்த ஜாமத்தில் இணைந்துள்ளனர். முழுக்க முழுக்க திருக்குரானின் போதனைகளையும் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் பரப்பி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுவதே இந்த ஜமாஅத்தின் குறிக்கோளும் இலட்ச்சியமுமாகும். இதை தவிர எந்த அரசியல் நோக்கமும் இந்த ஜமாஅத்திற்கு இல்லை.
எனவே இந்த ஜாமத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மார்க்க உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None