உடன்குடி எனும் ஊரில் 
திரு நபி தின விழா

உடன்குடி எனும் ஊரில் அல்லாஹ்வின் அருளினால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்திற்கு ஒரு பொதுக் கூட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தது.கடந்த 5 ஆம் தேதி சனிக் கிழமை அன்று இரவு சுமார் 7:30 மணிக்கு இக்கூட்டம் சீரும் சிறப்புமாக துவங்கியது.. அல்ஹம்துலில்லாஹ்.. இக்கூட்டத்தில் மேலப்பாளையத்தை சார்ந்த ஜனாப் முஅல்லிம் ஆ.பி.அ. நாசிர் அஹ்மத் சாஹிப் அவர்களும், சங்கரன் கோவில் ஜமாஅத்தை சார்ந்த  ஜனாப் மௌலவி அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களும், மேலப்பாளையம் ஜமாத்தை சார்ந்த ஜனாப் அ.நாசிர் சாஹிப் துணை தலைவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் அவர்களும், இதே போன்று கர்நாடகா, தமிழ் நாடு, கேரளா மற்றும் அந்தமான் தீவு, லட்ச்சத் தீவுகளுக்கு மொபைல் மௌலவியாக திகழும் கேரளா மாநிலத்தை சார்ந்த மௌலவி  ஜனாப் மஹ்மூத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அதே போன்று தமிழ் நாடு தென் மண்டலத்தின் அமீராகவும், மேலப்பாளையம் ஜமாஅத்தின் அமீராகவும் திகழும் ஜனாப் ஆ.பி.யு.அப்துல் காதிர் ஸாஹிப் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக உடன்குடி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஜனாப் சலீமுல்லாஹ் சாஹிப் அவர்கள் நன்றியுரை ஆற்றியவாறு இறுதியில் து ஆவுடன் இக்கூட்டம் முடிந்தது..
விபரம்:
இக்கூட்டத்தில் ஜனாப் மேலப்பாளையத்தை சார்ந்த ஜனாப் முஅல்லிம் ஆ.பி.அ. நாசிர் அஹ்மத் சாஹிப் அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியின் ஒரு சில பகுதியினை எடுத்துரைத்து இன்றைய ஆலிம்கள் இந்த முன்மாதிரியினை கைவிட்டுவிட்டு அபூஜஹிளின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள் என்பதி ஆதார பூர்வமாக விளக்கினார்கள்.
இதற்கு அடுத்ததாக சங்கரன் கோவில் ஜமாஅத்தை சார்ந்த  ஜனாப் மௌலவி அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் "சமூஹத்தின் அமைதிக்காக நபி (ஸல்) அவர்கள் காட்டித்  தந்த வழிகள்" என்ற தலைப்பில் கூறியவாறு, எப்போது வரை உலகம் ஏகத்துவத்தின் பக்கம் திரும்பாதோ, நிர்பந்தத்தை மற்றும் அநீதியை  கைவிடாதோ, அதே போன்று மன்னித்தல் எனும் குணத்தை எதுவரை தன்மேல் அமைத்துக் கொள்வதில்லையோ அது வரை உலகத்தில் அமைதி எனும் பூங்கா உருவாகாது என்று கூறி அத்துடன் எம்பெருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இது சம்பந்தப்பட்ட முன்மாதிரிகளையும் கூறி தமது சொற்பொலிவினை  முடித்தார்கள்.
இதற்கு பிறகு மேலப்பாளையம் ஜமாத்தை சார்ந்த ஜனாப் அ.நாசிர் சாஹிப் துணை தலைவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் அவர்கள் "இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை" என்ற தலைப்பில் மாற்று மதத்தவர்கள் ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் மீது இவ்விஷயத்தில் வைக்கும் ஆட்சேபனைகளுக்கு ஹழ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தே ஒரு சில சம்பவங்களை  எடுத்து வைத்து ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தினை வாளால் பரப்பவில்லை என்பதை மிக அழகாக நிரூபித்துக் காட்டினார்கள்.
பிறகு கர்நாடகா, தமிழ் நாடு, கேரளா மற்றும் அந்தமான் தீவு, லட்ச்சத் தீவுகளுக்கு மொபைல் மௌலவியாக திகழும் கேரளா மாநிலத்தை சார்ந்த மௌலவி  ஜனாப் மஹ்மூத் அஹ்மத் ஸாஹிப் அவர்கள் "ஹழ்ரத் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவாறு "தௌஹீத்" என்ற அரபி வார்த்தைக்கு அகராதியின் அடிப்படையில் விளக்கியவாறு அதனின் ஆழ்ந்த கருத்தை விளக்கியவாறு இதனின் ஆழ்ந்த கருத்தை எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் விளங்கி அதன்படி செய்லபட்டதனாலையே அவர்கள் "அப்த்" என்று அழைக்கப் பட்டார்கள்..
இதன் பிறகு தமிழ் நாடு தென் மண்டலத்தின் அமீராகவும், மேலப்பாளையம் ஜமாஅத்தின் அமீராகவும் திகழும் ஜனாப் ஆ.பி.யு.அப்துல் காதிர் ஸாஹிப் அவர்கள் ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிக ஆசாகிய முன் மாதிரியின் ஒரு சில சம்பவங்களை  முன் வைத்து இன்றைய பெயர் தாங்கிய ஆலிம்கள் இந்த முன்மாதிரியை அறவே பின்பற்றாமல் தமது மார்க்கத்தை பரப்பி இஸ்லாமிய போதனைக்கு எதிராகாவும் , குறிப்பாக நாங்கள் முஸ்லிம்கள் என்று கூறி வரும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை சார்ந்த அஹ்மதி முஸ்லிம்களை கொலை செய்யவேண்டும் என்று மக்கிளிடையே பரப்பி வருகின்றனர் இதற்கு உதாரணமாக உடன்குடி ஊரினை சார்ந்த ஷம்சுத்தீன் காசிமி அவரின் இஸ்லாத்திற்கும், நபி (ஸல்) அவர்களின் போதனைக்கும் மாற்றமான ஒரு சில விஷயங்களை கூறி தமது உரையை இனிதே முடித்தார்கள்.
இறுதியில் உடன்குடி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஜனாப் சலீமுல்லாஹ் சாஹிப் அவர்கள் நன்றியுரை ஆற்றியவாறு இறுதியில் து ஆவுடன் இக்கூட்டம் முடிந்தது..

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.