மனிதனுக்கு அருளப்பற்ற அதாவது முழுமையான மனிதனுக்கு அருளப்பற்ற உயர் தகுதியுடைய அந்த ஒளி வானவர்களிலோ,வின்மீன்களிலோ, சந்திரனிலோ,சூரியனிலோ இருந்ததில்லை.மேலும் பூமியிலுள்ள கடல்,ஆறு இவைகளிலுமில்லை.மேலும் மாணிக்கம்,மரகதம்,நீலமணி,முத்து ஆகையவற்றுள்ளும் இருந்ததில்லை.அது மனிதனிடையே இருந்தது.அதாவது முழுமையான மனிதர்களில் அதன் முழுமை,முடிவு,உயர்வு ,மேன்மை எல்லாம் ஒருங்கே கொண்டவர் நம் தலைவரும்,நம் அன்பிற்குரியவரும் தூதர்களின் தலைவரும்,உயிரினங்களில் உயர்ந்தவருமாகிய ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே ஆவர்.
நாம் நேர்மையுடன் நோக்கும்போது நுபுவ்வத் தொடர்ச்சியில் (இறைத் தூதர் தொடரில்)மிக உயர் தகுதியுடைய,கண்ணியமிக்க நபியாகவும்,உயருள்ள நபியாகவும் இறைவனின் பேரன்பிற்குரிய நபியாகவும் ஒருவரையே காண்கிறோம்.அவர் நபிமார்களின் தலைவரும் தீர்க்கதரிசிகளில் மிகப்பெருமைகுரியவரும் அனுப்பப்பட்ட அனைவரின் கிரீடமுமாகிய ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களேயாவர்.
அராபிய பாலைவனத்தில் ஓர் அற்ப்புதம் நிகழ்ந்ததே அதாவது லட்ச்சக்கணக்கான இறந்தவர்கள் சில நாட்களில் உயர் பெற்றனர்.பல தலைமுறைகளாக கேட்டுப்போயிருந்தவர்கள் இறை பண்புகளை பெற்றனர்.குருடர்கள் கண்ணொளி பெற்றனர்.ஊமைகளின் நாவில் இறைஞானம் பெருக்கெடுத்தது.எக் கண்ணும் கண்டிராத,எக்காதும் கேட்டிராத அத்தகு புரட்ச்சி உலகில் மலர்ந்தது.அது என்ன என்று உணர்தீர்களா?
அது இறைவனில் தன்னை மாய்த்துக்கொண்ட ஒருவர் இருள் நிறைந்த இரவுகளில் செய்திட்ட துஆக்களின் பலன்களே! அவை (அந்த துஆக்கள்) உலகில் ஒரு பேரொளியை எழுப்பின.மேலும் அந்த கல்லாத ,இயலாத அம்மனிதரால் செய்ய முடியாதது என்ற காணப்பட்ட அர்ப்புதங்களை செய்து காட்டின.
அல்லாஹ்வே!அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும்,அவர்கள் இந்த (முஸ்லிம்) சமுதாயத்தின் பேரில் கொண்டிருந்த பரிவு,பற்று,கவலைக்கு ஏற்ப அருட்க்கொடையையும்,சாந்தியையும் வழங்குவாயாக.மேலும் உன் கருணையின் ஒளிகளை என்றென்றும் அவர்கள் மீது இறக்குவாயாக.மேலும் உன் கருணையின் ஒளிகளை என்றென்றும் அவர்கள் (ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்))மீது இறக்குவாயாக! ஆமீன்......
(ஹழ்ரத் அஹ்மத் (அலை) நூல்:ரூஹானி கஸாயின்)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None