டெய்லி டெலிகிராப் லண்டன் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.அச்செய்தியில் ,சில் நாட்டில் 12 ,500 ஆண்டகளுக்கு முந்தைய மனித காலடித்தடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,கூடவே 13 ,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உபகரணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இத்துடன் பழங்கால மனிதர்கள்,எப்பொழுதும் ,எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு வந்தார்கள் என்ற கோட்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அபாரிஜின் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் 14 ,௦௦௦ 000 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் வசித்தனர்,என்ற ஆராய்ச்சியும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.ஆஸ்திரேலிய பத்திரிகைகள்,ஆஸ்திறேளியர்தான் முதன் முதலில் அமேயக்கவில் வசித்தனர் என்ற தலைப்புடன் இச்செய்தியை வெளியிட்டனர்.
ஆஸ்திரேலிய ஆபரிஜின் இனத்தவர் குறைந்தது 40 ,000 வருடங்களாக அங்கு வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.மேலும் மனிதர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற பரிணாம நிலையை அடைந்ததுமே,(அதாவது 1 ,76 ,000 ஆண்டுகளுக்கு முன்னரே)அவர்கள் எப்படியோ ஆஸ்திரேலியாவை அடைந்து விட்டதாக,சமீபத்தில் தோல் பொருள் ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.ஆப்ரிக்கா,மத்திய ஆசிய,ஜாவா தீவுகள் ஆஸ்திரேலிய போன்ற பகுதிகளிலும் மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.(இது ஆப்ரிக்காவில் மனித இனம் தோன்றி,அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பரவியதாக சொல்லப்படும் பிரபலாமான நம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகும்.
எப்படிப் பார்த்தாலும் மனிதர்கள் ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களுக்கு வெகு காலம் முன்னரே,புவியின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள்,என்பதையே தொல்லியல் ஆராய்ச்சிகளும்,கண்டுபிடிப்புகளும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதம்தான் பூமியில் படைக்கப்பட்ட முதல் மனிதர் (ஆதியாகமம்; 1 ;26 ,2 ;8 ) என்ற பைபிள் வாக்கியங்களுக்கு இந்த கண்டுபிடிப்புகள் முரணாக இருக்கின்றன.பைபிளை நம்பக்கூடிய மக்களின் உள்ளங்களில் ஐயத்தை ஏற்ப்படுத்தி,இறை விளிப்பாட்டையும் அவர்களை மறுக்க வைத்து,அவர்களை கடைசியில் நாத்திகவாதிகளாகவும் கடவுளை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்று கூறும் அக்னாஸ்டிக் மக்களாகவும் மாற்றியுள்ள,விஞ்ஞானத்திற்கு எதிரான பைபிளின் கருத்துகளில் இதுவும் ஒன்று.
ஆனால் திருக்குர்ஆன் நமக்கு வேறு விதமாகக் கூறியிருக்கிறது.இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் வெளிப்படுவதற்கு முன்பே அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகரும் வாக்களிக்கப்பட்ட மசீஹும் ,இமாம் மஹ்தியுமாகிய ஹழ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள்,''நாங்கள் ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களுக்கு முன்னரே மனிதஇனம் இருந்ததாக நம்புகின்றோம்'என்று கூறியிருந்தார்கள்.
ஆங்கிலேய வானியல் அறிஞர்,பேராசிரியர் ரேய்கு,ஹழ்ரத் மஸீஹ் (அலை) அவர்களை 1908 ஆம் வருடம் மே 12 , 18 ஆகிய தேதிகளில் சந்தித்து சில கேள்விகளை கேட்டிருந்தார்.இந்த உரையாடல் மல்பூசாத் தொகுதி 10 , பக்கங்கள் 353 மற்றும் 426 ல் பதியப்பட்டுள்ளது.அவர் கேட்ட ஒரு கேள்வி, '' ஆதம் ,ஜூ ஹோன் ,ஸூஹோனில் பிறந்ததாகவும் அவர் அந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.அப்படியென்றால் அமெரிக்க,ஆஸ்திரேலிய போன்ற பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள்,அதே ஆதாமின் சந்ததிகளா?''என்பதாகும் இதற்க்கு ஹழ்ரத் மஸீஹ் (அலை)அவர்கள் பதில் அளிக்கையில்,''பூமி ஆதாமின் பிறப்புடன்,அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் ,படைக்கப்பட்டது என்றும் ,அதற்க்கு முன் எதுவும் இருந்ததில்லை எண்டுறம் இரியிவன் வெறுமனே பனி ஏதும் இன்றி இருந்தான் என்றும்,பைபிள் கூறுவதை நாங்கள் ஏற்ப்பதில்லை.மேலும் பூமியின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அதே ஆதாமின் சந்ததிகள்தான் ,என்றும் நாம் நம்புவதில்லை.இதற்க்கு மாறாக,இந்த ஆதம் முதல் மனிதரால் என்றே நாங்கள் நம்புகின்றோம்.மனித இனம் ஹழ்ரத் ஆதம் (அலை)அவர்களுக்கு முன்னரே பூமியில் வாழ்ந்திருந்தது.''நான் பூமியில் ஒரு கலீபாவை ஏற்ப்படுத்த போகின்றேன்.''என்ற திருமறையின் கருத்து இதனை சுட்டி காட்டுகின்றது.'கலீபா' என்றால் பின்தொடர்ந்து வருபவர் என்ற பொருள் இருப்பதால்,ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்து வந்தது தெளிவாகின்றது.எனவே அமெரிக்க,ஆஸ்ரேலியா போன்ற நாடுகளில் வாழக்கூடிய அனைவரும்,இந்த ஆதத்தின் சந்ததியினரா அல்லது இவர்களுக்கு முன் தோன்றிய வேறொரு ஆதத்தின் சந்ததியினரா என்று நம்மால் கூற முடியாது.
ஹழ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு நபி பட்டம் வழங்கப்பட்ட,இறைவெளிப்பாடு தொடங்கிய காலத்திற்கு (கிபி 610 ),4598 சூரிய ஆண்டுகளுக்கு முன் நம்முடைய ஆதம்(அலை) பிறந்தார்கள்,என்ற செய்தியும்,ஹழ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கஷ்ப் எனும் ஆன்மீக காட்ச்சியின் மூலம் வழங்கப்பட்டது என்பதும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாகும் எனவே இன்றிலிருந்து (2010 ) 5998 ஆண்டுகளுக்கு முன் ஹழ்ரத் ஆதம் (அலை) பிறந்தார்கள் என்பது புரிகின்றது.
மேலும் திருக்குர்ஆன் தெளிவு படுத்துவது என்னவென்றால்,ஆதம் (அலை) மட்டுமின்றி,ஹழ்ரத் ஈசா (அலை) உட்பட மனிதர்கள் அனைவருமே மன்னால் படைக்கப்பட்டவர்தான் என்பதாகும்.ஆதம் மட்டுமே மன்னால் படைக்கப்பட்டார் என்ற பைபிள் கொள்கைக்கு இது மாறுபட்டதாகும்.
''நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ஈசாவுடைய நிலை ஆதமின் நிலையை போன்றதாகும்.அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து ஆகுக என்று சொன்னதும்,அவர் ஆகிவிட்டார்''.(ஆலி இம்ரான்;60 )
இதனைப்போலவே,ஒட்டுமொத்த மனித இனத்தின் படைப்பைப் பற்றியும் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.''அவனுடைய அடையாளங்களில் ஒன்று,அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாக பூமியில் பரவி விடுவதாகும்''(அர்ரூம் ;21)
துவக்கத்தில் கூறப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளிளிருந்து தெரிய வருவது என்னவென்றால் மனிதன் தன்னுடைய ஆரம்ப நிலையிலேயே பூமியின் பல்வேறு பகுதிகளில் பரவிவிட்டான்.மனிதனின் பரிணாம வளர்ச்சி என்னும் மரம்,ஒரே வேரில் தோன்றி பின்னர் கிளைகளாக,துணைக் கிளைகளாக,பூமியின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது.மனிதனை படித்ததன் பின்னர்,அவனுக்கு முழுமையான தோற்றத்தை வழங்கி அவனுக்குத் தேவைப்படும் வழி காட்டுதலையும் இறைவன் வழங்கியுள்ளான்.(தாஹா ;51)மனிதன் பௌதீக ரீதியாக,அறிவு ரீதியாக,சமுதாய ரீதியாக,ஆத்மீக ரீதியாக இறை வழி காட்டுதலை பெற்று,உணர்ந்து,பின்பற்றக்கூடிய நிலையை அடைந்ததும்,மனித இனத்தின் ஒவ்வரு கிளைக்கும்,துணை கிளைக்கும் இறைவன் தன்னுடைய கலீபாக்கலாக ஆதம்களை அனுப்பியுள்ளான்.முழு மனித இனத்திற்கும் அனுப்பப்பட்டு உலகளாவிய தூது செய்தி வழங்கப்பட்ட ஒரே நபி ஹழ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) ஆவார்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.திருகுர்ஆனில் குறிப்பிடப்பட்ட ஆதம் என்ற சொல் ஆதமுடைய மக்களுக்கும்,மனிதர்களுக்கும் உவமையாகக் குருப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கடைசி ஆதாமிற்கு முன்னாள் கூட,மனித இனம் பல்வேறு பகுதிகளில் தோன்றி ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து,வளர்ச்சியையும்,அழிவையும் கண்டு அறியாமையையும்,வழிகாட்டுதலையும் கொண்டு வாழ்ந்துள்ளது என தெரிகிறது.
(சௌத்ரி கலித் சைபுல்லாஹ் கான்,சிட்னி,ஆஸ்திரேலியா,அல் ஹுத பத்திரிகை,மார்ச் 1977)

(www.alislam.org மொழியாக்கம் : இப்னு மைமூன்

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None