ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்களா!?

ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்களா!?


وَ اِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ جَاعِلٌ فِی الۡاَرۡضِ خَلِیۡفَۃً ؕ قَالُوۡۤا اَتَجۡعَلُ فِیۡہَا مَنۡ یُّفۡسِدُ فِیۡہَا وَ یَسۡفِکُ الدِّمَآءَ ۚ وَ نَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِکَ وَ نُقَدِّسُ لَکَ ؕ قَالَ اِنِّیۡۤ اَعۡلَمُ مَا لَا تَعۡلَمُوۡنَ

மேலும் உம் இறைவன் வானவர்களிடம், நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகிறேன் என்று கூறிய (அந்த நேரத்தை மனிதனே! நீ நினைத்துப் பார் அப்)போது, அதில் குழப்பம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவர்களையும் படைக்கப்போகிறாயா? நாங்கள் உன்னைப் புகழ்ந்து, உன் தூய்மையை(யும்) எடுத்துரைக்கிறோம். மேலும் உமது எல்லா மேன்மைகளையும் ஒப்புக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு அல்லாஹ்வாகிய) அவன், நீங்கள் அறியாததை நிச்சயமாக நான் அறிவேன் என்று கூறினான். (திருக்குர்ஆன் 2: 31))

இந்த வசனத்திலிருந்து ஹஸ்ரத் ஆதம் (அலை) இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்டார்கள் என்பதும் நிரூபணமாகின்றது. அவர்கள் மரணித்த பிறகு மனிதனுக்கு கிடைக்கவிருக்கும் அதே சொர்க்கத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள் என எண்ணிக் கொண்டிருப்பவர்கள் தவறில் இருக்கின்றார்கள். வியப்பு என்னவென்றால், நான் இவ்வுலகில் ஒரு கலீஃபாவை ஏற்படுத்தப் போகிறேன் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்கள் சொர்க்கத்தில் வைக்கப்பட்டார்கள் என சிலர் கூறுகின்றனர். இந்த சிக்கலை சிலர் சுயமாக, முதலில் இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்டு பிறகு அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என இவ்வாறு தீர்க்க முயன்றுள்ளார்கள். ஆனால் இவ்வசனம் இந்த கருத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்:

நான் இதே உலகில் ஒரு கலீபாவை நியமிக்க போகின்றேன். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் உலகில் கலீஃபா நியமிக்கப்படுவதற்கு ஏதேனும் நோக்கம் இருக்க வேண்டும். அப்படியிருக்க அவரை சொர்க்கத்திற்கு கொண்டு செல்வதால் அந்த நோக்கம் எவ்வாறு நிறைவேற முடியும்? அல்லாஹ்த ஆலா ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆதமை இவ்வுலகில் கலீஃபாவாக நியமித்து விட்டு பிறகு அவரை அந்த நோக்கம் நிறைவேற முடியாத சொர்க்கத்திற்கு கொண்டு செல்வது எவ்வாறு நடக்க முடியும்? ஆதாமை சொர்க்கத்திற்கு கொண்டு சென்ற பிறகு ஆதம் கலீஃபாவாக நியமிக்கப்பட்ட அந்த குறிக்கோளை உலகில் யார் நிறைவேற்றுவார்? திருக்குர்ஆனின் பிற வசனங்களில் இருந்தும் இந்த எண்ணம் ரத்து செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக திருக்குர்ஆன் கூறுகிறது:

சொர்க்கத்தில் எந்த வீண்பேச்சும் இருக்காது. ஒருவர் மற்றவருக்கு எதிரான பாவ குற்றச்சாட்டும் சுமத்தப்படாது. அதாவது எல்லா வகையான தவறுகளிலிருந்தும் தூய்மையாக இருப்பார்கள். (52: 24)

ஆனால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் வைக்கப்பட்டிருந்த சொர்க்கத்தில் ஷைத்தானும் நுழைந்தான். அவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறை விருப்பத்திற்கு எதிராக இருந்த ஒரு செயலை செய்வித்தான்.

அடுத்து சொர்க்கம் தொடர்பாக திருக்குர்ஆனில் வருகிறது:

அவற்றில் அவர்களுக்கு களைப்பும் ஏற்படாது. அவற்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். (15: 49)

ஆனால் ஆதம் (அலை) வைக்கப்பட்டிருந்த சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இதேபோல் மரணித்த பிறகு கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தை குறித்து கூறப்பட்டுள்ளது:

மேலும் நீங்கள் கேட்பதெல்லாம் அதில் உங்களுக்குக் கிடைக்கும். (41: 32)

ஆனால் ஆதம் (அலை) வைக்கப்பட்டிருந்த சொர்க்கத்தில் அவரின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டதால் அதாவது மரத்தின் அருகே சென்றதால் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

இதேபோல் மரணித்த பிறகு கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தைக் குறித்து கூறப்பட்டுள்ளது, அதில் நுழைபவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:

சுவர்க்கத்தில் நாங்கள் விரும்பும் இடங்களில் நாங்கள் இருந்து வருவோம் என்பார்கள். (39: 75)

ஆனால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் வைக்கப்பட்டிருந்த சொர்க்கத்தைக் குறித்து கூறப்பட்டுள்ளது:

இந்த மரத்தினை நெருங்காதீர்கள். (2: 36)

இவ்வாறு திருக்குர்ஆனில் மரணத்திற்கு பிறகு கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தின் வரைபடம் வரையப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் ஆதம் (அலை) வைக்கப்பட்டிருந்த சொர்க்கம் இந்த சொர்க்கத்தில் கூறப்பட்டுள்ள வரைபடத்தை விட்டும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. எனவே ஆதம் (அலை) வைக்கப்பட்டிருந்த சொர்க்கம் இதே உலகின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனென்றால் ஆதம் (அலை) இதே உலக மக்களுக்காகவே கலீஃபாவாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். எனவே மரணம் வரை இதிலேயே அவர்கள் இருந்தாக வேண்டியது அவசியமாக இருந்தது.

(தஃப்ஸீரே கபீர் பாகம் 1, திருக்குர்ஆன் 2: 31 வசனத்தின் விளக்கவுரை)

மொழியாக்கம்: முஅல்லிம் முஸ்ஸம்மில் சாஹிப்-தூத்துக்குடி

1 கருத்து:

  1. திருக்குர்ஆனின் ஆதாரத்தின் படி ஆதம் அலை அவர்கள் இவ்வுலகிலேயே படைக்கப்பட்டார்கள் என்பதை மிகத் தெளிவான சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.