ஃபேஷனை வழிபடுதல்‌ எனும்‌ தொற்றுநோயிலிருந்து தப்பித்துக்‌ கொள்ளுங்கள்‌

 

ஃபேஷனை வழிபடுதல்‌ எனும்‌ தொற்றுநோயிலிருந்து தப்பித்துக்‌ கொள்ளுங்கள்‌

ஹஸ்ரத் மிர்ஸா பஷீர் அஹ்மது சாஹிப் எம்.ஏ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

எனது தற்போதைய குறிப்புகளிலில் ஃபேஷனை வழிபடுவதன்‌ பக்கம்‌ இருக்கின்ற போக்கைக் குறித்து கொஞ்சம்‌ கூற விரும்புகின்றேன்‌. உண்மையில்‌ பர்தா அணியாமையும்‌, ஃபேஷன்‌ வழிபாடும்‌ இரட்டை சகோதரிகளை போன்ற உறவுகொண்டவை ஆகும்‌. ஏனெனில்‌ இவற்றில்‌ ஒவ்வொன்றும்; ஒன்று மற்றொன்றின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

பொதுவாக பெண்களை; பர்தா அணியாமை என்பது ஃபேஷன்‌ வழிபாட்டை நோக்கி தள்ளிவிடுகின்றது. மேலும்‌ மறுபுறம்‌ ஃபேஷன்‌ வழிபாட்டின்‌ கவனம்‌ சிறிது சிறிதாக பர்தா அணியாமையை நோக்கி இழுத்து வந்துவிடும்‌. எனவே நமது ஜமாஅத்தின்‌ பெண்கள்‌ மற்றும்‌ சிறுமிகளும்‌ இவ்விரு கேடுகளிலிருந்தும்‌ தப்பித்துக்‌ கொள்ள வேண்டும்‌.

அதாவது அவர்கள்‌ இஸ்லாமிய பர்தாவை பேண வேண்டும்‌. மேலும்‌ ஃபேஷன்‌ வழிபாடு என்ற தொற்றுநோயிலிருந்தும்‌ தப்பித்துக்‌ கொள்ள வேண்டும்‌. இல்லைலயனில்‌ அவர்கள்‌ ஒருபோதும்‌ உண்மையான அஹ்மதி மற்றும்‌ உண்மையான முஸ்லிமாக கருதப்படமாட்டார்கள்‌.

இஸ்லாம்‌ எளிய வாழ்வின்‌ பக்கம்‌ அழுத்தம்‌ கொடுத்துள்ளது. மேலும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது‌ (அலை) அவர்களும்‌ எளிய வாழ்க்கையின்‌ பக்கமே அழுத்தம்‌ கொடுத்துள்ளார்கள்‌. எனது காதுகளில்‌ ஹுஸுர்‌ (அலை) அவர்களின்‌ இந்தச்‌ சொற்கள்‌ எப்போதும்‌ எதிரொலிக்கின்றன. அதாவது “எனக்கு ஆடம்பரமின்றி வாழும்‌ எளிய மக்களே மிகவும்‌ பிடிக்கும்‌.”

இறைவன்‌ தனது மிகச்‌ சிறந்த ரஸுல்‌ மற்றும்‌ காத்தமுன்‌ நபிய்யீன்‌ (ஸல்)‌ அவர்களின்‌ பாதங்களில்‌ உலகச் செல்வங்களை குவித்தான்‌. மேலும்‌ அரபு நாட்டின்‌ மகுடம்‌ சூடாத அரசராக ஆக்கினான்‌. எனினும்‌ அன்னார்‌ (ஸல்‌) அவர்கள்‌ இந்த உயரிய அந்தஸ்திற்கு பிறகும்‌ கூட மிகவும்‌ எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்‌. அதைப்‌ போன்ற உதாரணம்‌ உலகில்‌ காணக்‌ கிடைக்காது.

ஹதீஸில்‌ வருகின்றது : “அன்னார்‌ ஸல்‌ அவர்கள்‌ தடித்த பாயின்‌ மீது எவ்வித பகட்டுமின்றி படுத்திருப்பார்கள்‌. எந்த அளவிற்கு எனில்‌ அடையாளம்‌ உடலின்‌ மீது (பதிந்து) வெளிப்பட்டுவிடும்‌.

ஒருமுறை ஒரு பெண்‌ தனது ஏதோவொரு தேவையை முன்‌ வைக்க அன்னார்‌ (ஸல்)‌ அவர்களிடம்‌ வந்தாள்‌. அப்போது அன்னாரின்‌ கம்பீரத்தைப்‌ பார்த்து நடுங்கத்‌ துவங்கினாள்‌. மேலும்‌ அவளிடமிருந்து பேச்சும்‌ வரவில்லை. அன்னார்‌ (ஸல்)‌ அவர்கள்‌ இந்தக்‌ காட்சியைப்‌ பார்த்தவுடன்‌ நிம்மதியிழந்து அவளை நோக்கிச்‌ சென்றார்கள்‌. மேலும்‌ மிகவும்‌ அன்புடன்‌ கூறினார்கள்‌:

தாயே பயப்படாதீர்கள்‌; பயப்படாதீர்கள்‌; நான்‌ ஓர்‌ அரசனல்ல. மாறாக ஒரு தாய்‌ ஈன்றெடுத்த உன்னைப்‌ போன்ற ஒரு மனிதன்‌ தான்‌”

எனவே எளிமையான வாழ்க்கை இஸ்லாம்‌ மற்றும்‌ அஹ்மதிய்யத்தின்‌ முக்கிய போதனைகளில்‌ ஒன்றாகும்‌. மேலும்‌ எந்த மக்கள்‌ செல்வமும்‌, சொத்துக்களும்‌ இருந்துங்கூட எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வார்களோ அவர்களே உண்மையான  முஸ்லிமாகவும்‌, உண்மையான அஹ்மதியாகவும்‌ கருதப்படுவார்கள்‌.

மேலும்‌ அவர்கள்‌ தமது ஏழை சகோதர, சகோதரிகளுடன்‌ ஒரே பரம்பரையை சார்ந்தவர்களைப்‌ போல அந்நியோன்யமாக இருக்க வேண்டும்‌. நல்ல தூய ஆடைகளை உடுத்துவது இஸ்லாத்தில்‌ தடையில்லை என்பதை நான்‌ ஒப்புக்‌ கொள்கிறேன்‌. மாறாக இதற்கான கட்டளை உள்ளது.

மேலும்‌ ஹுஸுர்‌ (ஸல்‌) அவர்கள்‌ எந்த அளவிற்கு கூறியுள்ளார்கள்‌ எனில்‌.; ஜுமுஆ அன்று மக்கள்‌ குளித்து தமது உடலை தூய்மைப்படுத்தி பள்ளிவாசலுக்கு வரவேண்டும்‌. துவைத்த தூய ஆடை அணிய வேண்டும்‌; இயன்றால்‌ நறுமணம்‌ பூசிக்‌ கொள்ள வேண்டும்‌.

பெண்களுக்கும்‌ அலங்காரம்‌ செய்வதற்கு அனுமதி உள்ளது என்பதையும்‌ நான்‌ ஏற்கிறேன்‌. அப்போதுதான்‌ அவர்கள்‌ தமது கணவருக்கு வெளிப்படையான முறையில்‌ ஈர்ப்பிற்கான காரணியாவார்கள்‌.

ஹதீஸில்‌ வருகின்றது : ஒரு பெண்‌ நபி (ஸல்)‌ அவர்கள்‌ முன்னால்‌ மிகவும்‌ அசிங்கமாகவும்‌, முடியை விரித்துப்‌ போட்டவாறும்‌, அழுக்கான ஆடையுடனும்‌ வந்தாள்‌. நபி ஸல்‌ அவர்கள்‌ காரணம்‌ கேட்டார்கள்‌. அந்தப்‌ பெண்‌, யா ரஸுலல்லாஹ்!‌ நான்‌ யாருக்காக என்னை அழகுபடுத்திக்‌ கொள்ள வேண்டும்‌? எனது கணணவர்‌ நோன்பு வைக்கின்றார்‌. இரவு முழுவதும்‌ தஹஜ்ஜத்‌ தொழுகையில்‌ கழித்துவிடூகிறார்‌,” என்று கூறினாள்‌.

அன்னார்‌ (ஸல்‌) அவர்கள்‌ உடனே அப்பெண்ணின்‌ கணவரை அழைத்தார்கள்‌. மிகவும்‌ கோபமுற்றார்கள்‌. உரிமையை பறித்து இறைவனிடம்‌ கொடுக்க விரும்புகின்றீரா? கேளுங்கள்‌! இறைவன்‌ அவ்வாறான மக்களுடன் திருப்தி கொள்வதில்லை. படைப்பினத்தின்‌ உரிமையை படைப்பினத்திற்கும்,‌ இறைவனின்‌ உரிமையை இறைவனுக்கும்‌, மனைவியின்‌ உரிமையை மனைவிக்கும்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதையே இறைவன்‌ விரும்புகின்றான்‌.

எனவே இஸ்லாம்‌ மிகவும்‌ அழகிய மற்றும்‌ சரிவிகிதமான மார்க்கமாகும்‌. அது அனைவரின்‌ உரிமையையும்‌ அவர்களுக்கு கொடுக்கும்‌ மார்க்கமாகும்‌. அதனை பறிப்பது இறைவனின்‌ கோபத்திற்கு ஒருவனை உள்ளாக்குகின்றது. அலங்காரங்களை‌ மேற்கொள்வதிற்கு அனுமதி கொடுத்திருக்கின்ற இஸ்லாம்‌ தேவையற்ற ஆடம்பரங்களை தடுத்து கட்டுப்பாடுகளையும்‌ விதித்துள்ளது. முழுக்க முழுக்க நேர்மையான மனதுடன் இக்கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது நமது ஜமாஅத்தின் மீது கடமையாகும்.

இந்த காட்டுப்பாடுகளை குறித்து சுருக்கமாக சில வரிகளில் தரப்படுகிறது:

  1. எளிய வாழ்க்கையை மீறும்‌ எந்த அலங்காரமும்‌ செய்யக்‌ கூடாது. மேலும்‌ பெண்கள்‌ பிறர்‌ கண்கள்‌ மற்றும்‌ நன் மக்கள் ஆட்சேபணை செய்யும் அளவிற்கு தமது ஆடை, அலங்காரங்களை மேற்கொள்ளக்‌ கூடாது.
  2. அலங்காரம்‌ செய்வதே வாழ்வின்‌ முக்கிய நோக்கமாக ஆகிவிடக்கூடாது. மாறாக எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
  3. பர்தா அணியும்‌ பெண்கள் கட்டாய நிலையில்‌ ஏதேனும் பொருளை வாங்குவதற்காக பஜாருக்கு செல்லும்போது அல்லது வீட்டை விட்டு வெளியே வரும்போது லிப்ஸ்டிக்‌, முகப்பவுடர்‌ போன்றவை போடக்கூடாது. வெளியே வரும்போது முழுமையாக பர்தா அணிந்திருக்க வேண்டும்‌.
  4. புர்கா அல்லது அதன் மேல் போர்த்தப்படும் ஷால்‌ மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். அதில் எவ்வித அலங்கரித்தல் மற்றும் டிசைன்ஸ் ஏதும் இருக்கக் கூடாது.  ஏனெனில்‌ பர்தா என்பது அழகை மறைப்பதாக இருக்க வேண்டுமே அல்லாமல் அதுவே அழகை வெளிப்படுத்தும் காரணியாக இருந்துவிடக் கூடாது.
  5. ஸ்கூல்‌ மற்றும் கல்லூரியில்‌ பயிலும்‌ பெண்களளுக்கு; வீண்‌ அலங்காரங்களிலிருந்து தம்மை காத்துக்‌ கொண்டு எளிமையை கையாள வேண்டும் என்பது அவசியமானதாகும். நிச்சயமாக தூய ஆடைகள்‌ அணியலாம்‌. எனினும்‌ உங்கள் முகம் மற்றும் ஆடைகளை; செயற்கை அலங்காரங்களை கொண்டு ஈர்க்கக் கூடியதாக ஆக்கி விடாதீர்கள்.

(மஸாமீன் பஷீர், பாகம் 4 பக்கம் 380-382)

நன்றி: அல் ஃபஸ்ல் பத்திரிகை

மொழியாக்கம்: முஅல்லிம் J.J. நாஸிர் அஹ்மது-சங்கரங்கோவில்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.