அல்லாஹ் திருக்குர்ஆனில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் கிலாஃபத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறான். அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்
உங்களுள் நம்பிக்ககை
கொண்டு நற்செயலாற்றுபவர்களை,
அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும்
அவன் அவர்களுக்காக
விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும், அவன் அவர்களின்
அச்சத்திற்குப் பிறகு
அதற்கு பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளான்.
அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும்
நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்கள் ஆவார்கள்.” (திருக்குர்ஆன்:24:
56]
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியின்படி
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை
செய்துவந்தவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் கலீஃபாவை நியமித்து வந்தான். ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு கலீஃபாக்கள் நம்பிக்கை கொண்டவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆதரவும் உதவியும் கிடைத்தன.
கிலாஃபத்திற்கு பிறகு இந்த உம்மத்தில்
ஏற்படவிருக்கும் பல்வேறு நிலைகளையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமாக
இறைவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று இவ்வாறு முன்னறிவித்துள்ளார்கள்:
"அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ்
அதை எடுத்துக் கொள்வான். (அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் மரணம் நிகழும்). பிறகு நுவுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். அல்லாஹ்
நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு
கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பின்னர் அல்லாஹ்
அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும்
எடுத்துக் கொள்வான். பின்னர்,
நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். (இவ்வளவு விபரத்தையும் கூறிய ஹஸ்ரத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறகு மவுனமானார்கள் என நபி மொழி அறிவிப்பாளர் கூறுகிறார்.
(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் தொகுதி 5,
பக்கம்:40.47]
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இந்த
முன்னறிவிப்பிற்கேற்ப அன்னாருக்குப் பிறகு கிலாஃபத் மலர்ந்தது. அதன் பிறகு கொடுங்கோல்
ஆட்சியும், பலவந்தமான
ஆட்சியும் வந்தது. பிறகு நுபுவ்வத் வழியில் கிலாஃபத் ஏற்படும் என்பதற்கிணங்க அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத்தில் 1908ம் ஆண்டு
முதல் இன்று வரை தொடர்ந்து கிலாஃபத் நீடித்து வருகிறது. 2008 மே 27ம் தேதியுடன்
இந்த கிலாஃபத்திற்கான நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.
ஒரு பக்கம், முஹம்மதிய்யா உம்மத்
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தது போன்று பல்வேறு பிரிவுகளாக
பிரிந்து கிடக்கின்றது. உம்மத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதை முஸ்லிம்கள்
உணர்ந்திருக்கிறார்கள். மக்காவிலிருந்து வெளிவரும் Muslim World Leaque என்ற பத்திரிக்கை
தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுகிறது:
“இக்காலத்தில் நாகரிகத்திலும், கலாச்சாரத்திலும், மொழிகளிலும், பழக்கவழக்கங்களிலும் தனித்தனி சிந்தனைக் கொண்ட, பல்வேறு
பிரிவுகளாகவும் சிதறிக் கிடக்கின்ற முஸ்லிம்களை, கலீஃபத்துல்
முஸ்லிமீன் (முஸ்லிம்களின் கலீஃபா) என்ற தலைமையின் கீழ் எப்படி
ஒன்றாக இணைக்க முடியும்? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான
கேள்வியாகும். நாம் இந்தக் கேள்வியை உம்மத்தைச் சேர்ந்த எல்லா தலைவர்களிடமும்,
அறிஞர்களிடமும் எடுத்து வைக்கிறோம்.” (Muslim World League Jan 1975)
மேற்கண்ட மேற்கோளிலிருந்து கலீஃபாவின்
தேவையையும் முக்கியத்துவத்தையும் இவர்கள் மறுக்கவில்லை எனத் தெரிகிறது. ஆனால்
முன்னறிவிப்பிற்கேற்றபடி தோன்றிய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீஃபாவை மறுக்கிறார்கள்.
அதே சமயத்தில் சுயமாக கலீஃபாவை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் படாதபாடு படுகிறார்கள்.
ஆனால் அவர்களால் ஒரு கலீஃபாவை உருவாக்க முடிந்ததா? அதில் அவர்கள் படு
தோல்வி அடைந்துள்ளார்கள்.
மறுபுறம், அல்லாஹ் தன் வல்லமையினால் கிலாஃபத்தை உருவாக்கியுள்ளான். அஹ்மதிய்யா முஸ்லிம்
ஜமாஅத்தில் தற்போது வாக்களிக்கப்பட்ட மஸீஹின் ஐந்தாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர்
அஹ்மத் (அய்யதஹுல்லாஹுத்தஅலா) அவர்கள் முழு உலகத்திலுள்ள அஹ்மதி முஸ்லிம்களின் ஜமாஅத்திற்கு
கலீஃபாவாக இருக்கின்றார்கள். இன்று உலகம் முழுவதிலுமுள்ள 189 நாடுகளிலுள்ள சுமார் 18 கோடி பேருக்கும் அதிகமான அஹ்மதி
இலண்டனில் கொடுக்கின்ற ஜுமுஆ பேருரை Muslim Television Ahmadiyya (MTA) மூலமாக முழு உலகிலும்
ஒளிபரப்பப்படுகின்றது. MTA விலேயே அரபி, ஆங்கிலம், ஜெர்மனி, வங்காளம்,
ரஷ்யன் போன்ற பல்வேறு மொழிகளில் ஜுமுஆ பேருரையின் உடனடி மொழியாக்கமும்
செய்யப்படுகிறது. இவை தவிர உலகத்திலுள்ள பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளியிடப் படுகின்றன.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கலீஃபாவுடன் இணைந்திருக்குமாறு இவ்வாறு வலியுறுத்திக் கட்டளையிட்டுள்ளார்கள்.
"அல்லாஹ்வின் கலீஃபா பூமியில் இருப்பதை
நீங்கள் கண்டால் அவருடன் சேர்ந்து விடுங்கள். உங்கள் உடல் நார் நாராக கிழிக்கப்பட்டாலும்
சரி, உங்கள் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டாலும் சரியே.” (முஸ்னத் அஹ்மத்,
ஒரு மனிதன் கை, கால் இல்லாமல் கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் தலையில்லாமல் உயிர்
வாழ முடியாது. கிலாஃபத் என்பதும் ஒரு சமுதாயத்திற்கு தலை போன்றதாகும். எனவேதான்
கலீஃபாவுடன் சேர்ந்து விடுங்கள் என்ற போதனையை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தமது உம்மத்திற்கு வழங்கியுள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு பிற்காலத்தில் ஏற்படவிருக்கும்
வழிகெட்ட நிலை பற்றி நபிமொழியில் முன்னறிவிப்பு கீழ்வருமாறு காணப்படுகிறது:
ஹஸ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
.நான் அந்த நிலையை அடைந்தால் எனக்கு தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், நீர் முஸ்லிம்களின்
ஜமாஅத்தையும் அதன் இமாமையும் பற்றிக் கொள்வீராக என்று கூறினார்கள். அதற்கு நான், அவர்களுக்கு ஒரு
ஜமாஅத்தோ ஓர் இமாமோ இல்லை என்றால் (என்ன செய்வது)
என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லாப் பிரிவுகளை (ஃபிர்காக்களை)
விட்டும் விலகி இருப்பீராக. ஒரு மரத்தின் வேரைத் தின்று அந்த நிலையிலேயே மரணமடைய
நேர்ந்தாலும் சரியே என்று பதிலளித்தார்கள்.” (புகாரி கிதாபுல் ஃபிதன்)
இந்த நபிமொழியில் ஹஸ்ரத் நபி (ஸல்)
அவர்கள், குழப்பம்
நிறைந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும், அதன் இமாமையும்
பற்றிக் கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். ஜமாஅத் அல்
முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஜமாஅத்) என்ற பெயரில் இயங்கினால் மட்டும் போதும்
என இந்த ஹதீஸை சிலர் தவறாகப்புரிந்து வைத்துள்ளனர். ஆனால் அந்த ஜமாஅத்திற்கு ஓர்
இமாம் இருக்க வேண்டும் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஓர் அடையாளமாகக் குறிப்பிட்டுள்ளார்களே!
அந்த இமாம் தம்மிடம் இருக்கிறாரா என்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
உண்மையில் உண்மையான முஸ்லிம்களின்
ஜமாஅத் என்றால் அதற்கொரு இமாம் இருக்க வேண்டும்; உம்மத்திற்கென்று ஓர் இமாம் இருந்தால்தான் அது உண்மையான முஸ்லிம்
ஜமாஅத்தாக இருக்கவும் முடியும். இமாமும்,
ஜமாஅத்தும் பிரிக்க முடியாதவை என்பதை அருமையாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் விளக்கி
விட்டார்கள்.
இந்த முன்னறிவிப்பின்படி இன்று அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத் மட்டுமே ஓர் இமாமின் கீழ் செயல்படும் உலகளாவிய ஜமாஅத்தாகத்
திகழ்கிறது.
எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர் ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்களையும் நீங்கள் உண்மையிலேயே பின்பற்றுவதாக இருந்தால், காலத்தின் இமாமை
ஒப்புக் கொண்டு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் இணைய வேண்டும். அல்லது ஹஸ்ரத்
நபி (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி அனைத்துப் பிரிவுகளையும் விட்டுப் பிரிந்து
மரத்தின் வேர்களை சாப்பிட நேர்ந்தாலும் தனித்தே வாழ வேண்டும்.
இதை நாம் இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், ஜமாஅத்தும் இமாமும்
இல்லை என்றால்தான் தனித்து வாழ அனுமதியே தவிர காலத்தின் இமாம் இருக்கும் போது அவரை
அடையாளம் காணாமல் மரணிப்பவர் அறியாமையிலான மரணத்தை அடைகிறார் என்று ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
எனவே காலத்தின் இமாமை அடையாளம் கண்டு
அவரை ஒப்புக் கொண்டு இமாமுடன் உள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்தால்தான்
அல்லாஹ்வுக்கும் ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாவீர்கள்.
அல்லாஹ் முஸ்லிகளுக்கு அறியாமையின்
மரணத்தை அடைவதிலிருந்து காப்பானாக. ஆமீன்.
ஆக்கம்: முரப்பி O.M. முஸ்ஸம்மில் அஹ்மத் சாஹிப் H.A
(மே 2008 இல் வெளிவந்த நபிவழி மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None