فَمَنْ یَّمْلِکُ مِنَ اللہِ شَـیْـــًٔـا اِنْ اَرَادَ اَنْ
یُّہْلِکَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ
பொருள்: மர்யமுடைய குமாரர் மசீஹை
அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து
அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்....(5:18)
இந்த வசனம் மூலம் ஈஸா அவர்களை இன்னும்
அல்லாஹ் மரணம் அடைய செய்ய நாடவில்லை. ஆகவே அவர் உயிரோடு இருக்கிறார் என்று அஹ்மதி
அல்லாத சகோதரர்கள் எதிர் வாதம் வைக்கின்றனர்.
நமது பதில்: இந்த
வாசகத்திற்கு பிறகு “وَاُمَّہٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا” என்றும் வந்துள்ளது. அதாவது இறைவன் ஈசாவையும், அவரது தாயாரையும்,
மேலும் பூமியிலுள்ள அனைவரையும் அழிக்க நாடினால்” என்று வந்துள்ளது. அப்போ, ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களும் மேலும் பூமியிலுள்ள எந்த பொருளும், உயிரினமும் அழியவில்லை என்று கூறினால் சரியாக இருக்குமா...? மாறாக ஒவ்வொரு நொடி பொழுதிலும் ஒவ்வொரு உயிர் இந்த பூமியில் அழிந்து
கொண்டிருக்கிறது.
இந்த வசனதுக்கு சரியான
பொருள் என்னவென்றால், இறைவன்
நாடினால் மசீஹையும், மர்யம் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும்
(ஒரு நோடி போலுதில்) அழித்திருப்பான். ஆனால் அல்லாஹ் தஆலா இந்த உலகத்தை சிறிது
சிறிதாகவே அழிப்பான். இதனை பிறிதொரு இடத்தில் இவ்வாறு சொல்லி காட்டுகிறான்,
اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُہَا مِنْ
اَطْرَافِہَا
பொருள்: நாம் பூமியை அதன்
அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? (21:44)
5 வது எதிர்வாதம்
அடுத்த
எதிர்வாதமாக அவர்கள் எடுத்து வைக்கும் வாதம்,
وَیُکَلِّمُ النَّاسَ فِی الْمَہْدِ وَکَہْلًا
பொருள்: அவர் (குழந்தையாகத்) தொட்டிலில்
இருக்கும்போதும்,
(பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த
பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார். (3:46) அவர்கள்
தொட்டிலில் பேசினார்கள் ஆனால் 33 வது வயதில் வானத்திற்கு
உயர்த்துபட்டுவிட்டார்கள். ஆகவே அவர் இன்னும் முதிர்ச்சி அடைந்த பருவத்தில்
பேசவில்லை. ஆகவே வானத்திலிருந்து மீண்டும் வந்து “முதிர்ச்சியின் நிலையிலும்”
பேசுவார். என்று ஒரு குதர்க்கமான எதிர்வாதத்தை வைக்கின்றனர்.
நமது பதில்: “கஹல்” என்று
சொல்லுக்கு அகராதியின் அடிப்படையில் “30 லிருந்து 40 வயது வரைக்குண்டான
காலக்கட்டத்தை குறிக்கும்” என்று “மஜ்மஉல் பஹார் பாகம் 3 பாகம் 236 “கஹல்” என்ற
சொல்லுக்கு கீழ்”.....உங்களது கூற்றிற்கு இணங்க அவர் 33 வயதில் உயர்த்தப்பட்டு
விட்டார் என்று வைத்துக் கொண்டாலும், 3 வருடம் அவர்கள் “கஹல்” நிலையிலும் பேசிவிட்டார்களே. பிறகு மீண்டும்
அவர்களை கொண்டு வருவது ஏனோ...!?
2- நாம் ஹதீஸின்
அடிப்படையில் அவர் 120 வருடம் உயிரோடு இந்த பூமியிலேயே இருந்தார்கள் என்று
நம்புகிறோம். ஆகவே இந்த வகையில் அவர்கள் “கஹல்” வயதிலும் பேசினார்கள் என்பது
நிரூபணம் ஆகிவிட்டது.
6 வது எதிர்வாதம்
அடுத்ததாக
அஹ்மதி அல்லாதோர் வைக்கும் எதிர்வாதம்,
وَیُعَلِّمُہُ الْکِتٰبَ وَالْحِکْمَۃَ
பொருள்: இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும்
கற்று கொடுப்பான். குர்ஆனில் எங்கெல்லாம்
அல்கிதாப், அல் ஹிக்மா என்று
வந்துள்ளதோ அங்கெல்லாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்றே பொருள் ஆகும். ஆக ஈஸா வருகை
தந்த பிறகு குர்ஆன், ஹதீஸை அல்லாஹ் கற்று தருவான். இதையே
இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். என்று எதிர்வாதம்
வைக்கின்றனர்.
நமது பதில்: உங்களது இந்த
அடிப்படை கருத்தே தவறு ஆகும். காரணம் இறைவன் குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களை
குறித்தும் அவர்களுக்கு கிதாபையும், ஞானத்தையும் (ஹிக்மத்தையும்) கொடுத்தான் என்று அல் நிஸா வசனம் 55 இல்
வருகிறதே. இதன் அடிப்படையில் உங்களின் இந்த கருத்து தவறே ஆகும்.
ஹஸ்ரத் இமாம்
ஃபக்ருத்தீன் ராஸி (ரஹ்) அவர்கள் இந்த வசனதுக்கு விளக்கமாக இவ்வாறு
எழுதுகின்றார்கள்: “(நீங்கள்
வைக்கும் இந்த வசனத்தில்) கிதாப் என்றால் “எழுதுதல், படித்தல் என்பதாகும், ஹிக்மத் என்றால் ஆன்மீக கல்வி
மற்றும் நன்னடத்தைகள் ஆகும். (தஃப்சீர் கபீர் பாகம் 2 பக்கம் 678)
7 வது எதிர்வாதம்
அஹ்மதி
அல்லாத முஸ்லிம் சகோதரர்கள் எதிர் வாதமாக எடுத்து வைக்கும் வாதம்
وَاِذْ کَفَفْتُ بَنِیْٓ اِسْرَاۗءِیْلَ عَنْکَ
பொருள்: அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு)
நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (5:111) இந்த
வசனத்திலிருந்து தெரியவருவது என்னவென்றால்,
ஹஸ்ரத் ஈஸா யூதர்களின் கையில் சிக்கவே இல்லை என்பது தெரிகிறது. ஒரு வாதத்திற்கு
அவர் சிலுவையில் அரையப்பட்டார் என்று வைத்துக்கொண்டாலும்,
அவர்களின் கையிலிருந்து இரத்தம் வந்தது, இந்த அளவுக்கான
கஷ்டங்களை மேற்கொண்ட பிறகு உயிரோடு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டார். ஆகவே இதன்
மூலம் இந்த வசனம் பொய்யாகிறது என்ற ஓர் எதிர்வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
நமது பதில்: “கஃப்ஃப”
மற்றும் “அன்” அவர்கள் செய்துள்ள பொருள் தவறே ஆகும். திருக் குர்ஆனில் பிறிதொரு
இடத்தில் இவ்வாறு வருகிறது,
یٰٓاَیُّھَا الَّذِیْنَ اٰمَنُوا اذْکُرُوْا نِعْمَتَ اللہِ
عَلَیْکُمْ اِذْ ہَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْٓا اِلَیْکُمْ اَیْدِیَہُمْ فَکَفَّ
اَیْدِیَہُمْ عَنْکُمْ
பொருள்: முஃமின்களே! ஒரு
கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப்
புரிந்த அருளை நினைவு கூறுங்கள்...(5:12)
போரின் போது எந்த
முஸ்லிமும் ஷஹீதோ அல்லது காயமோ அடையவில்லையா..? ஆகவே “கஃப்ஃபி எத” என்பதின் சரியான பொருள், உண்மையான வெற்றியை காஃபிர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது ஆகும். அதாவது
காஃபிர்கள் முஸ்லிம்களை வெல்ல முடியாது என்பதாகும்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None