(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்களின் உரையின் சுருக்கம்)
நாம் தொடர்ந்து உலகில் அமைதிக்கான அறைகூவலை விடுத்துக்கொண்டே இருக்கிறோம். நாம் உள்ளத்தில உணரும் வேதனையும்
ஏக்கமுமே மனிதகுலத்தை துன்பப்படுவதிலிருந்தும் விடுவிக்க
முயற்சிக்கவேண்டும் என்று நம்மை துண்டுகிறது. அதன் மூலம் இந்த உலகு
வாழ்வதற்கு தகுதி பெற்றுவிடும்.
உண்மையில் இந்த நிகழ்ச்சி இந்த குறிக்கோளை அடைவதற்கான பல முயற்சிகளுள் ஒன்றாகும்.

இன்றைய உலகில் நாம் பெருமளவிலான சண்டை, அமைதியின்மை, குழப்பம் ஆகியவற்றை
காண்கிறோம். சில நாடுகளில் மக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
சில நாடுகளில் பொது மக்கள் அரசாங்கத்துடன் போரிடுகின்றனர். அதைப் போன்று
ஆட்சியாளர்கள் தமது சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத அமைப்புகள் தமது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக குழப்பங்களுக்கு
எரியூட்டி வருகின்றன. அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும்
கண்மூடித்தனமாக கொன்றுகுவிக்கின்றனர். சில நாடுகளில் அரசியல் கட்சிகள் தமது
நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவதற்கு பதிலாக தமக்கிடையே
சண்டையிட்டுக் கொள்கின்றன. மேலும் சில நாடுகள் பிற நாடுகளின் இயற்கை
வளங்கள் மீது கண்வைத்தவாறு செயல்படுகின்றன. இதற்காக அவர்கள் தமது பெரும்
ஆற்றலை செலவழிக்கின்றன. தமது ஆதிக்கத்தை நிலாநாட்டுவதற்காக இதில் எந்த
பின்னடைவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
ஐநா சபையின் பொதுச்சபையிலும், பாதுகாப்பு கவுன்ஸிலிலும் நாம் பார்க்கிறோம். பல தடவை அருமையான உரைகள் அங்கு நிகழ்த்தப்படுகின்றன. அவை புகழ்ந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் பொருளற்றவையாகும் ஏனெனில் அசல் முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிடுகின்றன. எனவே எங்கு நீதியுடன் அல்லாமல் வல்லரசுகளின் அழுத்தத்தின் காரணமாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ பின்னர் அங்கு நிகழ்த்தப்படும் இத்தகைய சொற்பொழிவுகள் பொருளற்றவையும் உலகை ஏமாற்ற முயற்சிப்பதுமாகும். இருந்த போதிலும் இவை எல்லவற்றின் காரணமாக நாம் நம்பிக்கை இழந்துவிடவும் கூடாது. நமது முயற்சிகளை கைவிடவும் கூடாது. மாறக சட்டத்தின் வட்டத்திற்குள் இருந்தவாறே காலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டவாறே அரசுகளுக்கு நினைவூட்டி வரவேண்டும்.
நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது மனித முயற்சி தோல்வி
அடைகிறதோ அப்போது மனிதகுலத்தின் விதியை தீர்மானித்திட இறைவன் தனது திட்டத்தை பிறப்பிக்கின்றான். இறைவனின் திட்டம் செயல்பட துவங்கும் முன்பே மக்கள் அவன் பக்கமும் மனிதகுலத்திற்கு தொண்டு செய்வதன் பக்கமும் நிர்பந்திக்கப்படுவதற்கு முன்பே உலக மக்கள் இந்த முக்கிய விஷயங்கள் பக்கம் அவர்களாகவே கவனம் செலுத்த முன்வருவது மிகவும் நல்லதாகும். ஏனெனில் இறைவன் செயல்படுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டால் பிறகு அவன் மனிதகுலத்தை மிகவும் அச்சுறுத்தும் வகையில் பிடிப்பான்.
இன்றைய உலகில் இறைவனின் ஓர் அச்சுறுத்தும் தோற்றமாக உலகப் போர் வரலாம். இத்தகைய ஒரு போரின் விளைவுகளும் அழிவும் இந்த போருடன் அல்லது இந்த தலைமுறையுடன் முடிந்துவிடாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உண்மையில் இதன் அதிர்ச்சியூட்டும் விளைவுகள் பல தலைமுறை வரை தொடர்ந்துகொண்டிருக்கும். இத்தகைய போரின் ஒரு துயரமிகு விளைவு எதுவாக இருக்குமெனில் பிறக்கும் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படும். தற்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் இது தொடரும்.
இன்றைய ஆயுதங்கள் எந்த அளவு அழிவை ஏற்படுத்தக்கூடியவை எனில் அதனால் குழந்தைகள் மரபு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் குறைபாடுகளை கொண்டவையாகவே தலைமுறை தலைமுறையாக பிறந்து கொண்டிருக்கும்.
அணு ஆயுதப்போரின் திகைப்பூட்டும் விளைவுகளுக்கு இரண்டாம் உலகப்போரின் போது அணு ஆயுதப்போரால் தாக்கப்பட்ட ஜப்பான் உதாரணம் ஆகும். இன்றும்கூட நீங்கள் ஜப்பானுக்கு சென்றால் அச்சமும் போரின் மீதான வெறுப்பும் அவர்களின் கண்களிலும் அவர்களின் பேச்சிலும் வெளிப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனினும் அன்று ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய அணுஆயுதங்கள் இன்று சில சிறிய நாடுகளில் உள்ள அணுஆயுதங்களைவிட மிகவும் ஆற்றல் குறைந்தவையே ஆகும். 70 ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட இன்று ஜப்பானில் அணுஆயுதங்களினால் ஏற்பட்ட பாதிப்பு பிறக்கும் குழந்தைகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மனிதன் துப்பாக்கியால் சுடப்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அணுஆயுதப் போர் நிகழ்ந்தால் firing line – ல் உள்ள எவருக்கும் இந்த வாய்ப்பு இருக்காது. மாறாக மக்கள் உடனடியாக மரணித்து உறைந்து சிலைகளைப் போன்று ஆகிவிடுவர். அவர்களின் தோல்கள் உருகிவிடும். குடிநீர், உணவு, தாவர வகைகள் எல்லாம் கதிர்வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகிவிடும். இதனால் எந்தவித நோய்கள் உருவாகலாம் என்பதை நாம் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்.
எந்த இடங்கள் நேரடி தாக்குதலுக்கு ஆளாகவில்லையோ, எங்கு கதிர் வீச்சு குறைவாக உள்ளதோ அந்த இடங்களில் கூட நோய்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. அங்குள்ள எதிர்கால தலைமுறையினரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகிவிடுவர்.
சுயநலவாத முட்டாள் மக்கள் தங்களது கண்டுபிடிப்புகளின் மீது பெருமை கொண்டு தாங்கள் தயாரித்திருப்பதை உலகிற்கு அவர்கள் தரும் அன்பளிப்பு என கூறுகின்றனர். உண்மை என்னவெனில் கவனக்குறைவின் காரணமாகவோ அல்லது விபத்துகளின் காரணமாகவோ அணு சக்தி தொழில் நுட்பத்தின் பயன்தரும் அம்சங்கள் கூட மிகப்பெரும் அபாயத்தில் முடிந்து பேரழிவை ஏற்படுத்திவிடலாம். நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.1986 –ம் ஆண்டு தற்போதைய உக்ரேனில் உள்ள செர்னோபிலில் அணுசக்தி விபத்தினால் பேரழிவு ஏற்பட்டது.
போரினால் மக்கள் மரணிப்பது நிகழ்கின்ற ஒன்றுதான். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் 3 மில்லியன் மக்கள் மரணித்தனர். இது மொத்த மக்கள் தொகையில் 4% ஆகும். மற்ற நாடுகளில் அதிக விகிதாச்சாரத்தில் மக்கள் மரணித்திருக்கலாம். இருப்பினும் போரின் மீதான வெறுப்பு பிற நாட்டினரைவிட ஜப்பானிய மக்களிடம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது போடப்பட்ட இரண்டு அணுகுண்டுகள் ஆகும். இதன் விளைவுகளை ஜப்பான் இன்று வரை கண்டுவருகிறது.
தற்போது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சில நாடுகளின் சில பகுதிகள் வரைபடத்திலிருந்து முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். அவை முற்றிலும் அழிந்துவிடும்.
புள்ளிவிபரப்படி இரண்டாம் உலகப்போரில் மரணித்தவர்கள் 62 மில்லியன் மக்கள் ஆவர். இதில் 40 மில்லியன் மக்கள் பொது மக்கள் ஆவர். அதாவது இராணுவத்தைவிட பொதுமக்கள் அதிகமாக மரணித்தனர். இருப்பினும் ஜப்பானைத் தவிர பிற இடங்களில் எல்லாம் மரபு சார்ந்த போர் முறைகளே பின்பற்றப்பட்டது.
இன்று சில சிறிய நாடுகள் கூட அணு ஆயுதங்களைப் பெற்றுள்ளன. அணு ஆயுதங்களைப் பற்றிய அறிவு அதனை சரியாக உபயோகிக்க தெரியாத அல்லது தமது செயலின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாத மக்களிடம் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பது மிகப் பெரும் அச்சமாகிவிட்டது. எனவே வல்லரசுகள் நீதியுடன் செயல்படாவிட்டால் சிறிய நாடுகளின் விரக்தியை அகற்றாவிட்டால் அறிவிப்பூர்வமான திட்டங்களை வகுக்காவிட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும். பின்னர் ஏற்படும் அழிவு நமது கற்பனைக்கு எட்டாத அளவு இருக்கும்.
சமீபத்தில் ஒரு கட்டுரை நான் படிக்க நேர்ந்தது. அதில் அதன் ஆசிரியர் இனறைய உலகின் நிலையை 1932-ம் ஆண்டின் நிலையுடன் ஒத்திருப்பதாக கூறியிருந்தார். பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்த ஒப்புமை இருப்பதாக அவர் கூறியிருந்தார். சில நாடுகளின் மக்கள் அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் அவர்களின் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். மேலும் பல விஷயங்களில் இந்த ஒப்புமை இருப்பதாகவும் இன்றைய உலகின் நிலை இரண்டாம் உலகப்போர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் இருந்த நிலையை அப்படியே ஒத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். சிலர் அவரது இந்த ஆய்வினை ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால் நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன்.
எனவேதான் நான் உலக நாடுகள் மிகவும் கவலைப்பட வேண்டும் என்றும் இன்றைய நிலை குறித்து அக்கறை கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறேன்.
அஹ்மதிய்யா முஸ்லம் ஜமாத்தை சேர்நத நாங்கள் உலகையும் மனிதகுலத்தையும் எல்லாவிதமான அழிவிலிருந்தும் காப்பாற்ற எங்களால் இயன்ற முயற்சிகளை செய்கிறோம். ஏனெனில் இந்த காலத்தின் இமாமை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். வாக்களிக்கப்பட்ட மஸீஹாக இறைவனால் அனுப்பப்பட்ட அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவரகளின் அடியாராக வந்துள்ளார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ முழு உலகிற்கும் ஒரு கருணையாக அனுப்பப்பட்டார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை நாங்கள் படிப்பதனால் உலகின் நிலையை கண்டு மிகவும் வேதனைப்படுகிறோம். இந்த வேதனையே மனித குலத்தை அழிவிலிருந்தும் காப்ப்பாற்றும் முயற்சியில் ஈடுபட எங்களை தூண்டுகிறது.
அமைதியை மேம்படுத்த நான் எடுத்த முயற்சிகளுள் ஒன்று சில உலகத்தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் ஆகும். சில மாதங்களுக்கு முன்னர் நான் போப் பெனடிக்ட் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது ஒரு அஹ்மதி மூலம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் உலகின் மிகப் பெரிய மார்க்க அமைப்பின் தலைவராக இருப்பதால் அமைதிக்கான முயற்சிகளை அவர் செய்ய வேண்டும் என எழுதியிருத்தேன். .அதைப் போன்று மிகச்சமீபத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான பகைமை அபாயகரமான நிலையில் கொதித்துக் கொண்டிருப்பதை அறிந்து நான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நித்தன்யாஹுவுக்கும் ஈரான் அதிபர் முஹம்மத் அஹ்மதி நிஜாத்திறகும் கடிதங்கள் எழுதியிருந்தேன். அதில் நான் அவர்கள் மனிதகுலத்தின் நன்மையை கருதி முடிவுகள் எடுக்கப்படும் போது அவசரத்தையோ பொறுப்பற்ற தன்மையையோ காட்டிவிடாதீர்கள் என வேண்டியிருந்தேன்.
மேலும் சமீபத்தில் அதிபர் பராக் ஓபாமாவுக்கும் கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பருக்கும் கடிதங்கள் எழுதியிருந்தேன். அதில் அவர்க்ள் இருவரையும் அமைதியையும் இணக்கத்தையும் உலகில் மேம்படுத்த அவர்கள் தங்களது பங்கை பொறுப்புடன் செய்ய வேண்டும் என எழுதியிருந்தேன். மேலும் நான் பிற அரசுகளின் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுத இருக்கிறேன்.
என் கடிதங்களுக்கு இந்த தலைவர்களால் எந்த மதிப்பும் தரப்படுமா என்பது தெரியாது. நான் அவர்களுக்கு எழுதி விட்டேன். அவர்களது நடவடிக்கை எதுவாக இருந்த போதிலும் இன்றைய உலகின் அபாயகரமான நிலையை குறித்த இலட்சக்கணக்கான அஹ்மதி முஸ்லிம்களின் உணர்வுகளை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஆன்மீக தலைவர் என்ற முறையில் அவர்களிடம் தெரிவிக்க எனது முயற்சியை நான் செய்துவிட்டேன்.
மனித குலத்தின் மீதான எங்களது நேசம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளின் மீதான நேரடி அன்பின் விளைவேயாகும் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கலாம். உங்களது மனதில் இந்த கேள்வி தோன்றலாம். அவ்வாறாயின் ஏன் முஸ்லிம தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர்? ஏன் சில முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் தமது நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்காக தமது சொந்த மக்களையே கொன்று குவிப்பதற்கு கட்டளையிடுகின்றனர்?
இத்தகைய நடவடிக்க்கைள் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமானவையாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் எந்த சூழ்நிலையிலும் எந்தவிதமான பயங்கர வாதத்திற்கோ தீவிர வாதத்திற்கோ அனுமதி வழங்கவில்லை.
எங்களது நம்பிக்கை என்னவெனில் இன்றைய காலத்தில் இறைவன் காதியானை சேர்ந்த ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் இமாம் மஹ்தியாகவும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றியவாறும் தோன்ற செய்துள்ளான். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் திருக்குர்ஆனின் அசல் போதனைகைளை பரப்புவதற்காக அனுப்பப்பட்டார்கள். மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க அன்னார் அனுப்பப்பட்டார்கள். மனிதர்கள் தமக்கிடையில் ஆற்ற வேண்டிய உரிமைகளை அடையாளங்காட்டி அவற்றை நிலைநாட்ட அனுப்பப்பட்டார்கள். எல்லாவகையான மார்க்க போர்களையும் நிறுத்துவதற்காக அன்னார் அனுப்பப்பட்டார்கள். எல்லா மார்க்கங்களின் தலைவர்கள், நபிமார்கள் மற்றும் தோற்றுனர்களின் மரியாதையையும் கண்ணியத்த்தையும் நிலைநாட்ட அன்னார் அனுப்பப்பட்டார்கள். நல்லொழுக்க பண்புகளில் உயர்தரத்தை அடைவதற்கு பயிற்சி அளிப்பதற்காக அன்னார் அனுப்பப்பட்டார்கள். உலகில் அமைதி, நேசம், பரிவு மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட அன்னார் அனுப்பப்பட்டார்கள்.
எங்களுக்கு பயங்கரவாதிகளோ தீவிரவாதிகளோ எடுத்துக்காட்டுகள் அல்ல. கொடுமைக்கார முஸ்லிம் ஆட்சியாளர்களும் எங்களுக்கு முன்மாதிரி அல்ல. மேற்கத்திய சக்திகளும் எங்களுக்கு முன்மாதிரி அல்ல. எங்களது முன்மாதிரி இஸ்லாத்தின் தோற்றுனர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே ஆவார்கள். எமது வழிகாட்டி திருக்குர்ஆனே ஆகும்.
எனவே இந்த அமைதிகருத்தரங்கின் வாயிலாக முழு உலகிற்கும் ஒரு செய்தியினைத் தெரிவிக்கிறேன். என்னவெனில் இஸ்லாத்தின் போதனைகளின் சாராம்சம் அன்பு, நேசம்,பரிவு மற்றும் அமைதி ஆகியவையே.
முஸ்லிம்களின் ஒரு சிறுபான்மையினர் இஸ்லாத்தின் மிகவும் கோணலான வடிவத்தினை உலகின் முன் வைத்து வழிகெட்ட தமது கொள்கைகளின்படி செயல்படுகின்றனர்.
நான் உங்கள் அனைவரிடமும் கூறுகிறேன். நீங்கள் இதனை உண்மையான இஸ்லாம் என நம்பிவிட கூடாது. மேலும் இந்த வழிகெட்ட கொள்கைகளை பெரும்பான்மையான முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு ஒரு சலுகையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனை கொண்டு அவர்களை கொடுமைக்கு இலக்காக்ககூடாது.
இந்த உரையின் வீடியோவை பார்க்க:
http://www.youtube.com/watch?v=Ma-bwkO8TE8

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None