ان عیسی لم یمت (இன்ன ஈஸா லம் யமுத்) ஹதீஸ் பலகினமானதே

இந்த ஹதீஸ் ஜாமியுல் பயான் இப்னு ஜரீர் பாகம் 2 பக்கம் 19 இலும் வருகின்றது. தஃப்சீர் இப்னு கசீரிலும் வருகின்றது.

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு ஈஸா (அலை) அவர்கள் இன்னும் இறக்கவில்லை என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் இவர்களுக்கு கை கொடுப்பத்தில்லை என்பதை நாம் கீழே பார்ப்போம்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஓர் சஹாபியே கிடையாது. ஓர் தாபி ஆவார்.
இரண்டாவது: இந்த ஹதீஸை அறிவித்த இந்த தாபி ஹசன் பசரி என்பவர் நம்ப தகுந்தவர் அல்ல என்பதை "தஹ்ஸீபுத் தஹ்ஸீப்" இல் சுட்டி காட்டப்படுகின்றது.

1-"ஹசன் பசரியின் நம்பத்தகாத அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதில்லை. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 2 பக்கம் 266)
2- ஹஸ்ரத் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறுகின்றார்க, "ஹசனின் அறிவிப்பை விட வேறு எந்த அறிவிப்பும் அதிக பலகீனமானதாக கிடையாது"(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 7 பக்க 202, 384, அதா பின் அபி ரபாஹ் வார்த்தைக்கு கீழ்)


ஹசன் பசரி என்பவர் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னதாக சொன்ன ஹதீஸ் முழுவதும் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களிடமிருந்து பெறப்பட்ட, அறிவித்த ஹதீஸ் ஆகும் என்று கூறுகின்றார்கள்.
ஆனால், ஹசன், ஹஸ்ரத் அலியிடமிருந்து எந்த ஒரு ஹதீஸும் கேட்கவில்லை என்று தஹ்ஸீபுத் தஹ்ஸீப் கூறுகிறது:
"அபூ சர்ஆ விடம் கேட்கப்பட்டதாவது, ஹசன் பசரி ஏதாவது ஒரு பத்ரி ஸஹாபாவை கண்டிருக்கிறார்களா? அதற்கு அவர்கள், "ஆம் ஹஸ்ரத் உஸ்மான், ஹஸ்ரத் அலி அவர்களை ஓர் பார்வை மட்டும் பார்த்திருக்கிறார்கள். அடுத்து,"அவர்கள் (ஹசன்) ஹஸ்ரத் உஸ்மான் அல்லது ஹஸ்ரத் அலியிடமிருந்து ஏதாவது ஹதீஸை கேட்டுள்ளார்களா" என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக," இல்லை" என்று கூறினார்கள். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 2 பக்கம் 266 & 267)
இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, "ஹஸ்ரத் ஹசன் பசரி எந்த ஒரு பத்ரி சஹாபியிடமிருந்தும் ஹதீஸ் கேட்கவில்லை. இமாம் திர்மிதி அவர்கள் கூறுகின்றார்கள்,"ஹசன் பசரி அலி (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸும் கேட்டதாக ஆதாரம் இல்லை. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 2 பக்கம் 266 &267)

3-அல்லாமா ஷோகாஃபி எழுதுகின்றார்கள்," ஹதீஸ்களின் இமாம்களின் பார்வையில் ஹஸ்ரத் அலியிடமிருந்து ஹஸ்ரத் ஹசன் பசரி எந்த ஹதீஸும் கேட்டதாக ஆதாரம் இல்லை. (கிதாப் ஃபவாயிதுல் மஜ்மூஆ ஃபீ அஹாதீஸுல் மவ்லூஆ பக்கம் 83, பதிப்பகம், முஹம்மதி லாஹூர்) மேலும் பார்க்க (தக்மிலா மஜ்மஉல் பிஹார் பாகம் 3 பக்கம் 518)

4- இந்த ஹதீஸிற்கு மொத்தம் நான்கு அறிவிப்பாளர்கள். இவர்கள் அனைவருமே பலகீனமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
முதல் அறிவிப்பாளர்: இஸ்ஹாக் பின் இப்ராஹீம் பின் சயீதுல் மத்னி என்பவர்.  இவர் சம்பந்தாமாக எழுதப்பட்டுள்ளதாவது: அபு சர்ஆ கூறினார்கள், இந்த அறிவிப்பாளரின் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது ஆகும். மேலும் வலுவான அறிவிப்பாளரும் இல்லை. அபூ ஹாதீம் அவர்கள், இவரது அறிவிப்பானது பலகீனமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 1 பக்கம் 214 & மீசானூல் இஃததால் பாகம் 1 பக்கம் 70)

இரண்டாவது அறிவிப்பாளரின் பெயர்: அப்துல்லாஹ் பின் அபி ஜஅஃபர் ஈஸா பின் மாஹான். இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: அப்துல் அசீஸ் பின் சலாம், இவர் ஓர் ஃபாசிக் ஆவார் என்று கூறுகின்றார், எவரொருவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கப்படுகின்றாதோ அது நம்பத்தகுந்ததாக இருக்காது. ஸாஜீ கூறுகின்றார்கள், இவரது அறிவிப்பு பலகினமானது ஆகும்.(தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 5 பக்கம் 177 & மீசானூல் இஃததால் பாகம் 2 பக்கம் 26) "லம் யமுத்" ஹதீஸும் கூட இந்த அறிவிப்பாளர் தனது தந்தையிடமிருந்தே அறிவித்துள்ளார். ஆகவே இந்த அறிவிப்பு எவ்வாறு இருந்த போதிலும் நிராகரிக்கப்பட்டதாகும்.

மூன்றாவது நபர்: அப்துல்லாஹ் வின் தந்தை அபூ ஜஅஃபர் இப்னு மாஹான் ஆவார்.
இவரை பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இமாம் அஹ்மத் இன் பார்வையில் இந்த அறிவிப்பாளர் வலுவானவர் கிடையாது. உமர் இப்னு அலி யின் பார்வையில் இவர் பலகீனமானவர். நசாயி மற்றும் அஜ்லி யின் பார்வையிலும் வலுவானவர் கிடையாது. மட்டுமல்லாது, இந்த அறிவிப்பாளரை தவறு செய்பவர் என்றும், கெட்ட நினைப்பை கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 12 பக்கம் 57 & மீசானூல் இஃததால் பாகம் 2 பக்கம் 285)

நான்காவது நபர்: ரபீ இப்னு அனஸ் அல்பக்ரியுள் மிஸ்ரி ஆவார்.
இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பாளர் காலி ஷியாவாக இருந்தார். மேலும் எந்த அறிவிப்பை அபூ ஜஅஃபர் ஈஸா இப்னு மாஹான் கூறுகின்றாரோ அதைவிட்டு மக்கள் தற்காத்து கொள்ளுவார்கள். ஏனென்றால் இவ்வாறான அறிவிப்பு மிகவும் கெட்டதாக இருக்கும். (தஹ்ஸீபுத் தஹ்ஸீப் பாகம் 3 பக்கம் 239)
ஆக, இந்த அறிவிப்பானது ஹசனிடமிருந்துதான் வருகின்றது, ஆகையால் இது நம்பதகுந்தது அல்ல. இரண்டாவது, இந்த அறிவிப்பில் வரும் ஐந்து அறிவிப்பாளர்களில் நான்கு அறிவிப்பாளர் பலகீனமானவர், நம்ப தகுந்தவர் அல்லர். இதில் சிலர் ஷியாவும் கூட. ஆகவே இந்த ஹதீஸானது பொய் மற்றும் உருவாக்கப்பட்டதாகும்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.