இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு அசாதாரண பிறப்பே...!


(மேற்கண்ட தாய் -மகள் புகைப்படத்தை லண்டனில் புகழ் பெற்ற பிளிட்ஸ் ஏட்டில் வெளியாகிய செய்தி மிகவும் பரபரப்பாக்கியது)

அஹ்மதி முஸ்லிம்களின் நம்பிக்கையும் உண்மையான் கருத்தும் ஈஸா நபி (அலை) அவர்கள் தந்தையின்றி பிறந்தார் என்பதனை குர்ஆன் மூலம் நாம் நம்புகிறோம். அவ்வாறு பிறப்பது அசாதாரண என்று கூறலாமே தவிர உடலியல் துறைக்கு அப்பாற்பட்டது (NOT EXTRA-PHYSICAL) என்று கூற முடியாது. இயற்க்கை சட்டத்திற்கு உட்பட்டதே. இதனால் எந்த தெய்வீக தன்மையும் அவருக்கு இல்லை. மாறாக திருக் குர்ஆன் கூறுவது போல், "நிச்சயமாக அவர் (ஈஸா) காலத்திற்குரிய அத்தாட்சியாவார்" (43:61) எவ்வாறு என்றால்,

யூதர்கள் தங்களிடம் வந்த நபிமார்களை எல்லாம் அவமதித்து ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் இறுதியாக அவர்களை எச்சரிக்கை செய்யவும், அடையாளமாகவும் ஈஸா நபி (அலை) அவர்களை தந்தை இல்லாமல் பிறக்க செய்தான். அருட்கொடைகளுள் மிக மிக உயரிய அருட்கொடையாகிய நுபூவ்வத்தை, நபிமார்கள் வருகையை யூதர்கள் மறுத்ததினால் யூதர்களில் இனி யாரும் ஒரு நபிக்கு தந்தை ஆகும் பாக்கியம் கிடையாது. இது பிடுங்கப்பட்டு விட்டது என்பதனை தந்தையின்றி ஈஸாவை பிறக்க செய்ததின் மூலம் அவரை காலத்திற்குரிய அடையாளமாக (குர்ஆன் 43:61) இறைவன் ஆக்கி வைத்தான். அந்த அடையாளத்தையும் யூதர்கள் உணராது, அந்த காரணத்தை கூறியே அவரை கேலியும், கிண்டலும் செய்ததினால் இனிமேல் நபியை பெரும் பாக்கியத்தை பெற முடியாது போய்விட்டது. 

அதாவது, ஈஸா நபி (அலை) அவர்கள் தந்தையன்றி பிறந்ததின் மூலம் யூதர்களுக்கு ஓர் அடையாளத்தை இறைவன் காட்டினான். இதன் மூலம் ஒரு பாதி நுபுவ்வத்- நபிப்பதவி இஸ்ரவேலர்களிடமிருந்து இறைவனால் பிடுங்கப்பட்டு விட்டதனை இறைவன் உணர்த்தினான். அதனை அவர்கள் அறியாததுடன் அந்த நபியையும் சிலுவையில் அறைந்து அவமரியாதை செய்தனர். எனவே மறுபாதியையும் பிடுங்கி விட்டான். இனிமேல் இஸ்ரவேலர்களில் நபிமார்கள் தோன்ற மாட்டார்கள். அந்த நுபுவ்வத் இஸ்மவேலர்க்கு வந்தது. அப்படி வந்தவர்தான் எம்பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவார். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்மவேலர் சமுதாயத்தை சார்ந்தவர்.

எனவே ஈசாவின் பிறப்பு நுபுவ்வத் எனும் அருட்கொடை ஒரு சமுதாய மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டு ஒரு சமுதாயத்திற்கு கொடுக்கப்பட இருப்பதனை முன்னறிவிக்கும் எச்சரிக்கையும், அடையாளமே தவிர அப்பிறப்பில் வேறு எந்த சிறப்பும், அம்ஸமும் இல்லை. 

இரண்டாவதாக, ஈஸா நபியின் பிறப்பு பற்றி திரு குர்ஆனில் மூன்றாவது சூராவிலும் 19 வது சூராவிலும் யஹ்யா நபியின் பிறப்பினை அடுத்தடுத்து கூறப்பட்டுள்ளது. இந்த இரு இடத்தை தவிர எங்கும் கூறப்படவில்லை. இதன் கருத்து எஹ்யா நபி (அலை) அவர்களின் பிறப்பும், ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பும் சமம் என்பதே. இவை இரண்டும் அசாதாரண பிறப்பு (ABNORMAL BIRTHS) என்று கூறலாம். இதே விதமாகவே பைபிளில் லூக்காவிலும் கூறப்பட்டுள்ளது. எனவே ஈஸா (அலை) வின் பிறப்பு எஹ்யா (அலை) வின் பிறப்பினை விட எந்தவிதத்திலும் உயர்ந்தது இல்லை. அவ்விரண்டையும் ஒப்பு நோக்கி ஆராயும் யாரும் இக்கருத்தினை ஏற்று கொள்வார். 

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கருத்தின் படியே மருத்துவ துறையை சார்ந்த, உடலியியல் துறையை சார்ந்த விஞ்ஞான கருத்துக்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, டாக்டர் திம்மே அவர்கள் சில பெண்களுக்கு அடி வயிற்றில் அல்லது தொடை எலும்பு மூட்டும் முள்ளந்தண்டின் அடிப்பாகமும் இணையும் கவிட்டு பகுதியில் ஒரு வகை கட்டி வளருவது உண்டு என்றும், அச்சத்தை கட்டியுள்ள பெண்கள் ஆண் தொடர்பின்றி குழந்தை பிறக்கூடிய வாய்ப்பு இருப்பதனையும் எடுத்து கூறுகிறார்.. அந்த கட்டிக்கு மருத்துவ பெயர் ARRHENO BLASTOMA என்பதாகும். இந்த கட்டியில் ஆணின் விந்தில் காணப்படும் உயிரணுக்கள் தங்கி இருக்கும். தற்செயலாக அந்த விந்து உயிரணுக்களின் உயிரியக்கம் பெற்றதாய் இருந்து அந்த பெண்ணின் சொந்த சினை அல்லது முட்டையுடன் (OVUM) ஏதோ வகையில் ஒட்டிக் கொள்ள நேர்ந்து விட்டால் போதும். அப்பொழுது கருவாய் உயிர் பெற்றுவிடும். இது விஞ்ஞான முறையில் நடவாத ஒன்றன்று. டாக்டர் திம்மே அவர்கள் ஐரோப்பாவில் இருபது பெண்கலுக்கு ARRHENO BLASTOMA என்றழைக்கப்படும் கட்டிகள் அவர்களின் அடி வயிற்றில் இருந்துள்ளதை ஆதாரப் பூர்வமாய் கண்டறியப்பட்டுள்ளதாய் தெரிவிக்கிறார். இவ்வகை கட்டியை கொண்டுள்ள கண்ணிகள் ஆண் தொடர்பின்றி சுயமாக கருக் கொள்ள முடியும் என்று அவர் நிரூபித்துள்ளார். (ஆதாரம்: புகழ் வாய்ந்த அமேரிக்க மருத்துவ பத்திரிக்கையான "American Medical Journal")

இப்படி கருக்கொண்ட சம்பவங்களை பதிவு செய்து வைத்துள்ளனர். பல்வேறு சம்பவங்கள் ஆண் தொடர்பின்றி சுயமாக கருக் கொண்டதை கூறுகின்றன. (ஆதாரம்: Anamalies and Curiosities of Medicine. by George M. Goald. Am M.D. Published by W.B.Sanders & Co; London)

Dr. Helan sparvey கூறுகிறார்:

"மனிதர்களில் இவ்வாறான கன்னிப் பிரசவங்கள் இங்கும் அங்குமாக நிகழ்ந்தவண்ணமிருக்கிறது .ஆனால் கணவனோடு வாழ்க்கை நடத்தும் பெண்களிடம் இதுதான் என அறிய முடிவதில்லை .இவ்வகை பிரசவம் ஏற்பட்ட பெண்களில் சிலர் வெளியுலகிற்கு . அஞ்சி மறைத்து விடுகின்றனர். 16 லட்சம் பெண்களில் ஒருவருக்கு இதுபோன்ற பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது" 

(மாத்ருபூமி 9.11 .1955 | இந்தியன் எக்ஸ்பிரஸ் 10.11.1995) 

பர்லினைச் சேர்ந்த Dr.robert mayer அவர்கள் இது பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்கள் :

"ஆண் உயிரணுக்கள் (விந்தணு) அடங்கிய ஒரு டியூமர் அதாவது அரினோ ப்ளாஸ்டமோ (Arrheno Blastomo) எனப்படும் ஒரு கட்டி இயற்கையாகவே பெண்ணின் கர்பப்பையின் உட்புறம் வளர்ச்சியடைந்து அதுவே குழந்தையாக உருவாகிறது .கர்ப்பப் பையில் உருவாகும இவ்வகை டியூமர் (tumer ) ஆண் உயிரணுக்களின்றி தானாகவே உற்பத்தியாகும் வகையில் "பிளாஸ்டோ டெர்மிக் செல் ( plasto Dermic cell ) ) ஆல் அடங்கபெற்றது . "

(மாத்ருபூமி 16.2.1993)

 

மேலும் அறிந்து கொள்ள: 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.